யமஹா சலூட்டோ பைக்கில் யுபிஎஸ் பிரேக் சிஸ்டம் அறிமுகம்!

யமஹா சலூட்டோ பைக் மாடல்களில் புதிய பிரேக் சிஸ்டம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. யமஹா சலூட்டோ ஆர்எக்ஸ் பைக் ரூ.52,500 எக்ஸ்ஷோரூம் விலையிலும், சலூட்டோ 125 பைக் ரூ.

யமஹா சலூட்டோ பைக் மாடல்களில் புதிய பிரேக் சிஸ்டம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த பிரேக் சிஸ்டம் குறித்த தகவல்கள் மற்றும் விலை விபரத்தை இப்போது பார்க்கலாம்.

யமஹா சலூட்டோ பைக்கில் யுபிஎஸ் பிரேக் சிஸ்டம் அறிமுகம்!

அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் 125சிசி ரகம் வரையிலான இருசக்கர வாகனங்களில் காம்பி பிரேக்கிங் சிஸ்டமும்( CBS), அதற்கு மேலான சிசி ரக மாடல்களில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் கட்டாயமாக்கப்பட இருக்கிறது. இதனையடுத்து, இருசக்கர வாகன நிறுவனங்கள் சிபிஎஸ் மற்றும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்துடன் இருசக்கர வாகனங்களை அறிமுகம் செய்து வருகின்றன.

யமஹா சலூட்டோ பைக்கில் யுபிஎஸ் பிரேக் சிஸ்டம் அறிமுகம்!

அந்த வகையில், யமஹாவின் 110 மற்றும் 125சிசி ரகத்தில் விற்பனை செய்யப்படும் சலூட்டோ மாடல்களில் சிபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனை யமஹா நிறுவனம் Unified Braking System (UBS) என்ற பெயரில் குறிப்பிடுகிறது.

யமஹா சலூட்டோ பைக்கில் யுபிஎஸ் பிரேக் சிஸ்டம் அறிமுகம்!

யமஹா சலூட்டோ ஆர்எக்ஸ் 110 மற்றும் சலூட்டோ 125 மாடல்களில் இந்த யுபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது, இரு பிரேக்குகளையும் ஒருங்கிணைந்து செயல்பட வைப்பதுதான் இந்த யுபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம். இதன்மூலமாக, பைக்கின் பாதுகாப்பு மேம்படும்.

யமஹா சலூட்டோ பைக்கில் யுபிஎஸ் பிரேக் சிஸ்டம் அறிமுகம்!

இந்த பிரேக் சிஸ்டத்தை தவிர்த்து இந்த பைக் மாடல்களில் வேறு எந்த மாற்றமும் இல்லை. யமஹா சலூட்டோ ஆர்எக்ஸ் பைக்கில் 110சிசி ஏர்கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 7.5 பிஎச்பி பவரையும், 8.5 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

யமஹா சலூட்டோ பைக்கில் யுபிஎஸ் பிரேக் சிஸ்டம் அறிமுகம்!

அதேபோன்று, சலூட்டோ 125 மாடலில் இருக்கும் 125சிசி எஞ்சின் 8.3 பிஎச்பி பவரையும், 10.1 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இரு மாடல்களிலுமே 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

யமஹா சலூட்டோ பைக்கில் யுபிஎஸ் பிரேக் சிஸ்டம் அறிமுகம்!

யமஹா சலூட்டோ ஆர்எக்ஸ் பைக் ரூ.52,500 எக்ஸ்ஷோரூம் விலையிலும், சலூட்டோ 125 பைக் ரூ.60,500 எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கும்.

யமஹா சலூட்டோ பைக்கில் யுபிஎஸ் பிரேக் சிஸ்டம் அறிமுகம்!

யமஹா சலூட்டோ ஆர்எக்ஸ் பைக் மாடல் டிவிஎஸ் ரேடியான், ஹோண்டா சிடி110 ட்ரீம் டிஎக்ஸ், பஜாஜ் பிளாட்டினா 100இஎஸ் ஆகிய மாடல்களுடன் போட்டி போடும். சலூட்டோ 125 மாடலானது ஹோண்டா சிபி ஷைன், பஜாஜ் டிஸ்கவர் 125 மற்றும் ஹீரோ சூப்பர் ஸ்பிளென்டர் பைக் மாடல்களுடன் போட்டி போடும்.

Most Read Articles
மேலும்... #யமஹா #yamaha
English summary
Yamaha has launched the new Saluto range in India with UBS at a starting price of Rs 52,500 while the top-spec 125cc model with front disc brake retails at Rs 60,500 (ex-showroom). Read in Tamil
Story first published: Friday, December 14, 2018, 16:01 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X