இந்தியர்களுக்கு பிடித்த மாடலை அப்டேட் செய்த பெனெல்லி... பைக்கின் ஸ்பை படங்கள் கசிவு...

இந்தியர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான மாடலாக இருக்கும் பெனெல்லி டிஎன்டி 600ஐ பைக்கின் 2020 மாடல் ஸ்பை செய்யப்பட்டுள்ளது. இந்த பைக்கின் புகைப்படம் மற்றும் சிறப்பு தகவலை இந்த பதிவில் காணலாம்.

இந்தியர்களுக்கு பிடித்த மாடலை அப்டேட் செய்த பெனெல்லி... பைக்கின் ஸ்பை படங்கள் கசிவு...

இத்தாலியை தலைமையமாகக் கொண்டு இயங்கும் பெனெல்லி நிறுவனம், அதன் தயாரிப்புகள் பலவற்றை இந்தியாவில் விற்பனைச் செய்து வருகின்றது. அந்தவகையில், அந்நிறுவனம் விற்பனைச் செய்யும் மாடல்களில் மிகவும் புகழ்வாய்ந்த மாடலாக டிஎன்டி 600ஐ இருக்கின்றது.

இந்தியர்களுக்கு பிடித்த மாடலை அப்டேட் செய்த பெனெல்லி... பைக்கின் ஸ்பை படங்கள் கசிவு...

நேக்கட் ரக ஸ்போர்ட்ஸ் மடாலாக இருக்கும் இந்த பைக்கிற்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு நிலவி வருகின்றது. ஆகையால், இந்த பெனெல்லி டிஎன்டி 600ஐ மாடலின் அப்டேட் வெர்ஷனை அந்நிறுவனம், ஐரோப்பா மற்றும் இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது.

இந்தியர்களுக்கு பிடித்த மாடலை அப்டேட் செய்த பெனெல்லி... பைக்கின் ஸ்பை படங்கள் கசிவு...

இந்நிலையில், அப்டேட் செய்யப்பட்ட பெனெல்லி டிஎன்டி 600ஐ மாடலை, அந்நிறுவனம் இந்தியாவில் வைத்து பரிசோதனைக்கு உட்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகின. அவ்வாறு, அந்த பைக் பலபரீட்சையில் ஈடுபட்டு வரும்போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. இதனை மோட்டாராய்ட் ஆங்கில தளம் வெளியிட்டுள்ளது.

இந்த ஸ்பை படங்கை நீங்கள் கீழே காணலாம்...

இந்தியர்களுக்கு பிடித்த மாடலை அப்டேட் செய்த பெனெல்லி... பைக்கின் ஸ்பை படங்கள் கசிவு...

பெனெல்லி நிறுவனம், அதன் தயாரிப்புகளை டிஎஸ்கே குழுமத்தின்கீழ் இந்தியாவில் விற்பனைச் செய்து வருகின்றதது. இந்நிறுவனத்தின்கீழே புதிதாக களமிறங்க இருக்கும் பைக்குகளும் விற்பனைக்கு வரவிருக்கின்றன.

தற்போது காட்சிக்குள்ளாகியிருக்கும் பெனெல்லி டிஎன்டி 600ஐ பைக் புதிய மாசு உமிழ்வு விதிக்களுக்கு ஏற்ப தயாராகியிருப்பதாக கூறப்படுகிறது. மேலும், வெளியாகியிருக்கும் ஸ்பை பிக் மூலம் பல்வேறு உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கசிந்துள்ளன.

இந்தியர்களுக்கு பிடித்த மாடலை அப்டேட் செய்த பெனெல்லி... பைக்கின் ஸ்பை படங்கள் கசிவு...

அந்தவகையில், தற்போது விற்பனையில் இருக்கும் டிஎன்டி 600ஐ பைக்கைக் காட்டிலும் ஸ்பை செய்யப்பட்டிருக்கும் பைக் புதிய ஸ்டைலைப் பெற்றிருப்பது தெரிய வருகின்றது.

அதுமட்டுமின்றி, இந்த பைக்கில் நவீன மற்றும் புதிய சிறப்பம்சங்கள் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளன. அவ்வாறு, பைக்கில் இருக்கும் அனைத்து மின் விளக்குகளும் எல்இடி தரத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளன. மேலும், இந்த பைக்கில் ஸ்லீக் கவுல் ஹெட்லேம்ப் மற்றும் டைனி ரகத்திலான இன்டிகேட்டர்கள் அப்டேட்டைப் பெற்றுள்ளன.

இந்தியர்களுக்கு பிடித்த மாடலை அப்டேட் செய்த பெனெல்லி... பைக்கின் ஸ்பை படங்கள் கசிவு...

இத்துடன், பைக்கின் பாடி மற்றும் ப்யூவல் டேங்க் முழுமையான மாற்றத்தைச் சந்தித்துள்ளன. அந்தவகையில், அவை மிகவும் ஷார்ப்பான மற்றும் போல்டான லுக்கைப் பெற்றிருக்கின்றன. மேலும், இந்த புத்தம் புதிய டிஎன்டி 600ஐ பைக், பருத்த டெயில் பாகம், படி போன்ற சறுக்கலான இருக்கை அமைப்பு உள்ளிட்டவற்றைப் பெற்று, மிக கவர்ச்சியான தோற்றத்தில் காட்சியளிக்கின்றது.

இந்தியர்களுக்கு பிடித்த மாடலை அப்டேட் செய்த பெனெல்லி... பைக்கின் ஸ்பை படங்கள் கசிவு...

அதேசமயம், இந்த பைக்கில் இரு எக்சாஸ்ட் சிஸ்டம் இணைக்கப்பட்டுள்ளது. இது, இருக்கைக்கு அடியில் இருக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அது புகைப்படத்தில் காட்சிக்குள்ளாகவில்லை. தொடர்ந்து, தற்போதைய டிஎன்டி 600ஐ மாடலில் மட்குவார்ட் நீக்கப்பட்டு, புதிய ப்ராமினன்ட் டயர் ஹக்கர்கள் இணைக்கப்பட்டுள்ளது.

இந்தியர்களுக்கு பிடித்த மாடலை அப்டேட் செய்த பெனெல்லி... பைக்கின் ஸ்பை படங்கள் கசிவு...

இதேபோன்று, 2020 பெனெல்லி டிஎன்டி 600ஐ பைக் புதிய நிறங்கள் கொண்ட டிஎன்டி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர், பெரிய அளவில் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால், இது தற்போதைய பைக்கில் டிஜிட்டல் அனலாக் யூனிட்டாக இருக்கின்றது. இத்துடன், புதிய வசதியாக இந்த பைக்கில் ரைடிங் மோட்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்தியர்களுக்கு பிடித்த மாடலை அப்டேட் செய்த பெனெல்லி... பைக்கின் ஸ்பை படங்கள் கசிவு...

மேலும், பைக்கின் உறுதியான கட்டமைப்பிற்காக ட்ரெல்லிஸ் ஃப்ரேம் மற்றும் ஸ்விங்க்ரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதே கட்டமைப்பு முறைதான் முந்தைய மாடலில் பயன்படுத்தப்பட்டது. இத்துடன், சிறப்பான சஸ்பென்ஷனுக்காக பைக்கின் முன் பக்கத்தில் இன்வெர்டட் டெலிஸ்கோபிக் ஃபோர்க்கும், பின்பக்கத்தில் மோனோசாக்கும் பொருத்தப்பட்டுள்ளது.

இந்தியர்களுக்கு பிடித்த மாடலை அப்டேட் செய்த பெனெல்லி... பைக்கின் ஸ்பை படங்கள் கசிவு...

இதுமட்டுமின்றி, வாகன ஓட்டியின் பாதுகாப்பான பயணத்திற்காக பைக்கின் முன்பக்கத்தில் இரு டிஸ்க் பிரேக்கும், பின் பக்கத்தில் சிங்கிள் டிஸ்க் பிரேக்கும் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன், ட்யூவல் ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டமும் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளது.

இந்தியர்களுக்கு பிடித்த மாடலை அப்டேட் செய்த பெனெல்லி... பைக்கின் ஸ்பை படங்கள் கசிவு...

பெனெல்லி 600 டிஎன்டி பைக்கில் 600சிசி திறன் கொண்ட இன்லைன் 4-சிலிண்டர், லிக்யூடு கூல்ட் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, 85 பிஎச்பி மற்றும் 55 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் அப்டேட் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது.

இந்தியர்களுக்கு பிடித்த மாடலை அப்டேட் செய்த பெனெல்லி... பைக்கின் ஸ்பை படங்கள் கசிவு...

இந்த நேக்கட் ரக ஸ்ட்ரீட் பைட்டர் பைக்கை பெனெல்லி நிறுவனம், வருகின்ற நவம்பர் மாதம் இத்தாலியில் நடைபெற இருக்கும் 2019 இஐசிஎம்ஏ வாகன கண்காட்சியில் அந்நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கின்றது. இதுமட்டுமின்றி, இத்தாலியைச் சேர்ந்த இந்த சீனர் நிறுவனம், அதன் தயாரிப்புகள் அனைத்தையும் அப்டேட் செய்து களமிறக்க இருப்பதாக கூறப்படுகின்றது. இந்த அப்டேட் டிஎன்டி 600ஐ பைக் இந்தியாவில் 2020ம் ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.s

Most Read Articles
English summary
2020 Benelli TNT 600i Spied Undisguised. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X