யமஹா ஒய்.இசட்.எஃப்- ஆர் 15 3.0 பைக்கின் அறிமுக தேதி விபரங்கள் வெளிவந்தன
யமஹா ஒய்.இசட்.எஃப்- ஆர் 15 3.0 பைக்கின் அறிமுக தேதி விபரங்கள் வெளிவந்தன
இந்தியாவில் பைக் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள யமஹாவின் ஒய்.இசட்.எஃப்- ஆர் 15 3.0 மோட்டார் சைக்கிள் பற்றிய புதிய விபரங்கள் வெளியாகியுள்ளன.

வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பிற்கு மேலும் ஹைப் தரும் விதமாக இந்த பைக்கின் வெளியீட்டு தேதி புகைப்படம் மற்றும் தகவல்களுடன் தற்போது இணையத்தில் கசிந்துள்ளன.
Recommended Video


யமஹா நிறுவனம் ஒய்.இசட்.எஃப்- ஆர் 15 3.0 பைக்கை டெஸ்ட் டிரைவ் செய்து வரும் புகைப்படங்கள் ஏற்கனவே பலமுறை இணையத்தில் வெளியாகியுள்ளன.
Trending On Drivespark:

இந்நிலையில், இந்த பைக் இம்மாதம் 8ம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாகலாம் என மேக்ஸ்ஏபவுட் என்ற இணையதளம் செய்தி தெரிவித்துள்ளது.

நாட்டில் உள்ள யமஹாவின் முக்கிய ஷோரூம்களில் ஒய்.இசட்.எஃப்- ஆர் 15 3.0 பைக் நிறுத்திவைக்கப்பட்டு உள்ளன. இதனால் இந்த பைக் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்தது.

குறிப்பாக, விரைவில் இந்த பைக் விற்பனைக்கு வருவதற்கான அறிவிப்புகளும் தென்பட்டன. தற்போது சில விற்பனையாளர்கள் யமஹா ஒய்.இசட்.எஃப்- ஆர் 15 3.0 பைக்கிற்கான முன்பதிவுகளை துவங்கிவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிரென்டியாகவும், மாட்சியமைப்பான டிசைன்களை பெற்றுள்ள யமஹா ஒய்.இசட்.எஃப்- ஆர் 15 3.0 பைக்கிற்கு ரூ. 1.25 லட்சம் (டெல்லி எக்ஸ்-ஷோரூம்) வரை விலை நிர்ணயம் செய்யப்படலாம் என்று தெரிகிறது.
Trending On Drivespark:

சர்வதேசளவில் விற்பனையாகும் மாடல்களிலிருந்து சற்று வித்தியாசமாக இருக்கும் இந்த பைக், யமஹாவின் ஆர் 15 வி 2.0 மாடலை விட அதிக விலை பெறுவது உறுதி என்கின்றன சில வட்டாரங்கள்.

யமஹா ஒய்.இசட்.எஃப்- ஆர் 15 3.0 பைக்கில் 155சிசி திறனுடன் சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் உள்ளது. இதன்மூலம் அதிகப்பட்சமாக 19 பிஎச்பி பவர் மற்றும் 14.7 என்.எம் டார்க் திறன் கிடைக்கும்.

லிக்விட் கூல்டு தொழில்நுட்பம் பெற்ற இந்த எஞ்சின், 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் உள்ளிட்டவற்றுடன் கூட்டணி அமைத்துள்ளது. தற்போது பயன்பாட்டில் உள்ள ஒய்.இசட்.எஃப்- ஆர் 1 பைக்கை தழுவி தான்,
ஒய்.இசட்.எஃப்- ஆர் 15 3.0 பைக்கை வடிவமைத்துள்ளது. யமஹா டுவின் தர முகப்பு விளக்குகளை பெற்றுள்ள இந்த பைக், பார்க்க கூர்மையான கட்டமைப்புகளுடன் காட்சியளிக்கிறது.

இந்தியாவின் மோட்டார் வாகன சட்டங்களுக்கு உட்பட்டு பிஎஸ் 4 காற்று மாசு விதிகளுக்கு கீழ் இந்த பைக்கின் எஞ்சின் இயங்கும்.
தவிர ஒய்.இசட்.எஃப்- ஆர் 15 3.0 பைக் 300சிசி ஃபேர்டு மாடல் மற்றும் சில காஸ்மெட்டிக் மாற்றங்களுடன் மீண்டும் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
Trending DriveSpark YouTube Videos


Click it and Unblock the Notifications








