டுவன்டி டூ மோட்டார்ஸின் புதிய 'ஃப்ளோ' மின்சார ஸ்கூட்டர் ரூ.74, 740 விலையில் விற்பனைக்கு அறிமுகம்..!!

Written By:

2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் மின்சார வாகன பிரிவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த ஃப்ளோ ஸ்கூட்டர், ரூ. 74,740 (எக்ஸ்-ஷோரூம்) விலையில் விற்பனைக்கு அறிமுகமானது.

ஸ்மார்ட் அம்சங்களுடன் ஃபிளோ மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்..!!

ஆரம்ப நிலை நிறுவனமாக உள்ள டுவன்டி டூ மோட்டார்ஸ் தயாரித்துள்ள மின்சார ஸ்கூட்டர் தான் ஃபிளோ. இதற்கான முன்பதிவு தற்போது தொங்கியுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

ஸ்மார்ட் அம்சங்களுடன் ஃபிளோ மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்..!!

செயற்கை நுண்ணறிவு மற்றும் கிளவுட் தொழில்நுட்பத்தை பெற்றுள்ள இந்தியாவின் முதல் மின்சார ஸ்கூட்டர் 'ஃபிளோ' என்று தெரிவித்துள்ளது டுவன்டி டூ மோட்டார்ஸ்.

ஸ்மார்ட் அம்சங்களுடன் ஃபிளோ மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்..!!

டிசி செயல்பாட்டில் இயங்கும் இந்த ஸ்கூட்டரின் மோட்டாரை பிரபல பாஷ் நிறுவனம் தயாரித்துள்ளது. 2.1 கிலோ வால்ட் பெற்ற பேட்டரி கொண்டுள்ள ஃபிளோ ஸ்கூட்டர் 90 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தும்.

ஸ்மார்ட் அம்சங்களுடன் ஃபிளோ மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்..!!

ஆட்டோ எக்ஸ்போவில் நடைபெற்ற அறிமுகவிழாவில் பேசிய டுவன்டி டூ நிறுவனத்தின் அதிகாரிகள், ஃபிளோ மின்சார ஸ்கூட்டர் மணிக்கு 60 கி.மீ வேகத்தில் செல்லும் என்று தெரிவித்தனர்.

Recommended Video - Watch Now!
New Maruti Swift Launch: Price; Mileage; Specifications; Features; Changes
ஸ்மார்ட் அம்சங்களுடன் ஃபிளோ மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்..!!

ஐந்து மணிநேரம் சார்ஜ் செய்தாலே போதும், ஃபிளோ ஸ்கூட்டரின் பேட்டரி முழுமையாக சார்ஜ் ஆகி விடும். ஒரு பேட்டரி மூலம் சுமார் 80 கி.மீ வரை இதில் பயணம் செய்யலாம்.

ஸ்மார்ட் அம்சங்களுடன் ஃபிளோ மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்..!!

கூடுதல் பயணம் செய்ய வேண்டும் என்றால், தேவைக்கும் தூரத்திற்கும் தகுந்தாற்போல பேட்டரிகளை ஸ்கூட்டரின் இணைக்க வேண்டும் என்று கூறுகிறது டுவன்டி டூ மோட்டார்ஸ்.

ஸ்மார்ட் அம்சங்களுடன் ஃபிளோ மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்..!!

ஒரு மணி நேரத்தில் 70 சதவீத சார்ஜிங்கை பெறும் ஃபிளோ ஸ்கூட்டர், மிகவும் விரைவாக சார்ஜாகக் கூடிய திறன் பெற்றது. ஸ்கூட்டரின் பேட்டரியை வையரை பயன்படுத்தாமலும் சார்ஜ் செய்யலாம்.

ஸ்மார்ட் அம்சங்களுடன் ஃபிளோ மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்..!!

ப்ரொஜக்டர் முகப்பு விளக்குகள் கொண்ட இந்த பைக்கில் எல்லா விளக்கு அமைப்புகளும் எல்.இ.டி திறன் பெற்றவை. ஸ்கூட்டர் இருக்கைக்கு அடியில் இருக்கும் ஸ்டோரேஜ் 25 லிட்டர் கொள்ளவு கொண்டது.

ஸ்மார்ட் அம்சங்களுடன் ஃபிளோ மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்..!!

அதாவது 2 ஹெல்மெட்டுகளை ஃபிளோ ஸ்கூட்டரின் ஸ்டோரேஜில் வைக்கும் அளவிற்கு இடவசதி இருக்கும். தவிர கைப்பேசிக்கான பிரத்யேக சார்ஜிங் போர்டுகளும் இந்த ஸ்கூட்டரில் உள்ளன.

ஸ்மார்ட் அம்சங்களுடன் ஃபிளோ மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்..!!

ஒருவேளை ஸ்கூட்டர் திருடப்பட்டால், ஜியோ-ஃபென்சிங் அம்சத்தை பயன்படுத்தி ஃபிளோ மாடலில் இடம்பெற்றிருக்கும் செயற்கை நுண்ணறிவு கொண்டு ஸ்கூட்டரை எளிதாக கண்டுபிடித்துவிட முடியும்.

ஸ்மார்ட் அம்சங்களுடன் ஃபிளோ மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்..!!

இதுதவிர டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட்

பேனல், ஸ்கூட்டரின் செயல்பாட்டிற்கான செயலி, க்ரூஸ் கண்ட்ரோம், டயர் பஞ்சரானால் அப்போது பயன்தரும் டிராக் மோடு மற்றும் ரிவர்ஸ் மோடு போன்ற பல கவனிக்கவைக்கும் தொழில்நுட்ப அம்சங்கள் ஃபிளோ ஸ்கூட்டரில் இடம்பெற்றுள்ளன.

ஸ்மார்ட் அம்சங்களுடன் ஃபிளோ மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்..!!

எதிர்கால வாகன தேவையை சரியாக புரிந்து வைத்து இந்த ஃபிளோ ஸ்கூட்டரை தயாரித்துள்ளது டுவன்டி டூ மோட்டார்ஸ்.

ஃபிளோ ஸ்கூட்டரின் ஒட்டுமொத்த அம்சத்திற்கு அறிவிக்கப்பட்டு ரூ. 74,740 விற்பனை விலை ஆகப்பொருத்தமாக உள்ளதாகவே வாகன ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

English summary
Read in Tamil: Twenty Two Motors Flow Launched At Rs 74,740 - Specs, Range, Features & Images. Click for Details...

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark