டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்: அத்தனையும் அள்ளுது..!!

டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்: எங்கு தொடங்கி எங்கு முடிக்க... அத்தனையும் அள்ளுது..!!

By Azhagar

இந்தியாவில் 125சிசி திறன் பெற்ற ஸ்கூட்டர் விற்பனை விஸ்வரூபம் எடுத்து வருகிறது. அதில் புது வரவாக அறிமுகமாகியுள்ள மாடல் தான் டிவிஎஸ் என்டார்க் 125. ரூ. 58,750 (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையில் வெளிவந்துள்ள என்டார்க் ஸ்கூட்டர், இந்தியாவின் ஸ்கூட்டர் பயன்பாட்டிற்கான அடுத்த நிலை தயாரிப்பாக பார்க்கப்படுகிறது.

டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்..!!

டிவிஎஸ் நிறுவனம் 2014 ஆட்டோ எக்ஸ்போவில் கிராஃபைட் ஸ்கூட்டர் என்ற தயாரிப்பு நிலை கான்செப்ட் மாடலை பார்வைக்கு கொண்டு வந்தது. அதன் வழிமுறையில் தான் இந்த புதிய என்டார்க் ஸ்கூட்டர் தயாராகியுள்ளது.

டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்..!!

இளம் தலைமுறை வாடிக்கையாளர்களை குறிவைத்து சந்தைக்கு வந்துள்ள இந்த ஸ்கூட்டர் எளிதாக கையாளும் திறன், கம்ஃப்பொர்ட், பாதுகாப்பு மற்றும் எளிய திறன் ஆகியவற்றை உள்ளடக்கியதாக உள்ளது.

டிவிஎஸ் என்டார்க் 125 வடிவமைப்பு

டிவிஎஸ் என்டார்க் 125 வடிவமைப்பு

தாக்கும் திறன் கொண்ட ராணுவ விமானங்களின் தாக்கத்தில் டிவிஎஸ் என்டார்க் ஸ்கூட்டரை உருவாக்கியுள்ளது. ஆக்ரோஷமான தோற்றம், கூர்மையான வரிசைகள் மற்றும் முன்பகுதி நீட்டமான ஏப்ரன் போன்ற அம்சங்கள் அதன் தாக்கத்தை நமக்கு பார்க்கும் போது உணர்த்துகின்றன.

டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்..!!

பந்தயத்தில் பங்கேற்கும் வீரன் போல இதற்கான சிறப்பம்சங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக ஸ்கூட்டரின் ஏரோடைனமிக் அம்சம் வலுவூட்டப்பட்டுள்ளது.

டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்..!!

கிராஃபைட் ஸ்கூட்டர் கான்செப்ட்டை பின்பற்றி தான் என்டார்க் தயாரிக்கப்பட்டு இருந்தாலும், இதன் தனித்துவம் பெற்ற எல்.இ.டி பகல்நேர விளக்குகள், சிவப்பு நிற வேலைபாடுகள் கொண்ட இருக்கை, ஃபாக்ஸ் கார்பன் ஃப்பைபர் பேனல்கள் போன்றவை கவர்ந்திழுக்கின்றன.

டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்..!!

டிவிஎஸ் என்டார்க் மாடலுக்கே உரித்தான எல்.இ.டி டெயில் விளக்குகள் இதில் பொருத்தப்பட்டுள்ளன. இந்த அமைப்பு முற்றிலும் என்டார்க் மாடலின் பின்புற தோற்றத்திற்கு அருமையாக பொருந்தி போகிறது.

டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்..!!

ஒரு ஜெட் ரக தாக்கும் விமானங்களில் இருப்பது போன்ற இதனுடைய எக்ஸாஸ்ட் சிஸ்டம் அமைக்கப்பட்டுள்ளது. இது என்டார்க்கிற்கு ஒரு தனித்துவத்தை தருகிறது.

ஸ்போர்ட் அம்சத்திற்கு வேண்டி ஸ்டெப்பி மஃப்ளர், பேஸ் பீட் போன்றவை வழங்கப்பட்டுள்ளன. இது ஸ்கூட்டர் இயக்கப்படும் போது உருவாகும் ஒலியை சிறப்பாக கேட்கச்செய்யும்.

டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்..!!

சாராசரியான மேட் ஃபினிஷ் கொண்டு வெளிவரும் இந்த ஸ்கூட்டர், இதனுடைய டிசைன் மற்றும் நிற தேர்வுகளின் அம்சங்களால் மிகவும் இளமையாக காட்சியளிக்கிறது.

டிவிஎஸ் என்டார்க் 125 எஞ்சின்

டிவிஎஸ் என்டார்க் 125 எஞ்சின்

125சிசி சிவிடிஐ ரெவ் யூனிட் கொண்ட இதனுடைய எஞ்சின் ஏர்-கூல்டு சிங்கிள் சிலிண்டரை பெற்றுள்ளது. இதன்மூலம் அதிகப்பட்சமாக 9.27 பிஎச்பி பவர் மற்றும் 10.4 என்.எம் டார்க் திறன் கிடைக்கும்.

டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்..!!

சிறப்பாக முடுக்கு ஆற்றலை பெற்றுள்ள இந்த ஸ்கூட்டர் செயல்திறனிலும் கலக்குகிறது. மேலும் இதனுடைய டாப் ஸ்பீடு மணிக்கு 95 கி.மீ. டிரைவ்ஸ்பார்க் நடத்திய சோதனை ஓட்டத்தில் டிவிஎஸ் என்டார்க் மணிக்கு 99 கி.மீ டாப் ஸ்பீடை வழங்கியது.

டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்..!!

டிவிஎஸின் என்டார்க் 125 ஸ்கூட்டரின் ஆட்டோ சோக், நுண்ணறிவு திறன் பெற்ற இக்னிஷன் சிஸ்டம், ஸ்பிளிட் டைப் இன்டேக் டிசைன், ஏர் ஃபிலிடர் மற்றும் கம்பஷன் சேம்பருக்கான ஆயில் கூலிங் சிஸ்டம் போன்றவை இதனுடைய செயல்திறன் தேவைக்காக இடம்பெற்றுள்ளது.

இயக்கம் & கையாளும் திறன்

இயக்கம் & கையாளும் திறன்

என்டார்க்கின் குவிக் ஸார்ட் பட்டன் சிறப்பான இயக்கத்தை தருகிறது. அதனுடைய செயல்பாடு மிகவும் துரிதமாக உள்ளது. இதனுடைய எக்ஸாஸ்ட் சிஸ்டமும் சிறப்பான கட்டமைப்புகளை பெற்றுள்ளது.

துவக்க நிலையிலிருந்து 60 கி.மீ அடைய இதற்கு 7 விநாடிகளே போதுமானதாக உள்ளது. அதேபோல நிறுத்த அமைப்பு தேவைக்காக முன்பக்க சக்கரத்தில் பெடல் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ளது.

டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்..!!

புத்தம் புதிய ஃபிரேமில் தயாராகியுள்ளதால் டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டரின் சஸ்பென்ஷன் சிறப்பாக செயலாற்றுகிறது. இதனுடைய டைனமிக் ரைடிங் தேவை வேகமாக செல்லும் போது, கார்னர் போகும் போது சிறப்பாக உள்ளது.

ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி

ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி

இந்தியாவில் தயாரான ஸ்கூட்டர்களிலேயே ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டியை பெற்ற முதல் ஸ்கூட்டர் என்றால் தான் டிவிஎஸ் என்டார்க் தான். என்டார்க்கிற்கு உரிய பிரத்யேக செயலியை டிவிஎஸ் உருவாக்கியுள்ளது. ஸ்மார்ட்கனெக்ட்டிவெட்டி தேவையை பெற்ற அந்த செயலி ஸ்மார்ட்ஃபோன்களோடு நாம் இணைத்துக்கொள்ளலாம்.

டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்..!!

இதன் காரணமாக கைப்பேசிக்கு வரும் அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்களை, ஸ்கூட்டரின் திரையில் தோன்றும். ரைடர் இயக்கத்தில் இருந்தால், அந்த தகவலை காலருக்கு வழங்கும்.

எல்.சி.டி திரை

எல்.சி.டி திரை

மொத்தமாக 55 தனித்துவமான அம்சங்களை டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டரின் எல்.சி.டி திரை பெற்றுள்ளது. அந்த அம்சங்களில் வேகத்தை பதிவு செய்வது, லேப் டைமர், கைப்பேசியின் பேட்டரி குறியீடு, பார்க்கிங் செய்யப்பட்ட இடம், ரைடிங் மோடுகள் போன்ற தேர்வுகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்..!!

நேவிகேஷன், மேப் உள்ளிட்ட அம்சங்களை டிவிஎஸ் என்டார்க் ஸ்கூட்டருக்கான மேப்-மை-இந்தியா என்ற செயலி மூலம் பயன்படுத்தலாம். ஒருமுறை நேவிகேஷன் இயங்கத்தொடங்கினால் எல்.சி.டி திரையில் அனைத்து தகவல்களும் கிடைக்கப்பெறும்.

டிவிஎஸ் என்டார்க் 125 அம்சங்கள்

டிவிஎஸ் என்டார்க் 125 அம்சங்கள்

இதுதவிர, எரிவாயுவை சேமித்து வைக்கும் கேப், எஞ்சின் கில் ஸ்விட்ச், முகப்பு விளக்கின் இயக்க ஸ்விட்ச், பார்க்கிங் பிரேக்குகள், டூயல்-சைடு ஹேண்டில் லாக், யுஎஸ்பி மொபைல் சார்ஜர் மற்றும் அதிக இடம் பெற்ற இருக்கை ஸ்டோரேஜ் (22 லிட்டர்) போன்ற ப்ரீமியம் தர அம்சங்களும் இந்த ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ளன.

நிற தேர்வுகள்

நிற தேர்வுகள்

இது இளம் தலைமுறையினருக்கான தயாரிப்பு என்பதால், என்டார்க் ஸ்கூட்டரை மேட் ஃப்னிஷ் உருவாக்கத்தோடு டிவிஎஸ் வெளியிட்டுள்ளது. அதற்கு ஏற்ற மஞ்சள், சிவப்பு, பச்சை மற்றும் வெள்ளை ஷேடு நிற தேர்வுகளில் இந்த ஸ்கூட்டர் கிடைக்கும்.

டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்..!!

தனித்துவமான வடிவமைப்பு, தொழில்நுட்ப அம்சங்கள், ப்ளூடூத் இன்டர்ஃபேஸ், மொபைல் யுஎஸ்பி சார்ஜிங் போர்ட், பெடல் டிஸ்க் பிரேக்-அப் ஃபிரென்ட் உள்ளிட்ட சமகால கட்டத்திற்கு ஏற்றவாறான அம்சங்களோடு என்டார்க் ஸ்கூட்டரை டிவிஎஸ் சிறப்பாக தயாரித்துள்ளது.

டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்..!!

எதிர்கால கட்டமைப்பிற்கு ஏற்றவாறான அனைத்து அம்சங்களும் பெரும்பாலும் என்டார்க் ஸ்கூட்டரில் டிவிஎஸ் கவர் செய்து விட்டது. இந்தியாவில் 125சிசி செக்மென்டில் சிறந்த போட்டியாளராக தன்னை சரியாக நிலை நிறுத்திக்கொண்டுள்ளது டிவிஎஸ் என்டார்க் 125.

டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்..!!

இருந்தாலும் தற்போதைய இந்தியாவில் ஸ்கூட்டர் விற்பனையில் 125 செக்மென்டில் ஹோண்டா கிராஸியா தான் ராஜா. விற்பனைக்கு வந்த 2.5 மாதங்களில் இந்தியளவில் சுமார் 50,000 கிராஸியா ஸ்கூட்டர்கள் விற்பனையாகியுள்ளன.

டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்..!!

தொடர்ந்து அப்ரிலியா எஸ்.ஆர் 125 ஸ்கூட்டர் மாடலும் இந்த செக்மென்டில் முன்னிலை வகிக்கிறது. பிறகு ஹீரோவின் டூயட் 125 மற்றும் மேஸ்ட்ரோ 125 ஸ்கூட்டர்களையும் இந்த செக்மென்டில் கருத்தில் கொள்ள வேண்டும்.

டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்..!!

இந்தியாவின் 125 செக்மென்ட் ஸ்கூட்டர் விற்பனையில் ஹோண்டா தொடங்கி ஹீரோ வரை பல்வேறு நிறுவனத்தின் தயாரிப்புகள் வரிசைக்கட்டி நிற்கின்றன. இவற்றுக்கு எந்த விதத்திலும் சலிக்காத வகையில் டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டரும் தன்னை நிலைநிறுத்தும் என்று நம்பலாம்

Most Read Articles
மேலும்... #டிவிஎஸ் #tvs motor
English summary
Read in Tamil: TVS NTorq 125 Review A Feature-Packed Sporty Scooter For The Masses. Click for Details...
Story first published: Saturday, February 17, 2018, 13:08 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X