ஸ்பிளிட் இருக்கை, அட்டகாசமான பெட்ரோல் டேங்க்: விரைவில் புத்தம் புதிய மாடல் ஜிக்ஸெர் பைக்!

2019ம் ஆண்டு சுஸுகி ஜிக்ஸெர் மாடல் பைக் புத்தம் புதிய அட்டகாசமான தோற்றத்தில் விரைவில் அறிமுமாக உள்ளது.

2019 சுஸுகி ஜிக்ஸெர் 150

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த சுஸுகி நிறுவனம் இந்திய வாகன சந்தையில் கார் மற்றும் இருசக்கர வாகனங்களை விற்பனைச் செய்து வருகிறது. மேலும், இந்த நிறுவனம் மற்ற வாகன விற்பனையாளர்களுக்கு கடுமையான போட்டியாளராகவும் இருந்து வருகிறது.

ஏனென்றால் இந்த நிறுவனம், அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் மலிவு மற்றும் அதிக விலையிலான இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களைத் தயாரித்து விற்பனைச் செய்து வருகிறது. மேலும், இந்த நிறுவனம் இளைஞர்கள் முதல் பெரியவர்களைக் கவரும் வகையில் ஸ்போர்டி, நார்மல் மாடல் பைக்குகளைச் சந்தையில் அறிமுகம் செய்து வருகின்றது.

2019 சுஸுகி ஜிக்ஸெர் 150

சுஸுகி மோட்டார்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் கடந்த நிதியாண்டில் மட்டும் ஐந்து லட்சத்துக்கும் அதிகமான வாகனங்களை விற்பனைச் செய்தது. அதேபோல் இந்த வருடமும் புதிய விற்பனை உச்சத்தைத் தொடுவதற்கு அந்த நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. அதன்படி, வருகின்ற நிதியாண்டில் 7 லட்சம் வாகனங்களை விற்பனைச் செய்யும் வண்ணம் அந்த நிறுவனம் தயாராகி வருகின்றது.

அந்த நிறுவனத்தின் தயாரிப்புகளில் சுஸுகி அக்செஸ் 125 ஸ்கூட்டர் மிகவும் பிரபலமானது. இது இந்த நிறுவனத்தின் அதிகம் விற்பனையான வாகனங்களில் ஒன்றாகும். இதைத்தொடர்ந்து, ஐரோப்பிய நாடுகளில் மிகவும் பிரபலமான மேக்ஸி ரக பர்க்மேன் ஸ்டீரிட் ஸ்கூட்டர் இந்தியாவில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

2019 சுஸுகி ஜிக்ஸெர் 150

தனது விற்பனையை மேலும் கூட்டும் விதமாக வெளியிடப்பட்ட பர்க்மேன் ஸ்டீரிட்டின் பிரமாண்டமான தோற்றம் இந்தியச் சாலையில் தனித்துவமாக தோன்றியது. மேலும் அது பலரையும் ஈர்க்கும் வகையில் அமைந்திருந்தது. இதைத்தொடர்ந்து, சுஸுகி நிறுவனம் வருகின்ற 2020-21ம் ஆண்டுக்குள் பேட்டரி ரக பைக்குகளையும் அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், 2018ம் ஆண்டைக் காட்டிலும் அதிகளவிலான வாகனங்களை விற்பனைச் செய்யும் நோக்கில் சுஸுகி நிறுவனம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதற்காக தனது பிரபல மாடலான ஜிக்ஸெர் பைக்கை புதிய தோற்றத்துடன் களமிறக்க உள்ளது.

2019 சுஸுகி ஜிக்ஸெர் 150

இதற்காக, 2019ம் ஆண்டு சுஸுகி ஜிக்ஸெர் மாடலுக்கு புத்தம் புது வடிவம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த பைக்கில் பல்வேறு சிறப்பு மாற்றங்கள் மற்றும் அம்சங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

யமஹா FZ25 மாடல் பைக்குக்கு போட்டியாக தயாராகி வரும் இந்த குவாட்டர் லிட்டர் நேக்கட் மாடல் பைக், பேஸர் 25 மாடலைத் தழுவி தயாராக்கப்பட்டு உள்ளது. அவ்வாறு நேக்கட் ஜிக்ஸெர் 150 மற்றும் ஜிக்ஸெர் எஸ்எஃப் என இரு மாடல்கள் விரைவில் அறிமுகமாக உள்ளன.

2019 சுஸுகி ஜிக்ஸெர் 150

மேலும், இந்த மாடல் பைக்குகள் நவீன காலத்திற்கு ஏற்ப எல்இடி ஹெட்லைட், பகல்நேர மின்விளக்கு, டிஜிட்டர் மீட்டர் உட்பட பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன. தொடர்ந்து, பைக்கில் புது தோற்றமாக ஸ்பிளிட் செய்யப்பட்ட இருக்கைகள், மாற்றியமைக்கப்பட்ட பெட்ரோல் டேங்க் ஆகியவை சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது.

புதுப்பிக்கப்பட்ட பாதுகாப்பு அம்சத்துக்கு ஏற்ப இந்த பைக்கில், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் பொருத்தப்பட்டு உள்ளது. 154.9 சிசி கொண்ட சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்ட் எஞ்ஜின் இதில் நிறுவப்பட்டுள்ளது. இது 14.8 PSயை, 8,000 rpmயை வெளிப்படுத்தும். மேலும், 14 Nm டார்க்யூ திறன் 6,000 rpmஐ வெளிப்படுத்தும்.

2019 சுஸுகி ஜிக்ஸெர் 150

இந்த புத்தம் புதிய இரண்டு மாடல்களும் கூடிய விரைவில் சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இதன் விலை மற்றும் மற்ற விபரங்கள் இன்னும் வெளிவரவில்லை. ஆனால், இந்த பைக் விற்பனைக்கு வருமேயானால், யமஹாவின் எஃப்இஸட், எஃப்இஸட்-எஸ்வி3 ஆகிய புதிய மாடல்களுடன் கடுமையான போட்டியைச் சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

source:gaadiwaadi.com

Most Read Articles
English summary
2019 Suzuki Gixxer Models Launch Soon. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X