பின்புற டிஸ்க் பிரேக்குடன் யமஹா எஃப்.இசட்- எஸ் எஃப் 1 பைக் அறிமுகம்..!!

Written By:

பின்புற சக்கரத்தில் டிஸ்க் பிரேக் கொண்ட எஃப்.இசட்-எஸ் எஃப் 1 பைக்கை யமஹா நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

புதிய அம்சத்துடன் வெளியான யமஹா எஃப்இசட்- எஸ் எஃப் 1 பைக்

ரூ. 86,042 (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையில் வெளிவந்துள்ள இந்த பைக்கின் ரியர் பகுதியில் 220 மி.மீ ஹைட்ராலிக் ஒற்றை டிஸ்க் பிரேக் உள்ளது.

புதிய அம்சத்துடன் வெளியான யமஹா எஃப்இசட்- எஸ் எஃப் 1 பைக்

அதேபோல யமஹா நிறுவனம் எஃப்.இசட்-எஸ் எஃப் 1 மாடலின் முன்புற சக்கரத்தில் 282 மிமீ டிஸ்க் பிரேக் பொருத்தியுள்ளது.

புதிய அம்சத்துடன் வெளியான யமஹா எஃப்இசட்- எஸ் எஃப் 1 பைக்

பிரேக் மாற்றங்கள் மட்டுமின்றி, தற்போதைய மாடலிருக்கும் 5 ஸ்போக் அலாய் சக்கரங்களுக்கு பதிலாக புதிய எஃப்.இசட்-எஸ் எஃப் 1 பைக்கில் 10 ஸ்போக் அலாய் சக்கரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

புதிய அம்சத்துடன் வெளியான யமஹா எஃப்இசட்- எஸ் எஃப் 1 பைக்

மேற்கூறிய இந்த மாற்றங்களை தவிர எஃப்.இசட்-எஸ் எஃப் 1 பைக்கை புதிய அர்மடா ப்ளூ நிறத்திலும் யமஹா வெளியிடுகிறது.

தோற்றப்பொலிவு மற்றும் பைக்கின் செயல்பாட்டை தவிர இந்த பைக்கின் செயல்திறனில் எந்தவித மாற்றங்களும் செய்யப்படவில்லை.

புதிய அம்சத்துடன் வெளியான யமஹா எஃப்இசட்- எஸ் எஃப் 1 பைக்

149சிசி திறன், ஏர் கூல்டு தொழில்நுட்பம் பெற்ற யமஹா எஃப்.இசட்-எஸ் எஃப் 1 பைக்கின் எஞ்சின் அதிகப்பட்சமாக 12.9 பிஎச்பி பவர் மற்றும் 12.8 என்.எம் டார்க் திறன் கிடைக்கும். இதில் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

புதிய அம்சத்துடன் வெளியான யமஹா எஃப்இசட்- எஸ் எஃப் 1 பைக்

எஃப்.இசட் சிரீஸ் பைக்கின் தொடக்க காலம் இந்தியாவில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு தொடங்குகிறது. இன்றளவிலும் பல பைக் ஆர்வலர்கள் அதிகம் விரும்பும் மாடலாக யமஹாவின் எஃப் சிரீஸ் பைக்குகள் உள்ளன.

புதிய அம்சத்துடன் வெளியான யமஹா எஃப்இசட்- எஸ் எஃப் 1 பைக்

கடந்த நவம்பரில் யமஹா நிறுவனம் ஒய்.இசட்.எஃப் ஆர்3 பைக்கை சில காஸ்மெட்டிக் மாற்றங்களுடன் விற்பனைக்கு கொண்டு வந்தது.

புதிய அம்சத்துடன் வெளியான யமஹா எஃப்இசட்- எஸ் எஃப் 1 பைக்

அதன்படி, 6 ஸ்பீடு கியர்பாக்ஸை கொண்டுள்ள யமஹா ஒய்.இசட்.எஃப் ஆர்3 பைக், 321சிசி பேரலல் ட்வின் லிக்விட் கூல்டு எஞ்சினை பெற்றுள்ளது. இதன்மூலம் 41.3 பிஎச்பி பவர் மற்றும் 29.6 என்.எம் டார்க் திறனை இந்த பைக் வழங்கும்.

புதிய அம்சத்துடன் வெளியான யமஹா எஃப்இசட்- எஸ் எஃப் 1 பைக்

தற்போது வெளிவந்துள்ள யமஹா எஃப்.இசட் எஸ்1 பைக் இந்தியாவில் சுஸுகி ஜிக்சர், பஜாஜ் பல்சர் எஸ் 160, ஹோண்டா சிபி ஹார்னெட் 160ஆர் உள்ளிட்ட மாடல்களுக்கு செயல்திறன் மற்றும் விலையில் போட்டியாக அமையும்.

Trending DriveSpark YouTube Videos

Subscribe To DriveSpark Tamil YouTube Channel - Click Here

மேலும்... #யமஹா #yamaha
English summary
Read in Tamil: Yamaha FZ-S FI With Rear Disc Brake & Several Updates Launched In India; Priced At Rs 86,042. Click for Details...

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark