யமஹா ஆர்15 வி2.0 மாடல் விற்பனை நிறுத்தப்படுகிறது!!

யமஹா ஆர்15 வி2.0 பைக் மாடல் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்பட் இருக்கிறது. ஆர்15 பைக்கின் வி3.0 மாடலுக்கு வாடிக்கையாளர் மத்தியில் அதிக ஆதரவு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆர்15 வி2.0 மாடலின் விற்பனை வெகுவாக கு

By Saravana Rajan

யமஹா ஆர்15 வி2.0 பைக் மாடல் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்பட் இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

யமஹா ஆர்15 வி2.0 மாடல் விற்பனை நிறுத்தப்படுகிறது!!

ஆரம்ப ரக ஸ்போர்ட்ஸ் பைக்குகளில் யமஹா ஆர்15 பைக் இளைஞர்களை வெகுவாக கவர்ந்த மாடல். யமஹா மோட்டோஜீப் பைக்கின் டிசைன் தாத்பரியங்களுடன் மிக குறைவான விலையில் கிடைக்கும் பட்ஜெட் ஸ்போர்ட்ஸ் பைக் என்பதே இதற்கு காரணம்.

யமஹா ஆர்15 வி2.0 மாடல் விற்பனை நிறுத்தப்படுகிறது!!

இந்த நிலையில், இளைஞர்களின் எதிர்பார்ப்பை மனதில் வைத்துக் கொண்டு ஆர்15 பைக்கை அவ்வப்போது மேம்படுத்தி புதிய மாடலாக யமஹா அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், யமஹா நிறுவனம் அறிமுகம் செய்த ஆர்15 வி2.0 மாடல் விற்பனையில் இருந்து வருகிறது.

யமஹா ஆர்15 வி2.0 மாடல் விற்பனை நிறுத்தப்படுகிறது!!

இதனிடையே, கூடுதல் சிறப்பம்சங்கள் கொண்ட ஆர்15 வி3.0 மாடலும் விற்பனைக்கு வந்தது. எனினும், ஆர்15 வி2.0 மாடல் தொடர்ந்து விற்பனையில் இருந்து வருகிறது. இந்த நிலையில், ஆர்15 பைக்கின் வி3.0 மாடலுக்கு வாடிக்கையாளர் மத்தியில் அதிக ஆதரவு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆர்15 வி2.0 மாடலின் விற்பனை வெகுவாக குறைந்தது.

யமஹா ஆர்15 வி2.0 மாடல் விற்பனை நிறுத்தப்படுகிறது!!

இதையடுத்து, யமஹா ஆர்15 வி2.0 மாடலை இந்தியாவிலிருந்து விலக்கிக் கொள்வதற்கு யமஹா முடிவு செய்துள்ளது. இதன் அறிகுறியாக யமஹா இந்தியா இணையதளத்தில் இருந்து ஆர்15 வி2.0 பைக் விபரங்கள் நீக்கப்பட்டுள்ளன. எனவே, ஸ்டாக் இருக்கும் பைக்குகளை விற்றவுடன் டீலர்களிலிருந்து முழுவதுமாக இந்த மாடல் விடைபெற இருக்கிறது.

யமஹா ஆர்15 வி2.0 மாடல் விற்பனை நிறுத்தப்படுகிறது!!

யமஹா ஆர்1 மோட்டோஜீபி பைக்கின் சாயலில் வடிவமைக்கப்பட்டு இருக்கும் இந்த பைக்கில் 155சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 19 பிஎச்பி பவரையும், 15 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. வி3.0 மாடலில் ஸ்லிப்பர் க்ளட்ச் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

யமஹா ஆர்15 வி2.0 மாடல் விற்பனை நிறுத்தப்படுகிறது!!

இந்த நிலையில், மற்றொரு விஷயத்தையும் கூற வேண்டும். யமஹா ஆர்15 பைக்கின் முதல் தலைமுறை மாடலை ஒத்த அம்சங்களுடன் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட ஆர்15 எஸ் பைக் தொடர்ந்து விற்பனையில் இருக்கும் என்று தெரிகிறது. ஆனால், வி2.0 மாடல் மட்டுமே நீக்கப்பட்டுள்ளது.

யமஹா ஆர்15 வி2.0 மாடல் விற்பனை நிறுத்தப்படுகிறது!!

வாடிக்கையாளர்களை கவரும் விதமாக, அண்மையில் யமஹா ஆர்15 பைக்கின் மோட்டோஜீபி எடிசன் மாடலும் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. பண்டிகை காலத்தில் ஆரம்ப ரக ஸ்போர்ட்ஸ் பைக் மாடலை விரும்புவோருக்கு இது சிறந்த சாய்ஸாக இருக்கும். இந்த ஸ்பெஷல் மாடல் ரூ.1.30 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

Most Read Articles
மேலும்... #யமஹா #yamaha
English summary
Yamaha has discontinued the YZF-R15 V2.0 in the Indian market. Yes, the Japanese two-wheeler maker has removed the R15 V2.0 from its official website. The second-gen R15 has been pulled out from the market as the R15 V3 is selling in numbers and demand for the V2 model will be less.
Story first published: Monday, August 20, 2018, 10:46 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X