புதிய யுஎம் தோர் எலக்ட்ரிக் பைக் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்!

Written By:

க்ரூஸர் ரக பைக் தயாரிப்பில் புகழ்பெற்ற அமெரிக்காவை சேர்ந்த யுஎம் மோட்டார்சைக்கிள் நிறுவனம் புதிய மின்சார பைக் மாடலை டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்துள்ளது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய யுஎம் தோர் எலக்ட்ரிக் பைக் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்!

யுஎம் ரெனிகேட் தோர் பைக்கில் 30kW திறன் வாய்ந்த மின்சார மோட்டார் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த மின் மோட்டார் அதிகபட்சமாக 70 என்எம் டார்க் திறனை வழங்க வல்லது. 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

புதிய யுஎம் தோர் எலக்ட்ரிக் பைக் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்!

புதிய யுஎம் ரெனிகேட்ர தோர் பைக்கின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 270 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். வெறும் 40 நிமிடங்களில் இதன் பேட்டரி 80 சதவீதம் சார்ஜ் செய்துவிட முடியும்.

புதிய யுஎம் தோர் எலக்ட்ரிக் பைக் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்!

இந்த பைக் மணிக்கு 180 கிமீ வேகம் வரை செல்லும் திறன் வாய்ந்தது. இதனால், நகர்ப்புறம் மற்றும் நெடுஞ்சாலை பயன்பாட்டிற்கான சிறந்த மோட்டார்சைக்கிள் மாடலாக குறிப்பிட முடியும்.

புதிய யுஎம் தோர் எலக்ட்ரிக் பைக் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்!

புதிய யுஎம் ரெனிகேட் தோர் மின்சார பைக்கில் ஹைட்ராலிக் க்ளட்ச் மற்றும் லிக்யூடு கூல்டு மோட்டார் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிளில் மற்றொரு விசேஷம் என்னவெனில், ரிவர்ஸ் கியர் வசதியுடன் வந்துள்ளது

Recommended Video - Watch Now!
New Maruti Swift Launch: Price; Mileage; Specifications; Features; Changes
புதிய யுஎம் தோர் எலக்ட்ரிக் பைக் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்!

தோற்றத்தில் பிரம்மாண்டமான க்ரூஸர் ரக மோட்டார்சைக்கிள் போன்று இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிளின் பல பாகங்கள் க்ரோம் அலங்காரத்தில் ஜொலிக்கிறது. அகலமான ஹேண்டில்பார், தாழ்வான இருக்கை, முன்னோக்கிய ஃபுட் ரெஸ்ட் போன்றவை முக்கியமான அம்சங்கள். பெட்ரோல் டேங்கில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்டு இருக்கிறது.

புதிய யுஎம் தோர் எலக்ட்ரிக் பைக் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்!

முன்புறத்தில் 41மிமீ டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகள் கொண்ட சஸ்பென்ஷனும், பின்புறத்தில் இரண்டு ஷாக் அப்சார்பர்களும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

புதிய யுஎம் தோர் எலக்ட்ரிக் பைக் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்!

புதிய யுஎம் ரெனிகேட் தோர் பைக்கில் முன்புறத்தில் 280மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 240மிமீ டிஸ்க் பிரேக்கும் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக இடம்பெற்று இருக்கிறது.

புதிய யுஎம் தோர் எலக்ட்ரிக் பைக் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்!

புதிய யுஎம் ரெனிகேட் தோர் மோட்டார்சைக்கிள் ரூ.4.90 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்கும்.

புதிய யுஎம் தோர் எலக்ட்ரிக் பைக் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்!

நாடு முழுவதும் உள்ள யுஎம் மோட்டார்சைக்கிள் டீலர்களில், புதிய யுஎம் ரெனிகேட் தோர் மின்சார பைக்கிற்கான முன்பதிவு துவங்கப்பட்டுவிட்டது. இந்த மோட்டார்சைக்கிள் இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனை செய்யப்படும். அடுத்த ஓரிரு மாதங்களில் டெலிவிரி கொடுக்கும் பணிகள் துவங்கும்.

English summary
UM Motorcycles Renegade Thor launched in India at Auto Expo 2018. The UM Renegade Thor electric cruiser motorcycle is priced at Rs 4.9 lakh ex-showroom (Delhi). The Renegade Thor is the world's first electric cruiser and also the first electric offering from the stable of the American brand. The overall design of the Thor is similar to other UM cruisers.
Story first published: Thursday, February 8, 2018, 18:11 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark