டிவிஎஸ் ஸெப்லின் க்ரூஸர் மோட்டார்சைக்கிள் கான்செப்ட் அறிமுகம்: படங்களுடன் தகவல்கள்!

டிவிஎஸ் ஸெப்லின் கான்செப்ட் பைக் மாடல் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கின் சிறப்பம்சங்களை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

டிவிஎஸ் நிறுவனத்தின் முதல் க்ரூஸர் ரக மோட்டார்சைக்கிள் கான்செப்ட் கிரேட்டர் நொய்டாவில் நடந்து வரும் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிளின் பிரத்யேக படங்கள், தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

டிவிஎஸ் ஸெப்லின் க்ரூஸர் பைக் கான்செப்ட் அறிமுகம்!

டிவிஎஸ் ஸெப்லின் என்ற பெயரில் இந்த புதிய க்ரூஸர் ரக மோட்டார்சைக்கிளை பொது பார்வைக்கு கொண்டு வந்துள்ளது டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம். பாரம்பரிய டிசைன் தாத்பரியங்களையும், நவீன கால டிசைன் தாத்பரியங்களையும் மனதில் வைத்து இந்த மோட்டார்சைக்கிள் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

டிவிஎஸ் ஸெப்லின் க்ரூஸர் பைக் கான்செப்ட் அறிமுகம்!

டிவிஎஸ் ஸெப்லின் மோட்டார்சைக்கிளில் 220சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. மேலும், டிவிஎஸ் நிறுவனம் காப்புரிமை பெற்றிருக்கும் ஸ்டார்ட்டர் ஜெனரேட்டருடன் இந்த எஞ்சின் இணைந்து செயல்படும் தொழில்நுட்பத்தை பெற்றிருக்கிறது. ஆரம்ப நிலையில் எஞ்சினுடன் சேர்ந்து அதிக சக்தியை வெளிப்படுத்துவதால் உடனடி பிக்கப் கிடைக்க வகை செய்கிறது.

டிவிஎஸ் ஸெப்லின் க்ரூஸர் பைக் கான்செப்ட் அறிமுகம்!

இதுமட்டுமல்லாமல், டிவிஎஸ் ஸெப்லின் க்ரூஸர் மோட்டார்சைக்கிள் கான்செப்ட்டில் 1200 வாட் திறனுடைய ஆற்றல் இழப்பை மின் ஆற்றலாக மாற்றி பேட்டரியில் சேமிக்கும் வசதியையும் ரீஜெனரேட்டிவ் அசிஸ்ட் மோட்டாரும் பொருத்தப்பட்டு இருக்கிறது.

டிவிஎஸ் ஸெப்லின் க்ரூஸர் பைக் கான்செப்ட் அறிமுகம்!

இந்த மோட்டார் 48 லித்தியம் அயான் பேட்டரியுடன் இணைக்கப்பட்டு இருக்கிறது. தேவைப்படும் சமயங்களில் இந்த மின் மோட்டார் மூலமாக 20 சதவீதம் வரை கூடுதல் டார்க் திறன் வழங்கப்படுவதால், மோட்டார்சைக்கிளின் செயல்திறன் மிகச் சிறப்பாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Recommended Video

New Maruti Swift Launch: Price; Mileage; Specifications; Features; Changes
டிவிஎஸ் ஸெப்லின் க்ரூஸர் பைக் கான்செப்ட் அறிமுகம்!

நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ள விரும்புவோர் எதிர்பார்க்கும் அனைத்து அம்சங்களையும் இந்த புதிய மோட்டார்சைக்கிள் பெற்றிருக்கிறது. பெட்ரோல் டேங்க் பழுப்பு வண்ணத்திலும், அதில் கருப்பு வண்ண டிவிஎஸ் நிறுவனத்தின் குதிரை லோகோவும் பதிக்கப்பட்டு இருக்கிறது. முன்புறத்தில் இருக்கும் அப்சைடு டவுன் ஃபோர்க்குகள் தங்க வண்ணத்தில் தனித்துவம் பெற்றிருக்கிறது.

டிவிஎஸ் ஸெப்லின் க்ரூஸர் பைக் கான்செப்ட் அறிமுகம்!

ஓட்டுனருக்கு மிக சவுகரியமான இருக்கை அமைப்பும், ஹேண்டில்பாரும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதனால், நீண்ட தூர பயணங்களின்போது சோர்வு ஏற்படுவது தவிர்க்கப்படும்.பின்புற அமைப்பு ஹார்லி டேவிட்சன் பைக்குகளை நினைவூட்டும் விதத்தில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

டிவிஎஸ் ஸெப்லின் க்ரூஸர் பைக் கான்செப்ட் அறிமுகம்!

புதிய டிவிஎஸ் ஸெப்லின் மோட்டார்சைக்கிள் கான்செப்ட்டில் எல்இடி ஹெட்லைட், ஸ்மார்ட் பயோ - கீ, எலக்ட்ரானிக் ஸ்பீடோமீட்டர் மற்றும் ஆன்லைன் தொடர்பு வசதிகளை பெற்றிருக்கிறது.

டிவிஎஸ் ஸெப்லின் க்ரூஸர் பைக் கான்செப்ட் அறிமுகம்!

புதிய டிவிஎஸ் ஸெப்லின் மோட்டார்சைக்கிளில் 41மிமீ அப்சைடு டவுன் ஃபோர்க்குகள் முன்புறத்திலும், மோனோ ஷாக் அப்சார்பர் பின்புறத்திலும் இருக்கின்றன. இந்த மோட்டார்சைக்கிளில் டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், அதாவது இரண்டு சக்கரங்களுக்குமான ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் சிறப்பான பாதுகாப்பு அம்சம்.

டிவிஎஸ் ஸெப்லின் க்ரூஸர் பைக் கான்செப்ட் அறிமுகம்!

இந்த மோட்டார்சைக்கிள் பெல்ட் டிரைவ் சிஸ்டத்தில் இயங்குவதால் அதிர்வுகள் குறைவான சுகமான ஓட்டுதல் உணர்வை வழங்கும்.

டிவிஎஸ் ஸெப்லின் க்ரூஸர் பைக் கான்செப்ட் அறிமுகம்!

இந்த புதிய டிவிஎஸ் ஸெப்லின் க்ரூஸர் மோட்டார்சைக்கிள் கான்செப்ட்டை தயாரிப்பு நிலைக்கு மேம்படுத்துவது குறித்து டிவிஎஸ் இதுவரை எந்த தகவலையும் வெளியிடவில்லை. ஆட்டோ எக்ஸ்போவிற்கு வரும் பார்வையாளர்களிடம் இந்த கான்செப்ட்டிற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து இறுதி முடிவு எடுக்கும்.

Most Read Articles
English summary
Auto Expo 2018: TVS Zeppelin cruiser concept unveiled. TVS Motor Company has unveiled its first cruiser motorcycle concept named as Zeppelin at the 2018 Auto Expo.
Story first published: Thursday, February 8, 2018, 11:48 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X