2018 ஆட்டோ எக்ஸ்போ: யமஹா ஒய்இசட்எஃப்- ஆர்15 வி3.0 பைக் ரூ. 1.25 லட்சம் விலையில் விற்பனைக்கு அறிமுகம்

Written By:

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் யமஹா நிறுவனத்தின் புதிய ஒய்.இசட்.எஃப்- ஆர்15 வி 3.0 மோட்டார் சைக்கிள் ரூ. 1.25 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது.

இந்தியாவின் 150சிசி செக்மென்டில் வெளிவந்துள்ள யமஹா ஒய்.இசட்.எஃப்- ஆர்15 வி 3.0 பைக்கில் புதிய எஞ்சின், புதிய கட்டமைப்பு என அனைத்தும் புதுமையாக அமைக்கப்பட்டுள்ளன.

ஆட்டோ எக்ஸ்போவில் புதிய யமஹா ஆர்15 பைக் விற்பனைக்கு அறிமுகம்

155 சிசி திறன் பெற்ற சிங்கிள் சிலிண்டர் லிக்விடு கூல்டு எஞ்சின் பெற்ற இந்த பைக் 19.03 பிஎச்பி பவர் மற்றும் 15 என்.எம் டார்க் திறனை வழங்கும்.

6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்ட யமஹா ஒய்.இசட்.எஃப்- ஆர்15 வி 3.0 பைக்கில் விவிஏ சிஸ்டம் உள்ளது. இது பைக்கின் செயல்திறனை மேலும் வலுப்படுத்தி தரும்.

ஆட்டோ எக்ஸ்போவில் புதிய யமஹா ஆர்15 பைக் விற்பனைக்கு அறிமுகம்

முன்னர் யமஹா வெளியிட்ட ஒய்.இசட்.எஃப்- ஆர்1 மற்றும் ஒய்.இசட்.எஃப்- ஆர்6 ஆகிய பைக்குகளை பின்பற்றி, இந்த புதிய ஆர்15 பைக்கிற்கான வடிவமைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஒய்.இசட்.எஃப்- ஆர்15 வி 3.0 பைக்கில் முன்பக்கத்தில் காற்று புகுதலை எளிதாகக்கூடிய அம்சம் உள்ளது. மேலும் இந்த பைக்கின் முகப்பு விளக்கு புதிய டிசைனிங்கில் காட்சியளிக்கிறது.

ஆட்டோ எக்ஸ்போவில் புதிய யமஹா ஆர்15 பைக் விற்பனைக்கு அறிமுகம்

முன்பகுதியை தொடர்ந்து ஒய்.இசட்.எஃப்- ஆர்15 வி 3.0 பைக்கின் ரியர் பகுதியில் டெயில் விளக்குகள் உட்பட பல்வேறு அம்சங்கள் புதுமையாக மாற்றப்பட்டுள்ளன.

இதுதவிர கியர் பொசிஷன் மற்றும் 18 பேரமீட்டர் டிஸ்பிளே உடன் கூடிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் பைக்கின் தொழில்நுட்ப அம்சத்திற்கு புதுமை சேர்கின்றன.

ஆட்டோ எக்ஸ்போவில் புதிய யமஹா ஆர்15 பைக் விற்பனைக்கு அறிமுகம்

இந்தியாவிற்கு ஏற்ற ஆர்15 வி3.0 பைக்கில் அப்சைடு டவுன் ஃபிரன்ட் ஃபோர்க்ஸ் மற்றும் ஏபிஎஸ் பாதுகாப்பு அம்சம் இடம்பெறவில்லை.

அதை தவிர இந்த புதிய ஆர்15 பைக்கிற்கு தற்போது பயன்பாட்டிலுள்ள மாடலின் கட்டமைப்பை பின்பற்றியே பெருமாலான தயாரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஆட்டோ எக்ஸ்போவில் புதிய யமஹா ஆர்15 பைக் விற்பனைக்கு அறிமுகம்

யமஹா ஒய்.இசட்.எஃப்- ஆர்15 வி3.0 பைக் ரேஸிங் ப்ளூ மற்றும் தன்டர் கிரே என இரண்டு வித நிறங்களில் கிடைக்கிறது.

இந்த பைக் அப்படியே ஆர்1 மாடலை நமக்கு நினைவிற்கு கொண்டுவருகிறது. இது புதிய ஆர்15 மாடலுக்கு வெற்றியையும் தரலாம்

ஆட்டோ எக்ஸ்போவில் புதிய யமஹா ஆர்15 பைக் விற்பனைக்கு அறிமுகம்

பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் யமஹா வெளியிட்டுள்ள இந்த புதிய ஆர் 15 பைக் வடிவமைப்பு மற்றும் கட்டமைப்பில் ஆர்6 மற்றும் ஆர்1 மாடல்களை பின்பற்றியே உருவாக்கப்பட்டுள்ளது.

ஆட்டோ எக்ஸ்போவில் புதிய யமஹா ஆர்15 பைக் விற்பனைக்கு அறிமுகம்

இருந்தாலும் இதில் இடம்பெற்றுள்ள புதிய 155சிசி எஞ்சின், யமஹா ஒய்.இசட்.எஃப்-ஆர் 15 பைக்கின் விற்பனையில் நிச்சயம் பலம் சேர்க்கும்.

இந்திய சந்தையில் யமஹாவின் புதிய ஆர்15 பைக்கிற்கு இணையான செயல்திறன் மற்றும் வடிவமைப்பில் வேறு எந்த போட்டி மாடலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்... #யமஹா #yamaha #auto expo 2018
English summary
Read in Tamil: Yamaha YZF-R15 V3.0 Launched At Rs 1.25 Lakh - Specifications, Features & Images. Click for Details...
Story first published: Wednesday, February 7, 2018, 15:52 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark