கஃபே ரேஸர் ஸ்டைலில் அட்டகாசமாக மாற்றப்பட்ட யமஹா எஃப்இசட்!!

யமஹா எஃப்இசட் பைக்கை கஃபே ரேஸர் பாடி ஸ்டைலில் மாற்றி அசத்தி இருக்கிறது பெங்களூரை சேர்ந்த கியர் கியர் மோட்டார்சைக்கிள் நிறுவனம். பெட்ரோல் டேங்க், விசேஷ ஹெட்லைட், இருக்கை அமைப்பு ஆகியவை முக்கிய மாற்றங்க

By Saravana Rajan

பட்ஜெட் ஸ்போர்ட்ஸ் பைக் மார்க்கெட்டில் யமஹா எஃப்இசட் பைக் சிறந்த தேர்வாக விளங்குகிறது. ஸ்டைலான தோற்றம், செயல்திறன் மிக்க எஞ்சின் இளைஞர்களை சுண்டி இழுக்கும் விஷயங்கள். இந்தநிலையில், யமஹா எஃப்இசட் பைக்கை கஃபே ரேஸர் பாடி ஸ்டைலில் மாற்றி அசத்தி இருக்கிறது பெங்களூரை சேர்ந்த கியர் கியர் மோட்டார்சைக்கிள் நிறுவனம்.

கஃபே ரேஸர் ஸ்டைலில் அட்டகாசமாக மாற்றப்பட்ட யமஹா எஃப்இசட்!!

கஃபே ரேஸர் ஸ்டைலுக்கு மாற்றுவதற்காக இந்த பைக்கில் யமஹா ஆர்எக்ஸ்100 பைக்கின் பெட்ரோல் டேங்க் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. அதேபோன்று, விசேஷமாக தயாரிக்கப்பட்ட தட்டையான இருக்கையும் ஸ்க்ராம்ப்ளர் ஸ்டைலுக்காக பொருத்தப்பட்டு இருக்கிறது.

கஃபே ரேஸர் ஸ்டைலில் அட்டகாசமாக மாற்றப்பட்ட யமஹா எஃப்இசட்!!

பக்கவாட்டில் இருக்கும் பேனல்கள் அகற்றப்பட்டு, பைக்கின் உட்கூடு தெரியும் வகையில் மாற்றி இருக்கின்றனர். இருக்கையின் முடிவில் எல்இடி டெயில் லைட் பொருத்தி இருக்கின்றனர். இது மிகவும் கவர்ச்சியாகவும், நவீன பைக் மாடல் போன்றும் காட்சி தருகிறது.

கஃபே ரேஸர் ஸ்டைலில் அட்டகாசமாக மாற்றப்பட்ட யமஹா எஃப்இசட்!!

புகைப்போக்கி குழாயும் விசேஷமாக தயாரிக்கப்பட்டு பொருத்தப்பட்டு இருக்கிறது. பிரேக் சிஸ்டம், சஸ்பென்ஷன் ஆகியவை யமஹா எஃப்இசட் பைக்கில் இருப்பதுதான். மாற்றப்படவில்லை

கஃபே ரேஸர் ஸ்டைலில் அட்டகாசமாக மாற்றப்பட்ட யமஹா எஃப்இசட்!!

பெட்ரோல் டேங்கில் மஞ்சள் வண்ண பெயிண்ட் செய்யப்பட்டிருப்பது தோற்றத்திற்கு கவர்ச்சியை சேர்க்கிறது. முன்புறத்தில் வட்ட வடிவ ஹெட்லைட் பொருத்தப்பட்டு இருக்கிறது.

கஃபே ரேஸர் ஸ்டைலில் அட்டகாசமாக மாற்றப்பட்ட யமஹா எஃப்இசட்!!

ரேஸ் பைக் ஹேண்டில்பார் அடிப்படையில் உருவாக்கப்பட்ட விசேஷ ஹேண்டில்பாரும் இந்த பைக்கில் பொருத்தப்பட்டு இருக்கின்றன. மேலும், ஸ்போக்ஸ் சக்கரங்களும், டியூவல் பர்போஸ் டயர்களும் இந்த பைக்கின் அழகுக்கு அழகு சேர்க்கும் விஷயம்.

கஃபே ரேஸர் ஸ்டைலில் அட்டகாசமாக மாற்றப்பட்ட யமஹா எஃப்இசட்!!

எஞ்சினில் மாற்றங்கள் இல்லை. யமஹா எஃப்இசட் பைக்கில் 153சிசி எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 14 பிஎஸ் பவரையும், 13.6 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது.

கஃபே ரேஸர் ஸ்டைலில் அட்டகாசமாக மாற்றப்பட்ட யமஹா எஃப்இசட்!!

இந்த பைக் குறித்த கூடுதல் விபரங்களுக்கு இந்திரா நகர் 80 அடி சாலையில் உள்ள கியர் கியர் நிறுவனத்தை 9886894644 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

Image Source: Gear Gear Motorcycles

Most Read Articles
English summary
Yamaha FZ Modified Into A Cafe Racer Aesthetics.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X