முதல் முறையாக காட்சியளித்த கேடிஎம் நிறுவனத்தின் புதிய மாடல் பைக்: ஸ்பை படங்கள் உள்ளே!

கேடிஎம் நிறுவனம் ட்யூக் 390 மோட்டார்சைக்கிளை 2020ம் ஆண்டிற்கு ஏற்ப உருவாக்கியுள்ளது. இந்த மோட்டார்சைக்கிளை முதல் முறையாக சாலையில் வைத்து பரிசோதனைச் செய்தபோது கேமிராவின் சிக்கியது. இதுகுறித்த முழுமையான தகவலை இந்த பதிவில் காணலாம்.

முதல் முறையாக காட்சியளித்த கேடிஎம் நிறுவனத்தின் புதிய மாடல் பைக்: ஸ்பை படங்கள் உள்ளே!

ஆஸ்திரியன் நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் கேடிஎம் நிறுவனம், இந்தியாவில் பஜாஜ் நிறுவனத்துடன் இணைந்து அதன் மோட்டார்சைக்கிள்களை விற்பனைச் செய்து வருகிறது. அவ்வாறு, இந்த நிறுவனம் கடந்த 2012ம் ஆண்டு ட்யூக்390 மாடல் மோட்டார்சைக்கிளை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருந்தது.

முதல் முறையாக காட்சியளித்த கேடிஎம் நிறுவனத்தின் புதிய மாடல் பைக்: ஸ்பை படங்கள் உள்ளே!

இதைத்தொடர்ந்து, இந்த மாடல் மோட்டார்சைக்கிளில் பெரும்பாலான அளவில் மாற்றங்களைச் செய்து கடந்த 2017ம் ஆண்டில் புதிய மாடலாக அறிமுகம் செய்தது. இந்த மாற்றங்கள் முந்தைய மாடலைக்காட்டிலும் மிகப்பெரிய அளவிலான தோற்றத்தையும், அடுத்த தலைமுறைக்கான லுக்கினையும் கொடுத்தது. மேலும், இந்த மோட்டார்சைக்கிளின் சக்தியும் கணிசமாக உயர்ந்தது. இதனால், சற்று பவர்ஃபுல்லான மோட்டார்சைக்கிளாக இது மாறியது.

முதல் முறையாக காட்சியளித்த கேடிஎம் நிறுவனத்தின் புதிய மாடல் பைக்: ஸ்பை படங்கள் உள்ளே!

இந்நிலையில், கேடிஎம் ட்யூக் 390 மாடலை கூடுதலாக மேம்படுத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவ்வாறு, அப்கிரேட் செய்யப்பட்ட ட்யூக் 390 மோட்டார்சைக்கிளை சாலையில் வைத்து பரிசோதனைக்கு உட்படுத்தும் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. இதுகுறித்த புகைப்படங்களை ரைட்அபார்ட் என்ற இணையதளம் வெளியிட்டுள்ளது.

READ MORE: குறைந்த செலவில் அதிக மைலேஜ் கிடைப்பதற்காக ஸ்கூட்டரில் உரிமையாளர் செய்த காரியம் இதுதான்... வீடியோ

முதல் முறையாக காட்சியளித்த கேடிஎம் நிறுவனத்தின் புதிய மாடல் பைக்: ஸ்பை படங்கள் உள்ளே!

சோதனைச் செய்யப்பட்ட கேடிஎம் ட்யூக்390 மோட்டார்சைக்கிள், 2020ம் ஆண்டிற்கான மாடலாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த மோட்டார்சைக்கிள், பிக்னி ஸ்டைலில் கட்டுமஸ்தான பாடி அமைப்பைப் பெற்றுள்ளது. இந்த ட்யூக்390 தற்போது விற்பனையில் இருக்கும் மாடலைக் காட்டிலும் நீளமானதாக இருக்கின்றது.

முதல் முறையாக காட்சியளித்த கேடிஎம் நிறுவனத்தின் புதிய மாடல் பைக்: ஸ்பை படங்கள் உள்ளே!

இந்த புதிய தலைமுறை கேடிஎம் ட்யூக் 390 பைக்கில் எல்இடி முகப்பு விளக்கு மற்றும் இன்வெர்டட் ஃபோர்க்குகள் இடம்பெற்றுள்ளன. அதேசமயம், இந்த மோட்டார்சைக்கிளில் புதிய ரகத்திலான சேஸிஸ் அமைப்பு கொடுத்திருப்பதை பக்கவாட்டு ஸ்பை புகைப்படங்கள் ஊர்ஜிதப்படுத்துகின்றன. மேலும், ஸ்விங்ரமும் புதிதாக உள்ளது.

முதல் முறையாக காட்சியளித்த கேடிஎம் நிறுவனத்தின் புதிய மாடல் பைக்: ஸ்பை படங்கள் உள்ளே!

அதேபோன்று, இந்த மோட்டார்சைக்கிளின் பின்புறம் பார்ப்பதற்கு சற்று பெரிய அளவில் காட்சியளிக்கிறது. அவ்வாறு, அதன் டெயில் லைட் வித்தியாசமான ஸ்டைலில் அமைக்கப்பட்டுள்ளது. இத்துடன் தொழில்நுட்ப வசதியாக இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால், இது பழைய மாடலில் பகிரப்பட்டுள்ளது.

முதல் முறையாக காட்சியளித்த கேடிஎம் நிறுவனத்தின் புதிய மாடல் பைக்: ஸ்பை படங்கள் உள்ளே!

ஒட்டு மொத்தத்தில் இந்த மோட்டடார்சைக்கிளை சற்று உற்று நோக்கினால், சிறு சிறு மாற்றங்களை பெற்றுள்ளன. அவ்வாறு, சிலிண்டர் ஹெட் மற்றும் எக்ஸாஸ்ட் சிஸ்டம் புதிய மாற்றங்களைப் பெற்றுள்ளன. மாற்றம் செய்யப்பட்ட இந்த எஞ்ஜின் அதிக சக்தியைக் கொடுக்குமா..? என்பது மோட்டார்சைக்கிளின் அறிமுகத்திற்கு பின்னரே தெரிய வரும். ஆனால், புதிதாக மாற்றம் செய்யப்பட்டுள்ள சைலென்சர் பிஎஸ்6 தரத்திற்கு இணையானது என்பது தெரியவருகின்றது.

READ MORE: விரைவிலேயே ஷோரூம்களில் காட்சிக்குள்ளாக இருக்கும் உங்கள் சூப்பர் ஸ்டார் கார்: சிறப்பு தகவல்!

முதல் முறையாக காட்சியளித்த கேடிஎம் நிறுவனத்தின் புதிய மாடல் பைக்: ஸ்பை படங்கள் உள்ளே!

இதைத்தவிர 2020 கேடிஎம் ட்யூக் 390 மாடலில் பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் சஸ்பென்ஷன் அமைப்பும் சில மாற்றங்களைக் கொண்டிருக்கிறது. இத்தகைய மாற்றங்களைப் பெற்ற இந்த புதிய ட்யுக் 390 மோட்டார்சைக்கிளை நடப்பாண்டின் இறுதியில் நிகழவிருக்கும் இஐசிஎம்ஏ கண்காட்சியில் காட்சிப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

மேலும்... #கேடிஎம் #ktm
English summary
2020 KTM Duke 390 Spied Testing For 1st Time. Read In Tamil.
Story first published: Monday, April 29, 2019, 10:28 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X