தொழில்நுட்பத்தில் ஆஹா... வடிவமைப்பில் ஓஹோ; அசத்தலாக விற்பனைக்கு வந்த டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர்

Written By:

டிவிஎஸ் நிறுவனத்தின் புதிய டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர் ரூ. 58,790 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) விலையில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. இதுவரை டிவிஎஸ் நிறுவனம் தயாரித்த ஸ்கூட்டர்களிலேயே வலுவான தொழில்நுட்பங்கள், அசரடிக்கும் செயல்திறன் ஆகியவற்றை ஒருங்கே பெற்ற மாடலாக விற்பனைக்கு வந்துள்ளது என்டார்க் 125 ஸ்கூட்டர்.

டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்..!!

2016 ஆட்டோ எக்ஸ்போவின் போது என்டார்க் கான்செப்ட் ஸ்கூட்டரை டிவிஎஸ் காட்சிப்படுத்தியது. 18 முதல் 24 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான வாகனமாக இந்த ஸ்கூட்டரை அறிவித்தது டிவிஎஸ் .

டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்..!!

ஜெனரேஷன் எக்ஸ்-யை டார்கெட் கஸ்டமர்களாக குறிவைத்து விற்பனைக்கு வந்துள்ள என்டார்க் ஸ்கூட்டர், அசத்தலான தொழில்நுட்பங்களை பெற்றுள்ளது.

டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்..!!

தோற்றத்தில் ஸ்டைலாகவும், ஸ்கீக்காகவும் உள்ள இந்த ஸ்கூட்டர் இளைய தலைமுறையினர் விரும்பும் அனைத்து அம்சங்களையும் பெற்றிருப்பதாகவே உள்ளது.

டிவிஎஸ் கிராஃபைட் டிசைனில் இருந்து எல்லாவித வடிவமைப்பு அமைப்புகள் மற்றும் தோற்றத்தை என்டார்க் 125 ஸ்கூட்டர் தக்கவைத்துக்கொண்டுள்ளது.

Recommended Video - Watch Now!
Auto Rickshaw Explodes In Broad Daylight
டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்..!!

ஸ்கூட்டரின் பகல்நேர விளக்குகள், டெயில் விளக்குகள் ஆகியவை எல்.இ.டி திறனுடன் ஒளிரும். ஸ்போர்ட்டி திறன் கொண்ட அமைப்புகளும் இதிலுள்ளதால் ஸ்கூட்டர் ஓட்டும் போது அதனுடைய ஒளி அட்டகாசமாக இருக்கும்.

டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்..!!

சிங்கிள் சிலிண்டர் 125சிசி சிவிடிஐ ரெவ் எஞ்சின் இந்த ஸ்கூட்டரில் உள்ளது. இது ஏர்-கூல்டு தேர்வு பெற்றதாகும். மணிக்கு அதிகப்பட்சமாக 95 கி.மீ வேகத்தில் செல்லும் டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர், 9.27 பிஎச்பி பவர் மற்றும் 10.4 என்.எம் டார்க் திறனை வழங்கும்.

டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்..!!

ஆட்டோ சோக், அறிவார்ந்த இக்னிஷின் சிஸ்டம், கம்பேஷன் சேம்பர்களுக்கு ஏற்ற தனித்துவமான ஆயில் கூலிங் சிஸ்டம் ஆகியவை இந்த ஸ்கூட்டரில் முக்கிய அம்சங்களாக உள்ளன.

டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்..!!

ஸ்மார்ட் கனெக்ட் தொழில்நுட்பம் தான் டிவிஎஸ் என்டார்க் ஸ்கூட்டரின் ஆகச்சிறந்த தனித்துவ அமைப்பு. இதன்மூலம் ஸ்கூட்டரின் அனைத்து செயல்பாடுகளையும் ஆண்ட்ராய்டு மொபைல் மூலம் கட்டுபடுத்தலாம்.

டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்..!!

இந்த ஸ்கூட்டரில் உள்ள எல்.சி.டி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில் வேகம் பதிவு, லேப் டைம்பர்,ஃபோன் பேட்டரி டிஸ்பிளே, பார்க்கிங் செய்யப்பட்ட இடங்கள், சாராசரி வேகம் முதல் ஸ்போர்ட் மற்றும் ஸ்ட்ரீட் மோடுகளுக்கு செல்லும் தேர்வு உட்பட 55 தனித்துவம் பெற்ற அம்சங்கள் உள்ளன.

டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்..!!

ஒரு ப்ரீமியம் தர ஸ்கூட்டருக்கான அமைப்புகளின் அடிப்படையில் பார்கிங் பிரேக்குகள், டூயல்-சைடு ஹேண்டில் லாக், யுஎஸ்பி மொபைல் சார்ஜர் மற்றும் 22எல் அளவு கொண்ட ஸ்டோரேஜ் வசதி ஆகியவை டிவிஎஸ் என்டார்க்125 ஸ்கூட்டரில் உள்ளது.

டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்..!!

முற்றிலும் புதிய ஃபிரேமில் தயாராகியுள்ள என்டார்க் ஸ்கூட்டருக்கு புதிய சஸ்பென்ஷன் தேவைகளை பொருத்தியுள்ளது டிவிஎஸ்.

பெடல் டிஸ்க் பிரேக் அமைப்பை பெற்றுள்ள இதன் அலாய் சக்கரங்கள் மூலை, முடுக்குகள், சந்து பொந்துகளில் கூட சிறப்பான செயல்திறனை வழங்கும்.

டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்..!!

மேட் எல்லோ, மேட் க்ரீன், மேட் ரெட் மற்றும் மேட் வைட் ஆகிய நான்கு வித நிறங்களில் டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர் விற்பனைக்கு வரும்.

டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்..!!

எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு டிவிஎஸ் நிறுவனம் என்டார்க் 125 ஸ்கூட்டரை தயாரித்துள்ளது. இந்திய சந்தையில் இந்த ஸ்கூட்டர் ஹோண்டா கிராஸியாவிற்கு நேரெதிர் போட்டி என்று சொல்லலாம்.

டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்..!!

தற்போதைய ஸ்கூட்டர் விற்பனையில் ஹோண்டா கிராஸியா தான் வெளுத்து வாங்குகிறது. அது விற்பனைக்கு வந்த 2.5 மாதங்களில் இந்தியளவில் சுமார் 50,000 எண்ணிக்கையில் கிராஸியா ஸ்கூட்டர் விற்பனையாகியுள்ளது.

டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்..!!

நடைபெறவுள்ள ஆட்டோ எக்ஸ்போவில் அப்ரிலியா எஸ்.ஆர். 125 ஸ்கூட்டர் வெளியாகும் போது டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டருக்கான போட்டி மேலும் அதிகரிக்கும்.

ஸ்மார்ட் கனெக்ட், அசரடிக்கும் ஸ்டைலிங், எல்.சி.டி திரை தொழில்நுட்பம் என டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர் இந்திய ஸ்கூட்டர் சந்தைக்கு பல்வேறு சவால் தரும் வகையில் தயாராகியுள்ளது.

மேலும்... #டிவிஎஸ் #tvs
English summary
Read in Tamil: TVS NTorq 125 Launched At Rs 58,750; A Scooter With Smart Connectivity For The Smart Generation. Click for Details...
Story first published: Monday, February 5, 2018, 17:29 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark