110சிசி-ல் திறன் பெற்ற புத்தம் புதிய டாஸ் ஸ்கூட்டரை வெளியிடும் டிவிஎஸ்..!!

Written By:

டிவிஎஸ் நிறுவனம் அடுத்ததாக வெளியிடும் டாஸ் ஸ்கூட்டருக்கான சோதனை ஓட்டம் தற்போது தொடங்கியுள்ளது.

புதிய டாஸ் ஸ்கூட்டரை வெளியிடும் டிவிஎஸ் நிறுவனம்..!!

இந்தோனேஷியா உள்பட சில தென் கிழக்கு நாடுகளில் டிவிஎஸ் டாஸ் ஸ்கூட்டர் ஏற்கனவே விற்பனையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

கடந்தாண்டை போலவே பல புதிய தயாரிப்புகளை டிவிஎஸ் இந்தாண்டிலும் களமிறக்கவுள்ளது. அதன்படி 2018ல் டிவிஎஸின் முதல் வெளியீடாக டாஸ் என்ற புதிய ஸ்கூட்டர் மாடல் அறிமுகமாகலாம்.

புதிய டாஸ் ஸ்கூட்டரை வெளியிடும் டிவிஎஸ் நிறுவனம்..!!

2016ல் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவின் போது டாஸ் ஸ்கூட்டரை டிவிஎஸ் அறிமுகப்படுத்தியது. ஆனால் அது இந்தியாவில் விற்பனைக்கு வெளிவரவில்லை.

புதிய டாஸ் ஸ்கூட்டரை வெளியிடும் டிவிஎஸ் நிறுவனம்..!!

இந்தோனேஷியா உட்பட சில தென் கிழக்கு நாடுகளில் மட்டும் இந்த ஸ்கூட்டர் விற்பனையில் இருக்கும் என்று சொல்லப்பட்டது.

இந்நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு பிறகு முதன்முறையாக இந்த ஸ்கூட்டர் இந்திய சந்தைகளில் களம்காணவுள்ளது.

Trending On Drivespark:

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கார்கள் விபரம் வெளியானது!

சீனாவின் இந்த பறக்கும் காரை ஓட்ட விமானியும் தேவையில்லை... விமானிக்கான உரிமும் தேவையில்லை..!!

Recommended Video - Watch Now!
The Best Two Wheeler Brand In India Is Honda - DriveSpark
புதிய டாஸ் ஸ்கூட்டரை வெளியிடும் டிவிஎஸ் நிறுவனம்..!!

110சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர்-கூல்டு திறன் பெற்ற எஞ்சின் இந்த ஸ்கூட்டரில் உள்ளது. இதன்மூலம் 8.57 பிஎச்பி பவர் மற்றும் 8.3 என்.எம் டார்க் திறன் கிடைக்கும். டாஸ் ஸ்கூட்டரின் எஞ்சின் சிவிடி கியர்பாக்ஸுடன் கூட்டணி அமைத்துள்ளது.

புதிய டாஸ் ஸ்கூட்டரை வெளியிடும் டிவிஎஸ் நிறுவனம்..!!

டிரென்டிங் கிராஃபிக்ஸ், 14 இஞ்ச் வீல், ஸ்கூட்டரின் முன்பக்கத்தில் டெலஸ்கோபிக் அப்ஃபிரனட் மற்றும் பின்பகுதியில் சிங்கிள் ஷாக் அப்ஸபர்கள் சஸ்பென்ஷன் தேவைகளை பூர்த்தி செய்கின்றன.

புதிய டாஸ் ஸ்கூட்டரை வெளியிடும் டிவிஎஸ் நிறுவனம்..!!

டாஸ் ஸ்கூட்டரின் முன்பக்க சக்கரத்தில் 200 மிமீ டிஸ்க் பிரேக் செட் அப் உள்ளன. பின் சக்கரத்தில் 130 மிமீ டிரம் பிரேக் இருக்கிறது.

93 கிலோ எடை பெற்ற டாஸ் ஸ்கூட்டர், ஜூப்பிட்டர் மற்றும் ஸ்கூட்டி ஜெஸ்டில் 110 சிசி எஞ்சின் வரிசையில் இணைகிறது.

Trending On Drivespark:

சுஸுகி இன்ட்ரூடர் 150 பைக்கிற்கு ஆப்பு வைக்க புதிய அவென்ச்சர் 180 மாடலை வெளியிடும் பஜாஜ்..!!

கார் எஞ்சினை நீண்ட நேரம் ஐட்லிங்கில் விடுவதால் ஏற்படும் தீமைகள்!

புதிய டாஸ் ஸ்கூட்டரை வெளியிடும் டிவிஎஸ் நிறுவனம்..!!

2018ம் ஆண்டின் தொடக்க மூன்று மாத காலங்களில் டாஸ் ஸ்கூட்டரை டிவிஎஸ் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ரூ. 50,000 முதல் ரூ. 60,000 வரை இதற்கு விலை நிர்ணயம் செய்யப்படலாம்.

Trending DriveSpark YouTube Videos

Subscribe To DriveSpark Tamil YouTube Channel - Click Here

மேலும்... #டிவிஎஸ் #tvs
English summary
Read in Tamil: TVS Dazz Scooter Testing In India. Click for Details...

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark