புதிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக் குறித்த முக்கியத் தகவல்கள்!

விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் புதிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக் குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதன் விபரங்களை பார்க்கலாம்.

புதிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக் குறித்த முக்கியத் தகவல்கள்!

கடந்த 2017ம் ஆண்டு இத்தாலியில் நடந்த ஐக்மா மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் எக்ஸ்பல்ஸ் என்ற அட்வென்ச்சர் டூரர் ரக பைக் மாடலின் கான்செப்ட் காட்சிப்படுத்தப்பட்டு இருந்ததது. அதன் டூரர் வெர்ஷன் கடந்த ஆண்டு ஐக்மாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடல்கள் இந்தியர்கள் மத்தியில் பேராவலை தூண்டியது. குறைவான விலையில் வரும் அட்வென்ச்சர் டூரர் மாடல் என்பதே, இந்த ஆவலுக்கு காரணம்.

புதிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக் குறித்த முக்கியத் தகவல்கள்!

இந்த நிலையில், தயாரிப்பு நிலைக்கு மேம்படுத்தப்பட்டு இருக்கும் எக்ஸ்பல்ஸ் பைக் மாடல்கள் மிக விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் பைக் இரண்டு மாடல்களில் விற்பனைக்கு வர இருக்கிறது.

புதிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக் குறித்த முக்கியத் தகவல்கள்!

ஆஃப்ரோடு பயன்பாட்டுக்கு ஏற்ற ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 மற்றும் நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்ற எக்ஸ்பல்ஸ் 200டி ஆகிய இரண்டு மாடல்களில் வர இருக்கிறது. இந்த நிலையில், அண்மையில் இந்த பைக்குகளின் ஸ்பை படங்கள் வெளியாகின.

புதிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக் குறித்த முக்கியத் தகவல்கள்!

அதில், இந்த இரண்டு எக்ஸ்பல்ஸ் மாடல்களிலும் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் கொண்ட எஞ்சின் இடம்பெற்றிருப்பது உறுதியாகி இருக்கிறது. பெட்ரோல் டேங்க் கீழே ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டத்தை குறிக்கும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருக்கிறது.

Image Courtesy: Motopixeltv

புதிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக் குறித்த முக்கியத் தகவல்கள்!

இந்த பைக் மாடல்களில் இடம்பெற்றிருக்கும் 199.6சிசி ஏர்கூல்டு எஞ்சின் அதிகபட்சமாக 19 பிஎச்பி பவரையும், 17.1 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக் குறித்த முக்கியத் தகவல்கள்!

எனினும், பயன்பாட்டிற்கு தக்கவாறு எஞ்சினில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டு இருப்பதாக ஹீரோ மோட்டோகார்ப் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த பைக்குகளின் ஹேண்டில்பார் அமைப்பிலும் வேறுபடுகிறது. அட்வென்ச்சர் டூரர் மாடலில் விசேஷ இருக்கை மற்றும் அலாய் வீல்கள் உள்ளன. ஆஃப்ரோடு மாடலில் ஸ்போக்ஸ் வீல்கள் உள்ளன.

புதிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக் குறித்த முக்கியத் தகவல்கள்!

இந்த பைக் மாடல்களில் எல்இடி விளக்குகள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட பல முக்கிய அம்சங்கள் இடம்பெற இருக்கின்றன. புளூடூத் இணைப்பு வசதியுயம், நேவிகேஷன் வசதியும் கூட இந்த பைக்குகளில் கொடுக்கப்பட்டு இருக்கும்.

புதிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக் குறித்த முக்கியத் தகவல்கள்!

இந்த மாதத்தில் விற்பனைக்கு வர இருக்கும் இந்த புதிய பைக் மாடல்கள் ரூ.1 லட்சம் முதல் ரூ.1.30 லட்சம் இடையிலான விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எக்ஸ்பல்ஸ் 200டி பைக் மாடல் விலை குறைவாக இருக்கும். ஆஃப்ரோடு மாடலுக்கு விலை அதிகமாக நிர்ணயிக்கப்படும்.

Most Read Articles
English summary
2019 Hero Xpulse 200, 200T Models to get fuel injection system.
Story first published: Monday, April 1, 2019, 11:08 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X