புதிய கவாஸாகி இசட்எக்ஸ் 14ஆர் பைக்கிற்கு முன்பதிவு!

2020 மாடலாக வர இருக்கும் புதிய கவாஸாகி இசட்எக்ஸ் 14ஆர் பைக்கிற்கு முன்பதிவு துவங்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

புதிய கவாஸாகி இசட்எக்ஸ் 14ஆர் பைக்கிற்கு முன்பதிவு!

புதிய கவாஸாகி நின்ஜா இசட்எக்ஸ் 14ஆர் பைக் மாடலானது குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. வரும் 19ந் தேதி வரை மட்டுமே முன்பதிவு ஏற்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

புதிய கவாஸாகி இசட்எக்ஸ் 14ஆர் பைக்கிற்கு முன்பதிவு!

அடுத்த ஆண்டு ஏப்ரலில் புதிய பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வர இருப்பதால், அதற்கு இணையான தரத்துடன் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல் அறிமுகம் செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கிறது. எனவே, இந்த புதிய வண்ணத் தேர்வுகளுக்கான முன்பதிவை குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே செய்வதற்கு கவாஸாகி திட்டமிட்டுள்ளதாக டீலர் வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.

புதிய கவாஸாகி இசட்எக்ஸ் 14ஆர் பைக்கிற்கு முன்பதிவு!

இந்த புதிய மாடலானது மெட்டாலிக் டயாப்லோ பிளாக் மற்றும் கோல்டன் பிளேஸ்டு க்ரீன் ஆகிய இரண்டு வண்ணத் தேர்வுகளில் வர இருக்கிறது.

புதிய கவாஸாகி இசட்எக்ஸ் 14ஆர் பைக்கிற்கு முன்பதிவு!

தற்போது விற்பனையில் இருக்கும் 2019 கவாஸாகி நின்ஜா இசட்எக்ஸ்-14ஆர் பைக்கிற்கும், 2020 மாடலுக்கும் டிசைனில் எந்த வித்தியாசமும் இருக்காது. புதிய வண்ணத் தேர்வுகளில் வருவதே முக்கிய மாற்றமாக எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய கவாஸாகி இசட்எக்ஸ் 14ஆர் பைக்கிற்கு முன்பதிவு!

இந்த பைக்கின் எஞ்சினிலும் மாற்றங்கள் இல்லை. தற்போதைய மாடலில் பயன்படுத்தப்படும் 1,441 சிசி 4 சிலிண்டர் எஞ்சின் அதிகபட்சமாக 207 பிஎச்பி பவரையும், 158.2 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

Most Read: உச்சகட்ட பாதுகாப்பு வசதிகளுடன் பிரதமர் மோடிக்கு புதிய விமானம்... இதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா?

புதிய கவாஸாகி இசட்எக்ஸ் 14ஆர் பைக்கிற்கு முன்பதிவு!

தற்போது முன்பதிவு ஏற்கப்படும் மாடலே தற்போதைய தலைமுறை மாடலின் கடைசி பதிப்பாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 2012ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த மாடலானது விரைவில் புதிய தலைமுறை மாடலாக வெளிவர இருக்கிறது. எனவே, பெரிய அளவிலான மாற்றங்களுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read: வாரே வா... 7 புதிய கார்களை அறிமுகப்படுத்துகிறது மஹிந்திரா

புதிய கவாஸாகி இசட்எக்ஸ் 14ஆர் பைக்கிற்கு முன்பதிவு!

தற்போது முன்பதிவு ஏற்கப்படும் மாடலானது ரூ.19.70 லட்சம் என்ற தற்போதைய மாடல் விலையிலேயே விற்பனைக்கு கிடைக்கும். விலையில் எந்த மாற்றமும் இல்லை என்பதும் கவனிக்கத்தக்க விஷயமாக கூறலாம்.

Source: Autocarindia

Most Read Articles

மேலும்... #கவாஸாகி #kawasaki
English summary
According to report, Kawasaki dealers are taking bookings for the 2020 Ninja ZX-14R. The new version is expected to be offered in limited numbers.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X