வெஸ்பாவின் புதிய எலெக்ட்ரிக்கா மின்சார ஸ்கூட்டர் 2018 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்..!!

Written By:

டெல்லி அருகே உள்ள நொய்டாவில் 2018 ஆட்டோ எக்ஸ்போ கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் மின்சார திறன் பெற்ற வெஸ்பா எலெக்ட்ரிக்கா இ-ஸ்கூட்டர் காட்சிப்படுத்தப்பட்டது.

வெஸ்பா எலெக்ட்ரிக்கா மின்சார ஸ்கூட்டர் எக்ஸ்போவில் அறிமுகம்

இத்தாலியை சேர்ந்த பியாஜியோ நிறுவனம் வெஸ்பா மாடலில் மின்சார திறன் பெற்ற புதிய எலெக்ட்ரிக்கா இ-ஸ்கூட்டரை தயாரித்து வருவது தெரிந்தது.

முதன்முதலாக இந்த ஸ்கூட்டரை 2017 இஐசிஎம்ஏ வாகன கண்காட்சியில் பியாஜியோ உலக பார்வைக்கு கொண்டு வந்தது.

வெஸ்பா எலெக்ட்ரிக்கா மின்சார ஸ்கூட்டர் எக்ஸ்போவில் அறிமுகம்

இதை தொடர்ந்து இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வரும் 2018 வாகன கண்காட்சியில் வெஸ்பா எலெக்ட்ரிக்கா இ-ஸ்கூட்டர் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் முதன்முதலாக மின்சார திறன் பெற்ற இருசக்கர வாகன மாடலை பியாஜியோ வெளியிடுவது இது தான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

வெஸ்பா எலெக்ட்ரிக்கா மின்சார ஸ்கூட்டர் எக்ஸ்போவில் அறிமுகம்

வெஸ்பா எலெக்ட்ரிக்கா ஸ்கூட்டரில் உள்ள மின்சார மோட்டார் 2.6 பிஎச்பி பவரை வழங்கும், இதனுடைய பீக் பவர் 5.2 பிஎச்பி.

4.2 கிலோ வால்ட் திறன் பெற்ற மின்சார மோட்டாரில் லித்தியம்-ஐயன் பேட்டரிகள் பொருத்தப்பட்டுள்ளன.

வெஸ்பா எலெக்ட்ரிக்கா மின்சார ஸ்கூட்டர் எக்ஸ்போவில் அறிமுகம்

வெஸ்பா எலெக்ட்ரிக்கா ஸ்கூட்டர் பேட்டரிகளை 1000 முறை சார்ஜ் செய்யலாம். 50சிசி திறன் கொடுக்கக்கூடிய ஸ்கூட்டருக்கான இணையான ஆற்றலை இந்த மின்சார ஸ்கூட்டர் வெளிப்படுத்தும் என பியாஜியோ உறுதி கூறுகிறது.

Recommended Video - Watch Now!
Under-Aged Rider Begs The Policewomen To Spare Him - DriveSpark
வெஸ்பா எலெக்ட்ரிக்கா மின்சார ஸ்கூட்டர் எக்ஸ்போவில் அறிமுகம்

இரண்டு வேரியன்டுகளில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஸ்கூட்டரின், சாதாரன வெர்ஷனின் ரைடிங் ரேஞ்ச் 100 கி.மீ. அதேபோல இதனுடய எலெக்ட்ரிக்கா எக்ஸ் மாடல் 200 கி.மீ ரைடிங் ரேஞ்சுடன் வந்துள்ளது.

வெஸ்பா எலெக்ட்ரிக்கா மின்சார ஸ்கூட்டர் எக்ஸ்போவில் அறிமுகம்

இதுதவிர இந்த ஸ்கூட்டர் மாடலில் ஈகோ மற்றும் பவர் என இருவித டிரைவிங் மோடுகள் உள்ளது. ஈகோ மோடில் வெஸ்பா எலெக்ட்ரிக்கா ஸ்கூட்டர் அதிகப்பட்சமாக மணிக்கு 30 கி.மீ வேகத்தில் செல்லும்.

வெஸ்பா எலெக்ட்ரிக்கா மின்சார ஸ்கூட்டர் எக்ஸ்போவில் அறிமுகம்

மற்றொரு பவர் மோடு என்ற டிரைவிங் தேர்வு அதிக முடுக்கு விசையை ஸ்கூட்டருக்கு வழங்கும். தவிர இந்த ஸ்கூட்டரின் ரிவர்ஸ் மோடு என்ற தேர்வையும் பியாஜியோ பொருத்தியுள்ளது.

வெஸ்பா எலெக்ட்ரிக்கா மின்சார ஸ்கூட்டர் எக்ஸ்போவில் அறிமுகம்

முற்றிலும் ரெட்ரோ ஸ்டைலில் உள்ள வெஸ்பா எலெக்ட்ரிக்கா ஸ்கூட்டரில் பல நவீன கட்டமைப்புகளும் இடம்பெற்றுள்ளன. ஒரு கிளாசிக் வடிவமைப்பு மற்றும் சமகால கட்டமைப்புகளை ஒருங்கே பெற்ற சிறந்த காம்போவாக இந்த ஸ்கூட்டர் உள்ளது.

வெஸ்பா எலெக்ட்ரிக்கா மின்சார ஸ்கூட்டர் எக்ஸ்போவில் அறிமுகம்

4.3 இஞ்ச் டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் குறிப்பிட்ட சில கனெக்டிவிட்டி தேர்வுகள் இதில் உள்ளது. எல்.இ.டி முகப்பு விளக்கு, இருக்கைக்கு அடியில் ஸ்டோரேஜ், யுஎஸ்பி சாக்கேட், 12 இஞ்ச் முன்பக்க சக்கரம், 11 இஞ்ச் ரியர் சக்கரம் போன்ற அம்சங்கள் வெஸ்பா எலெக்ட்ரிக்கா ஸ்கூட்டரில் கவனமீர்க்கிறது.

வெஸ்பா எலெக்ட்ரிக்கா மின்சார ஸ்கூட்டர் எக்ஸ்போவில் அறிமுகம்

பியாஜியோ நிறுவனம் இந்த ஸ்கூட்டரை இத்தாலியில் நேரடியாக தயாரிக்கவுள்ளது. 2018ம் ஆண்டு ஜூன் அல்லது ஜூலை மாதம் முதல் ஐரோப்பிய சந்தைகளில் இவை விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெஸ்பா எலெக்ட்ரிக்கா மின்சார ஸ்கூட்டர் எக்ஸ்போவில் அறிமுகம்

வெஸ்பா எலெக்ட்ரிக்கா மாடலை தவிர, பியாஜியோ அப்ரிலியா எஸ்.ஆர் 125 ஸ்கூட்டர் மாடலையும் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

இவை தவிர எஸ்.ஆர். 125 மாடலை தழுவி உருவாகும் ஸ்ட்ராம் 125 என்ற புதிய ஸ்கூட்டர் தயாரிக்கப்படும் தகவல்களையும் பியாஜியோ 2018 ஆட்டோ எக்ஸ்போவில் தெரிவித்துள்ளது.

வெஸ்பா எலெக்ட்ரிக்கா மின்சார ஸ்கூட்டர் எக்ஸ்போவில் அறிமுகம்

கிளாசிக் ரெட்ரோ-ஸ்டைல் மற்றும் நவீன மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களை ஒருங்கே பெற்ற சிறந்த கலவையாக வெஸ்பா எலெக்ட்ரிக்கா ஸ்கூட்டர் உள்ளது.

கான்செப்ட் மாடலாக காட்சிக்கு வந்துள்ள இந்த ஸ்கூட்டருக்கான தயாரிப்பு பணிகள் இத்தாலியில் விரைவில் தொடங்கும் என பியாஜியோ தெரிவித்துள்ளது.

வெஸ்பா எலெக்ட்ரிக்கா மின்சார ஸ்கூட்டர் எக்ஸ்போவில் அறிமுகம்

இந்தியாவில் மின்சார வாகன சந்தை பெரியளவில் உருவாகும் நிலை உள்ளது. இதன் காரணமாக 2019 அல்லது 2020ம் ஆண்டுகளில் வெஸ்பா எலெக்ட்ரிக்கா ஸ்கூட்டரை பியாஜியோ இந்தியாவில் வெளியிடலாம் என தெரிகிறது.

English summary
Read in Tamil: Vespa Elettrica E-Scooter Showcased - Specifications, Features & Images. Click for Details...
Story first published: Monday, February 12, 2018, 16:46 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark