புதிய டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டரில் புதிய வண்ணங்கள் அறிமுகம்!!

Written By:

புதிய டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டரில் கவர்ச்சிகரமான இரண்டு புதிய மெட்டாலிக் வண்ணங்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன.

 புதிய டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டரில் புதிய வண்ணங்கள் அறிமுகம்!!

ஸ்கூட்டர் மார்க்கெட்டில் கோலோய்ச்சி வரும் ஹோண்டா நிறுவனத்துக்கு அடுத்து, டிவிஎஸ் நிறுவனம் உள்ளது. இந்த நிலையில், ஹோண்டா க்ரேஸியா125 ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்த நிலையில், அதற்கு நேர் போட்டியாக டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டது.

 புதிய டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டரில் புதிய வண்ணங்கள் அறிமுகம்!!

டிசைன், எஞ்சின் உள்ளிட்டவை நேருக்கு நேர் ஹோண்டா க்ரேஸியாவுக்கு போட்டியாக இருக்கிறது டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர். இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில், இரண்டு புதிய வண்ண தேர்வுகளை என்டார்க் ஸ்கூட்டரில் டிவிஎஸ் அறிமுகம் செய்துள்ளது.

 புதிய டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டரில் புதிய வண்ணங்கள் அறிமுகம்!!

ஏற்கனவே விற்பனையில் இருக்கும் வண்ணங்கள் தவிர்த்து, கூடுதலாக மெட்டாலிக் புளூ மற்றும் மெட்டாலிக் க்ரே ஆகிய இரண்டு புதிய வண்ணங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. ஹெட்லைட் ஹவுசிங் மற்றும் முன்புற அப்ரான் பேனல்களில் கருப்பு வண்ணம் ஸ்டிக்கர் மூலமாக இரட்டை வண்ணக் கலவையாக காட்சி தருகிறது.

 புதிய டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டரில் புதிய வண்ணங்கள் அறிமுகம்!!

விலையில் எந்த வித்தியாசம் இல்லை. பிற வண்ணங்களின் விலையிலேயே இந்த புதிய வண்ண என்டார்க் 125 ஸ்கூட்டரும் விற்பனைக்கு கிடைக்கும். இளைய சமுதாயத்தினரை குறிவைத்து இந்த செயல்திறன் மிக்க ஸ்கூட்டரை டிவிஎஸ் மோட்டார்ஸ் அறிமுகம் செய்துள்ளது.

 புதிய டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டரில் புதிய வண்ணங்கள் அறிமுகம்!!

இந்த ஸ்கூட்டரில் இருக்கும் 125சிசி எஞ்சின் அதிகபட்சமாக 9.27 பிஎச்பி பவரையும், 10.4 என்எம் டார்க் திறனையும் வழங்கும். மணிக்கு 95 கிமீ வேகம் வரை செல்லும் திறனை பெற்றிருக்கிறது.

 புதிய டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டரில் புதிய வண்ணங்கள் அறிமுகம்!!

புதிய டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர் ஸ்மார்ட் கனெக்ட் என்ற விசேஷ தொழில்நுட்பத்துடன் வந்துள்ளது. இதன் எல்சிடி திரை கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரை புளூடூத் மூலமாக இணைத்துக் கொள்ள முடியும். இந்த வசதி மூலமாக போனில் அழைப்பவர் பெயர் விபரத்தையும், குறுந்தகவலையும் பார்க்க முடியும்.

 புதிய டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டரில் புதிய வண்ணங்கள் அறிமுகம்!!

இதுதவிர, இந்த இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரில் ஸ்மார்ட்போனின் பேட்டரி திறன், லேப் டைமர், வண்டி பார்க்கிங் செய்யப்பட்டு இருக்கும் இடத்தை கண்டறியும் வசதி, சராசரி வேகம் மற்றும் அதிகபட்சமாக தொடும் வேகம் குறித்த பதிவு, டிரைவிங் மோடுகள் குறித்த விபரம் உள்பட 55 விதமான வசதிகளை பெற முடியும்.

 புதிய டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டரில் புதிய வண்ணங்கள் அறிமுகம்!!

இந்த ஸ்கூட்டரில் எஞ்சினை சாவி இல்லாமலேயே ஆஃப் செய்யும் கில் சுவிட்சும் உண்டு. யுஎஸ்பி மொபைல் சார்ஜர், இருக்கையை திறக்காமலேயே பெட்ரோல் நிரப்புவதற்கான வெளிப்பக்கம் அமைந்த பெட்ரோல் டேங்க் மூடி, மேப் மை இந்தியா மூலமாக இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் திரையில் டர்ன்- பை - டரன் முறையில் வழிகாட்டும் வசதி உள்ளிட்ட அசத்தும் அம்சங்களை பெற்றிருக்கிறது.

 புதிய டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டரில் புதிய வண்ணங்கள் அறிமுகம்!!

புதிய டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர் ரூ.58,750 எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேட் ரெட், மேட் ஒயிட், மேட் யெல்லோ மற்றும் மேட் க்ரீன் ஆகிய வண்ணத் தேர்வுகளிலும் விற்பனைக்கு கிடைக்கிறது.

மேலும்... #டிவிஎஸ் #tvs
English summary
TVS Motors has introduced two new colour options for its sporty 125cc scooter, the NTorq 125. The sporty scooter is now available in Metallic Blue and Metallic Grey.
Story first published: Friday, April 13, 2018, 15:12 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark