யுஎம் ரெனிகேட் ட்யூட்டி எஸ் மற்றும் ட்யூட்டி ஏஸ் மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம்!

Written By:

கிரேட்டர் நொய்டாவில் நடந்து வரும் சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியில், யுஎம் ரெனிகேட் ட்யூட்டி எஸ் மற்றும் ட்யூட்டி ஏஸ் ஆகிய இரண்டு க்ரூஸர் ரக மோட்டார்சைக்கிள்கள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன.

புதிய யுஎம் ரெனிகேட் ட்யூட்டி மோட்டார்சைக்கிள் அறிமுகம்!

அமெரிக்காவை சேர்ந்த யுஎம் நிறுவனம் இந்தியாவில் ரெனிகேட் வரிசையிலான க்ரூஸர் பைக் மாடல்களை விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில், தற்போது ரெனிகேட் வரிசையில் இரண்டு புதிய மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

புதிய யுஎம் ரெனிகேட் ட்யூட்டி மோட்டார்சைக்கிள் அறிமுகம்!

இந்தியாவில் யுஎம் நிறுவனம் விற்பனை செய்து வரும் ரெனிகேட் ஸ்போர்ட் எஸ் வரிசை மாடல்களுக்கு குறைவான விலையில் இந்த புதிய ரெனிகேட் ட்யூட்டி எஸ் மற்றும் ட்யூட்டி ஏஸ் ஆகிய மாடல்கள் நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது.

புதிய யுஎம் ரெனிகேட் ட்யூட்டி மோட்டார்சைக்கிள் அறிமுகம்!

ரெனிகேட் ட்யூட்டி மோட்டார்சைக்கிள் மாடல்கள் சாதாரண சாலை மற்றும் ஆஃப்ரோடு செல்வதற்கு ஏற்ற அம்சங்களை பெற்றிருக்கின்றன. இந்த மோட்டார்சைக்கிள் மாடல்களில் 223சிசி ஆயில் கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 16 பிஎச்பி பவரையும், 17 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

புதிய யுஎம் ரெனிகேட் ட்யூட்டி மோட்டார்சைக்கிள் அறிமுகம்!

புதிய ரெனிகேட் ட்யூட்டி எஸ் மற்றும் ட்யூட்டி ஏஸ் மாடல்களில் எல்இடி ஹெட்லைட் முக்கிய அம்சம். அனலாக் மற்றும் மின்னணு திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் கொடுக்கப்பட்டடு இருக்கிறது.

Recommended Video - Watch Now!
New Maruti Swift Launch: Price; Mileage; Specifications; Features; Changes
புதிய யுஎம் ரெனிகேட் ட்யூட்டி மோட்டார்சைக்கிள் அறிமுகம்!

இந்த பைக்கில் முன்புறத்தில் 41மிமீ டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளுடன் கூடிய சஸ்பென்ஷனும், பின்புறத்தில் இரண்டு காயில் ஸ்பிரிங் சஸ்பென்ஷனும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

புதிய யுஎம் ரெனிகேட் ட்யூட்டி மோட்டார்சைக்கிள் அறிமுகம்!

புதிய யுஎம் ரெனிகேட் ட்யூட்டி மோட்டார்சைக்கிள் மாடல்களில் முன்புறத்தில் 120/80 ஆர்17 டயரும், பின்புறத்தில் 130/90 ஆர்15 டயரும் பொருத்தப்பட்டு இருக்கிறது. இரண்டு மோட்டார்சைக்கிள்களும் 1,360மிமீ வீல் பேஸும், 180மிமீ க்ரவுண்ட் க்ளியரன்ஸை பெற்றிருக்கின்றன.

புதிய யுஎம் ரெனிகேட் ட்யூட்டி மோட்டார்சைக்கிள் அறிமுகம்!

புதிய யுஎம் ரெனிகேட் ட்யூட்டி எஸ் மற்றும் ட்யூட்டி ஏஸ் ஆகிய இரண்டு மாடல்களையும் வேறுபடுத்துவது வெவ்வேறு வண்ணங்களில் வந்திருப்பதுதான். ரெனிகேட் ட்யூட்டி எஸ் மாடல் மிலிட்டரி க்ரீன் என்ற பச்சை வண்ணத்திலும், ட்யூட்டி ஏஸ் அடர் சாம்பல் வண்ணத்திலும் வந்துள்ளது.

புதிய யுஎம் ரெனிகேட் ட்யூட்டி மோட்டார்சைக்கிள் அறிமுகம்!

புதிய யுஎம் ரெனிகேட் ட்யூட்டி எஸ் மோட்டார்சைக்கிள் ரூ.1.10 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலிருந்து கிடைக்கும். பஜாஜ் அவென்ஜர் மற்றும் சுஸுகி இன்ட்ரூடெர் மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கு நேரடி போட்டியை தரும்.

English summary
UM Renegade Duty launched in India at Auto Expo 2018. Prices for the new UM Renegade Duty starts at Rs 1.10 lakh in India, ex-showroom (Delhi).
Story first published: Thursday, February 8, 2018, 16:14 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark