தெறி பேபி... அட்டகாசமான ஸ்டைலில் வருகிறது ஹோண்டா சிபிஆர்400ஆர் - படங்கள்!

ஹோண்டா பைக் தயாரிப்பு நிறுவனம் தனது புத்தம் புதிய ஸ்போர்டி ரக ஹோண்டா சிபிஆர்400ஆர் பைக்கை அறிமுகம் செய்துள்ளது.

ஹோண்டா சிபிஆர்400ஆர்

ஜப்பானின் தலைநகரான டோக்கியோவை மையமாகக் கொண்டு இயங்கும் ஹோண்டா நிறுவனம் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன விற்பனையில் ஈடுபட்டு வருகிறது.

அந்த வகையில், ஹோண்டாவின் அனைத்து தயாரிப்புகளுமே மிகவும் பிரபலமானவை. மேலும், அது தயாரிக்கும் கார்கள் முதல் இருசக்கர வாகனங்கள் வரை விற்பனையில் தனி காட்டு ராஜாகவாக உள்ளன.

அதேபோல, இந்த நிறுவனம் தயாரிக்கும் இருசக்கர வாகனங்கள் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய இடத்தைப் தக்கவைத்துள்ளது. அவ்வாறு சமீபத்தில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவின் அறிமுகம் செய்யப்பட்ட ஹோண்டா சிபிஆர்300ஆர் பைக்கானது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஹோண்டா சிபிஆர்400ஆர்

இதன் விற்பனை இந்த மாதம் 8ம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்போர்டி ரகத்தில் காணப்படும் அந்த பைக் விற்பனையை அறிவிக்கப்பட்ட சில நாட்களிலேயே கணிசமான அளவில் முன்பதிவைப் பெற்றுள்ளது.

இந்நிலையில், ஹோண்டா நிறுவனம் தனது புத்தம் புதிய மாடல் சிபிஆர்400ஆர் மாடல் பைக்கை ஜப்பானில் அறிமுகம் செய்துள்ளது. மேலும், அந்த பைக்கை மார்ச் மாதத்தின் இறுதிக்குள் விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளது.

புத்தம் புது பொலிவுடன், முழுக்க முழுக்க ரேஸ் பைக் தோற்றத்தில் அட்டகாசமாக உருவாக்கப்பட்டுள்ள அந்த பைக், 2019ம் ஆண்டுக்கான பாதுகாப்பு விதிமுறைகளுக்கு உட்படுத்தப்பட்டு தயாராக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த பைக்கில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்பட அதிநவீன தொழில்நுட்பங்கள் இடம் பெற்றுள்ளன.

ஹோண்டா சிபிஆர்400ஆர்

ஹோண்டா நிறுவனம் இந்த பைக்கை மூன்று வெவ்வேறு விதமான கலரில் தயாரித்துள்ளது. அவை, கிராண்ட் பிரிக்ஸ் ரெட், பியர்ல் கிளார் வைட் மற்றும் மேட் ஆக்ஸிஸ் கிரே மெட்டாலிக் ஆகிய பிரத்யேகமான நிறங்களில் தயாராக்கி உள்ளன.

ஹோண்டா சிபிஆர்400ஆர் பைக்குக்கு முன்னதாக ஹோண்டா சிபிஆர்300ஆர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. இந்நிலையில், இந்த பைக்கின் விற்பனையைப் பொறுத்தே ஹோண்டா சிபிஆர்400ஆரின் விற்பனையை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

2019 ஹோண்டா சிபிஆர்400ஆர் மாடலில், இரண்டு சிலிண்டர்கள் கொண்ட 399சிசி எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, 46 குதிரைத் திறனையும், 9,000RPM மற்றும் 38Nm டார்க்யூ 7,500 திறனையும் வெளிப்படுத்தும். மேலும், இந்த பைக்கில் 17 லிட்டர் பெட்ரோல் பிடிக்கும் அளிவிற்கு டேங்க் கொடுக்கப்பட்டுள்ளது.

ஹோண்டா சிபிஆர்400ஆர்

192 கிலோ எடையுள்ள இந்த பைக், லிட்டருக்கு 41 கிமீ மைலேஜ் தரும் என கூறப்படுகிறது. இது இந்திய மதிப்பில் ரூ. 5 லட்சத்து 17 ஆயிரத்து 605 என்ற விலையில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
2019 Honda CBR400R Sports Bike Launches In Japan. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X