புதிய வண்ணத் தேர்வில் கலக்கலாக களமிறங்கும் பஜாஜ் டோமினார் 400... ஸ்பை புகைப்படம்...

பஜாஜ் நிறுவனம், அதன் டோமினார் 400 பைக்கை புதிய வண்ணத் தேர்வில் களமிறக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த புதிய வண்ணத்திலான பைக்கின் ஸ்பை படங்கள் தற்போது கசிந்துள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

புதிய வண்ணத் தேர்வில் கலக்கலாக களமிறங்கும் பஜாஜ் டோமினார் 400... ஸ்பை புகைப்படம்...

பஜாஜ் நிறுவனம் அதன் புகழ்வாய்ந்த இருசக்கர வாகனங்களில் ஒன்றான டோமினார்400 மாடல் பைக்கை 2019ம் ஆண்டிற்கு ஏற்ப தயார் செய்துள்ளது. இந்த பைக் அண்மையில் சாலையில் பரிசோதனைக்கு உட்படுத்தும்போது, ஸ்பை செய்யப்பட்ட புகைப்படங்கள் வெளிாகியுள்ளன. இந்த ஸ்பை புகைப்படம் மூலம் புதிய பஜாஜ் டோமினார்400 பைக்குறித்த பல்வேறு முக்கிய தகவல்கள், அதன் அறிமுகத்திற்கு முன்னரே கிடைத்துள்ளது.

புதிய வண்ணத் தேர்வில் கலக்கலாக களமிறங்கும் பஜாஜ் டோமினார் 400... ஸ்பை புகைப்படம்...

பஜாஜ் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் பைக்குகளில் இதுவும் ஒன்றாக இருக்கின்றது. அந்தவகையில், டோமினார் 400 பைக் அதன், அறிமுகத்தில் இருந்து தற்போது வரை, அதற்கான டிமாண்டை இந்தியச் சந்தையில் அதிகளவில் ஏற்படுத்தி வருகின்றது.

இந்நிலையில், தான் மேலும் விற்பனைக்கு அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கில் அவ்வப்போது, டோமினார் 400 மாடலில் பஜாஜ் நிறுவனம் அப்டேட்டுகளை வழங்கி வருகின்றது.

புதிய வண்ணத் தேர்வில் கலக்கலாக களமிறங்கும் பஜாஜ் டோமினார் 400... ஸ்பை புகைப்படம்...

அந்தவகையில்தான், 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் புதிய வண்ணத் தேர்வில் தயார் செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு புதிய டோமினார்400 இரு புதிய நிறங்களில் களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதில், மெட்டாலிக் சிவப்பு ரகத்திலான பைக்தான் தற்போது ஸ்பை செய்யப்பட்டுள்ளது. இது, இந்த பைக்கின் அறிமுகத்தின்போது விருப்பத்தேர்வில், ஆப்ஷனலாக வழங்கலாம். இத்துடன் களமிறங்க இருக்கும் மற்றுமொரு நிற தேர்வ குறித்த தகவல் இதுவரை வெளியாகிவில்லை.

புதிய வண்ணத் தேர்வில் கலக்கலாக களமிறங்கும் பஜாஜ் டோமினார் 400... ஸ்பை புகைப்படம்...

முன்னதாக, பஜாஜ் டோமினார்400 கடந்த மார்ச் மாதத்தில் சில அப்டேட்டுகளுடன் விற்பனைக்கு அறிமுகமாகியிருந்தது. அந்தவகையில், புதிய அப்டேட்டுகளாக டிஓஎச்சி எஞ்ஜின் மற்றும் எக்சாஸ்ட் சிஸ்டம் உள்ளிடவற்றில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

புதிய அப்டேட்டைப் பெற்ற அதன் எஞ்ஜின் 35 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறனைப் பெற்றிருக்கின்றது. அதேசயம், அதிக டார்க்கின்போது 40 பிஎச்பி திறனை வெளிப்படுத்தும்.

புதிய வண்ணத் தேர்வில் கலக்கலாக களமிறங்கும் பஜாஜ் டோமினார் 400... ஸ்பை புகைப்படம்...

இத்துடன், புதிய பஜாஜ் டோமினார் 400 மாடல் பைக்கில் ஹார்ட்வேர் அப்டேட்டும் செய்யப்பட்டது. அவ்வாறு, ஸ்பிளிட் செய்யப்பட்ட எல்சிடி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர், சஸ்பென்ஷன், பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்டவை புதிய மாற்றமாக செய்யப்பட்டிருந்தன.

இதில், ஸ்பிளிட் டைப்பில் இருக்கும் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர், ஒன்று கன்வென்ஷனல் இடத்திலும், மற்றொன்று, ப்யூவல் டேங்க் அருகிலும் பொருத்தப்பட்டுள்ளது.

புதிய வண்ணத் தேர்வில் கலக்கலாக களமிறங்கும் பஜாஜ் டோமினார் 400... ஸ்பை புகைப்படம்...

இதைத்தொடர்ந்து, சஸ்பென்ஷன் அமைப்பின் அப்டேட்டைப் பார்த்தோமேயானால், முன்பக்கத்தில் அப்-சைட் டவுண் ஃபோர்க்கும், பின்பக்கத்தில் மோனோசாக்கும் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பு வசதியாக இந்த பைக்கின் முன்பக்க வீலில் 320மிமீ அளவுகொண்ட டிஸ்க் பிரேக்கும், பின்பக்கத்தில் 230மிமீ அளவுகொண்ட டிஸ்க் பிரேக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதே அமைப்புதான் டோமினாரின் முந்தைய மாடலிலும் இடம் பெற்றுள்ளது.

புதிய வண்ணத் தேர்வில் கலக்கலாக களமிறங்கும் பஜாஜ் டோமினார் 400... ஸ்பை புகைப்படம்...

ஆனால், இந்த அமைப்பை 2019 பஜாஜ் டோமினாரில் அந்த நிறுவனம் மாற்ற இருக்கின்றது. அந்தவகையில், ரேடிக்கல்லி மவுண்டட் காலிபர் கொண்ட பிரேக் இதில் புதிதாக அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது வாகன ஓட்டியின் சிறப்பான பிரேக்கிங் அனுபவத்தை வழங்கும் வகையில் புதுப்பிக்கப்பட உள்ளது. இத்துடன், மோட்டார்சைக்கிளுக்கு புதிய புத்துணர்ச்சியான தோற்றத்திற்காக ஹெட்லேம்ப் மற்றும் டெயில் லைட்டுகள் புதிய தோற்றத்தில் பொருத்தப்பட உள்ளன.

புதிய வண்ணத் தேர்வில் கலக்கலாக களமிறங்கும் பஜாஜ் டோமினார் 400... ஸ்பை புகைப்படம்...

மேலும், அலாய் வீலுக்கும் இரு வண்ணங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், சில்வர்/பிளாக் வண்ணம் வழங்கப்பட்டுள்ளது. இது, முன்னதாக கிடைத்த தங்க நிறத்திலான வீலைக் காட்டிலும் பிரத்யேகமான லுக்கை புதிய டோமினாருக்கு வழங்க இருக்கின்றது. தற்போது களமிறங்க இருக்கும் புதிய வண்ணம் மட்டுமின்றி, இதற்கு முன்னதாகவும் பஜாஜ் நிறுவனம் புதிய அரோரா பச்சை நிறத்தில் டோமினார்400 பைக்கை அறிமுகம் செய்திருந்தது குறிப்பிடத்தகுந்தது.

Image Courtesy: Bikedekho

Most Read Articles

English summary
2019 Bajaj Dominar Spotted With Metallic Red Paint Job — New Colours Launching Soon.Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X