புதிய பாதுகாப்பு அம்சத்துடன் களமிறங்கிய மஹிந்திரா கஸ்ட்டோ.. மின்சார ஸ்கூட்டர் பற்றி தகவலும் கசிந்தன!

மஹிந்திரா நிறுவனம், அதன் கஸ்ட்டோ ஸ்கூட்டரை புதிய பாதுகாப்பு விதிகளுக்கேற்ப தயார் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்படி என்ன பாதுகாப்பு அம்சத்தை இந்த கஸ்ட்டோ ஸ்ஸகூட்டர் பெற்றிருக்கின்றது என்ற தகவலை இப்பதிவில் காணலாம்.

புதிய பாதுகாப்பு அம்சத்துடன் களமிறங்கிய மஹிந்திரா கஸ்ட்டோ... அப்படி என்ன இருக்குனு தெரிஞ்சிக்கனுமா...?

இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கிக்கொண்டிருக்கும் மஹிந்திரா நிறுவனம், நான்கு மற்றும் இருசக்கர வாகனங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்து விற்பனைக்கு களமிறக்கி வருகின்றது.

நான்கு சக்கர வாகனங்கள் சார்ந்த சந்தையில் கொடிகட்டி பறக்கும் இந்நிறுவனம், ஏனோ இருசக்கர வாகன சந்தையில் பின்னடைவையேச் சந்தித்து வருகின்றது. அதற்கேற்ப வகையில், சமீபகாலங்களாக இதன் இருசக்கர வாகனங்கள் ஒன்று விற்பனையாகவில்லை என கூறப்படுகின்றது.

புதிய பாதுகாப்பு அம்சத்துடன் களமிறங்கிய மஹிந்திரா கஸ்ட்டோ... அப்படி என்ன இருக்குனு தெரிஞ்சிக்கனுமா...?

இதற்கு, மஹிந்திரா நிறுவனம், அதன் இருசக்கர வாகனங்களை அரசு விதிமுறையின்படி, சில அம்சங்களைச் சேர்க்காததே முக்கிய காரணம் என கூறப்படுகின்றது.

புதிய பாதுகாப்பு அம்சத்துடன் களமிறங்கிய மஹிந்திரா கஸ்ட்டோ... அப்படி என்ன இருக்குனு தெரிஞ்சிக்கனுமா...?

புதிய விதிகள், 125 சிசிக்கும் குறைவான திறன் கொண்ட அனைத்து வாகனங்களும் சிபிஎஸ் எனப்படும் காம்பி பிரேக்கிங் சிஸ்டமுடனும், 125 சிசிக்கும் அதிகமான திறன் கொண்ட வாகனங்கள் ஏபிஎஸ் எனப்படும் ஆன்டிலாக் பிரேக்கிங் சிஸ்டத்துடன் விற்பனைக்கு அறிமுகம் செய்யவேண்டும் கட்டாயமகாக்கப்பட்டுள்ளது.

புதிய பாதுகாப்பு அம்சத்துடன் களமிறங்கிய மஹிந்திரா கஸ்ட்டோ... அப்படி என்ன இருக்குனு தெரிஞ்சிக்கனுமா...?

ஆனால், இந்த பாதுகாப்பு அம்சத்தை மஹிந்திரா நிறுவனம் அதன் தயாரிப்புகளில் அறிமுகம் செய்யாமல் இழுத்தடிப்பு செய்து வந்தது. இதற்கான பலனையும் அது அனுபவித்துவிட்டது.

புதிய பாதுகாப்பு அம்சத்துடன் களமிறங்கிய மஹிந்திரா கஸ்ட்டோ... அப்படி என்ன இருக்குனு தெரிஞ்சிக்கனுமா...?

இந்நிலையில், அதன் கஸ்ட்டோ ஸ்கூட்டரில் சிபிஎஸ் பிரேக்கிங் வசதியை அறிமுகம் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சிபிஎஸ் தரத்திலான ஸ்கூட்டரை மூன்று வேரியண்டுகளில் விற்பனைக்கு களமிறக்கியிருப்பதாக ரஷ்லேன் ஆங்கில செய்திதளம் தகவல் வெளியிட்டுள்ளது.

புதிய பாதுகாப்பு அம்சத்துடன் களமிறங்கிய மஹிந்திரா கஸ்ட்டோ... அப்படி என்ன இருக்குனு தெரிஞ்சிக்கனுமா...?

அந்தவகையில், புதிதாக கஸ்ட்டோ 110 விஎக்ஸ், கஸ்ட்டோ 110 டிஎக்ஸ் மற்றும் கஸ்ட்டோ விஎக்ஸ் ஆகிய மாடல்கள் சிபிஎஸ் தரத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில், கஸ்ட்டோ 110 விஎக்ஸ் ரூ. 55,660 என்ற விலையிலும், கஸ்ட்டோ 110 டிஎக்ஸ் ரூ. 50,996 என்ற விலையிலும், கஸ்ட்டோ 125 விஎக்ஸ் வேரியண்ட் ரூ. 58,137 என்ற விலையிலும் களமிறக்கப்பட்டுள்ளது. இவையனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.

புதிய பாதுகாப்பு அம்சத்துடன் களமிறங்கிய மஹிந்திரா கஸ்ட்டோ... அப்படி என்ன இருக்குனு தெரிஞ்சிக்கனுமா...?

அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த விலையானது, தற்போது விற்பனையில் கஸ்ட்டோ ஸ்கூட்டரைக் காட்டிலும் 3 ஆயிரம் ரூபாய் அதிகமானதாக இருக்கின்றது. அவ்வாறு, கஸ்ட்டோ 110 விஎக்ஸ் மாடலின் தற்போதைய விலையைக் காட்டிலும் ரூ. 2,340 உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோன்று, கஸ்ட்டோ 110 டிஎக்ஸ் மாடலுக்கு ரூ. 2,816ம், கஸ்ட்டோ 125 விஎக்ஸ் மாடலுக்கு ரூ. 2,367-ம் ஏற்றப்பட்டுள்ளது.

புதிய பாதுகாப்பு அம்சத்துடன் களமிறங்கிய மஹிந்திரா கஸ்ட்டோ... அப்படி என்ன இருக்குனு தெரிஞ்சிக்கனுமா...?

பாதுகாப்பு அம்சத்தைதத் தவிர இந்த ஸ்கூட்டரில் வேறெந்த மாற்றமும் செய்யப்படவில்லை என கூறப்படுகின்றது. ஆகையால், கஸ்ட்டோ 110 மாடல் ஸ்கூட்டர்களில் 109 சிசி திறனை வெளிப்படுத்தும் வகையிலான எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, அதிகபட்சமாக 8 பிஎச்பி பவரையும், 9 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.

புதிய பாதுகாப்பு அம்சத்துடன் களமிறங்கிய மஹிந்திரா கஸ்ட்டோ... அப்படி என்ன இருக்குனு தெரிஞ்சிக்கனுமா...?

அதேபோன்று, கஸ்ட்டோ 125 வேரியண்ட் ஸ்கூட்டரில் 124 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, அதிகபட்சமாக 8.5 பிஎச்பி பவரையும், 10 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த இரு எஞ்ஜின்களிலும் சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

புதிய பாதுகாப்பு அம்சத்துடன் களமிறங்கிய மஹிந்திரா கஸ்ட்டோ... அப்படி என்ன இருக்குனு தெரிஞ்சிக்கனுமா...?

அதேசமயம், கஸ்ட்டோவின் அனைத்து வேரியண்டுகளிலும் டிரம் பிரேக்தான் காணப்படுகின்றது. இத்துடன், சிபிஎஸ் வசதி தற்போது புதிதாக இணைக்கப்பட்டுள்ளது.

மேலும், சஸ்பென்ஷன் அமைப்பிற்காக ஸ்கூட்டரின் முன்பக்கத்திற்கு டெலிஸ்கோபிக் ஃபோர்க்கும், பின் பக்கத்தில் மோனோ சாக்கும் பொருத்தப்பட்டுள்ளது.

புதிய பாதுகாப்பு அம்சத்துடன் களமிறங்கிய மஹிந்திரா கஸ்ட்டோ... அப்படி என்ன இருக்குனு தெரிஞ்சிக்கனுமா...?

இந்த ஸ்கூட்டர்கள் அனைத்தும் வெகுவிரைவில் டீலர்களிடம் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட இருப்பதாக மஹிந்திரா நிறுவனத்தின் அதிகாரி வட்டம் தகவல் தெரிவித்துள்ளது. இது, ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா, ஹீரோ மேஸ்ட்ரோ, சுஸுகி அக்செஸ், டிவிஎஸ் ஜூபிடர் உள்ளிட்ட ஸ்கூட்டர்களுடன் வரும் காலங்களில் போட்டியிட இருக்கின்றது.

புதிய பாதுகாப்பு அம்சத்துடன் களமிறங்கிய மஹிந்திரா கஸ்ட்டோ... அப்படி என்ன இருக்குனு தெரிஞ்சிக்கனுமா...?

கஸ்ட்டோவின் இந்த சிபிஎஸ் அவதாரத்தைத் தொடர்ந்து, மஹிந்திரா நிறுவனம், கஸ்ட்டோ மாடலிலான எலக்ட்ரிக் ஸ்கூட்டரை தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது, கஸ்ட்டோவின் பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்ட தயார் செய்யப்பட உள்ளது. அதாவது, உடல் கட்டுமான அமைப்பு, ஹெட்லைட், வீல் உள்ளிட்ட சிறப்பம்சங்களை கஸ்ட்டோவிடம் இருந்தே இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பெறவிருக்கின்றது.

புதிய பாதுகாப்பு அம்சத்துடன் களமிறங்கிய மஹிந்திரா கஸ்ட்டோ... அப்படி என்ன இருக்குனு தெரிஞ்சிக்கனுமா...?

ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவல் இன்னும் மஹிந்திரா தரப்பிலிருந்து வெளியிடப்படவில்லை. இருப்பினும், அண்மைக் காலங்களாக இந்திய வாகன சந்தை, மின் வாகன பயன்பாட்டை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கும் சூழ்நிலையில், கஸ்ட்டோ ரகத்திலான எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அந்நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Most Read Articles

English summary
2019 Mahindra Gusto CBS Launch. Read In Tamil.
Story first published: Thursday, August 1, 2019, 14:50 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X