சென்னையின் சாலைகளில் வட்டமிட்ட அடுத்த தலைமுறை தண்டர்பேர்டு... என்ன ஸ்பெஷல்...!

அடுத்த தலைமுறை தண்டர்பேர்டு 350 மாடலை ராயல் என்பீல்டு நிறுவனம், தலைநகர் சென்னையில் வைத்து பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

சென்னையின் சாலைகளில் வட்டமிட்ட அடுத்த தலைமுறை தண்டர்பேர்டு... என்ன ஸ்பெஷல்...!

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் 2020 தண்டர்பேர்டு 350 மாடல் பரிசோதனைக்கு உட்படுத்தும்போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. இம்முறை, இந்த பைக் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் வைத்து பலபரீட்சையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இதனை பரிசோதனை வாகனத்தில் இடம் பெற்றிருந்த பதிவெண் உறுதி செய்கின்றது.

சென்னையின் சாலைகளில் வட்டமிட்ட அடுத்த தலைமுறை தண்டர்பேர்டு... என்ன ஸ்பெஷல்...!

மேலும், பைக் குறித்த ஸ்பை படங்களை அசோக் ஆர்ஷ் என்ற நபர் இணையத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்களை நீங்கள் கீழே காணலாம்...

தற்போது வெளியாகியிருக்கும் ஸ்பை படங்கள்மூலம், அடுத்த வருடம் விற்பனைக்கு வரவிருக்கும் தண்டர்பேர்டு பைக் பெற்றுள்ள சிறப்பம்சங்கள் குறித்த தகவலும் கசிந்துள்ளன. இதுகுறித்த செய்தியை ரஷ்லேன் ஆங்கில இணையதளம் வெளியிட்டுள்ளது.

சென்னையின் சாலைகளில் வட்டமிட்ட அடுத்த தலைமுறை தண்டர்பேர்டு... என்ன ஸ்பெஷல்...!

அந்தவகையில், 2020 ராயல் என்பீல்டு தண்டர்பேர்டு 350 பைக்கில் பிஎஸ்-6 தரத்திலான எலெக்ட்ரானிக் ப்யூவல் இன்ஜெக்சன் திறன்கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது.

சென்னையின் சாலைகளில் வட்டமிட்ட அடுத்த தலைமுறை தண்டர்பேர்டு... என்ன ஸ்பெஷல்...!

முன்னதாக இதேபோன்று ஸ்பை செய்யப்பட்ட கிளாசிக் மாடலில் காணப்படாத சில ஸ்டைலான பாகங்கள் இந்த தண்டர்பேர்டு மாடலில் காணப்படுகின்றது. ஆகையால், இந்த நிறுவனத்தின் கிடைக்கும் மாடல்களில், முன்னெப்போதும் இடம்பெறாத சில அம்சங்கள் 2020 தண்டர்பேர்டு பைக்கில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சென்னையின் சாலைகளில் வட்டமிட்ட அடுத்த தலைமுறை தண்டர்பேர்டு... என்ன ஸ்பெஷல்...!

அந்தவகையில், புதிய தண்டர்பேர்டு பைக் ஸ்போர்ட்டி லுக்கிலான சில அம்சங்களைப் பெற்றிருக்கின்றது. இத்தகைய துடிப்பான ஸ்டைலை பைக்கிற்கு வழங்கும் வகையில், அடுத்த தலைமுறை ஜே பிளாட்பார்மில் வைத்து, ராயல் என்பீல்டு நிறுவனம் புதிய தண்டர்பேர்டு பைக்கை தயார் செய்துள்ளது.

மேலும், இந்த அடுத்த தலைமுறை தண்டர்பேர்டு 350 பைக்கை அதன் பழைமை வாய்ந்த ரெட்ரோ ஸ்டைல் மாற்றமடையாமல் இருக்கும் வண்ணம், அதன் ஒவ்வொரு பாகங்களும் ரீ டிசைன் செய்யப்பட்டுள்ளது.

சென்னையின் சாலைகளில் வட்டமிட்ட அடுத்த தலைமுறை தண்டர்பேர்டு... என்ன ஸ்பெஷல்...!

இந்த ஸ்பை புகைப்படத்தில் பைக்கின் பின்பகுதி மட்டுமே காட்சிக்குள்ளாகியுள்ளது. மேலும், இந்த ஸ்பை படங்கள் தண்டர்பேர்டின் 350எக்ஸ் மாடல் என்று கூறப்படுகின்றது. இந்த புகைப்படத்தில், பைக்கின் பின்புறத்தில் குறுகலான ஃபென்டர் பொருத்தப்பட்டிருப்பது தெரிய வருகின்றது. அதேபோன்று, அதன் டெயில் சற்று உயரமான இடத்தில் பெரியளவில் காணப்படுகின்றது. இத்துடன், வட்டவடிவிலான இன்டிகேட்டர்கள் சற்று கீழே இணைக்கப்பட்டுள்ளது.

சென்னையின் சாலைகளில் வட்டமிட்ட அடுத்த தலைமுறை தண்டர்பேர்டு... என்ன ஸ்பெஷல்...!

இதைத்தொடர்ந்து, பைக்கின் இருக்கை அமைப்பைப் பார்த்தோமேயானால், அவை ஸ்பிளிட் செய்யப்பட்ட தோற்றத்தில் காணப்படுகின்றது. மேலும், இதில் இரு கிராப் ரெயில்கள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோன்று, இந்த சோதனை மாடலில் அலாய் வீல் பொருத்தப்பட்டுள்ளது. இது, தண்டர்பேர்டு எக்ஸ் வேரியண்ட்தான் என்பதை உறுதி செய்கின்றது. ஏனென்றால், எக்ஸ் வேரியண்டில் மட்டும்தான் அலாய் வீல்கள் காணப்படுகின்றது.

சென்னையின் சாலைகளில் வட்டமிட்ட அடுத்த தலைமுறை தண்டர்பேர்டு... என்ன ஸ்பெஷல்...!

அதேசமயம், 2020 ராயல் என்பீல்டு தண்டர்பேர்டு 350 எக்ஸ் மாடலில் சற்று ஸ்போர்ட்டி லுக்கிலான ப்யூவல் டேங்க் இணைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, சென்டர் பேனல், ஹெட்லேம்ப் ஹவுஸிங் மற்றும் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் உள்ளிட்டவை பிரத்யேகமான ஸ்டைலில் பொருத்தப்பட்டுள்ளன.

ராயல் என்பீல்டு நிறுவனம், இத்தருணத்தை பயன்படுத்தி, தண்டர்பேர்டு மாடலில் பல புதிய வண்ணங்களை அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகின்றது.

சென்னையின் சாலைகளில் வட்டமிட்ட அடுத்த தலைமுறை தண்டர்பேர்டு... என்ன ஸ்பெஷல்...!

இத்துடன், 2020 தண்டர்பேர்டு பைக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ள மிகப் பெரிய மாற்றமாக அதன் எஞ்ஜின் இருக்கின்றது. அவ்வாறு, எஞ்ஜினுக்கு ரெட்ரோ ஸ்டைலிலான வடிவமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் அடுத்த வருடம் அமலுக்குள்ளாக இருக்கும் மாசு உமிழ்விற்கு ஏற்பவாறும் தயார் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது.

சென்னையின் சாலைகளில் வட்டமிட்ட அடுத்த தலைமுறை தண்டர்பேர்டு... என்ன ஸ்பெஷல்...!

அதேசமயம், முந்தைய மாடல் எஞ்ஜினைக் காட்டிலும் சற்று அதிகமான பவரை இது வெளிப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போதைய, தண்டர்பேர்டு பைக்கின் எஞ்ஜின் 19.8 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கின்றது. இது கணிமசாக அதிகரிக்கப்பட வாய்ப்பு இருக்கின்றது.

சென்னையின் சாலைகளில் வட்டமிட்ட அடுத்த தலைமுறை தண்டர்பேர்டு... என்ன ஸ்பெஷல்...!

மேலும், இந்த பிஎஸ்-6 தரத்திலான எஞ்ஜின் ஸ்டாண்டர்டு எலெக்ட்ரானிக் ப்யூவல் இன்ஜெக்சன் தரத்தில் உருவாக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது. இந்த பைக்குறித்த முந்தைய ஸ்பை இடங்கள், அடுத்த தலைமுறை தண்டர்பேர்டு பைக்கில் கிக் ஸ்டார்ட் இல்லை என்பதை காட்சிப்படுத்தியுள்ளது.

சென்னையின் சாலைகளில் வட்டமிட்ட அடுத்த தலைமுறை தண்டர்பேர்டு... என்ன ஸ்பெஷல்...!

ஸ்டைல் மற்றும் எஞ்ஜினைத் தவிர 2020 ராயல் என்பீல்டு தண்டர்பேர்டு 350 பைக்கின் தரத்தையும் அந்நிறுவனம் அதிகரித்திருப்பதாக கூறப்படுகின்றது. இத்தகைய பிரத்யேக வசதியைக் கொண்ட தண்டர்பேர்டு 350 மாடலை ராயல் என்பீல்டு நிறுவனம், நடப்பாண்டில் நடைபெற இருக்கும் இஐசிஎம்ஏ 2019 வாகன கண்காட்சியில் அறிமுகம் செய்ய இருக்கின்றது. இதைத்தொடர்ந்து, பைக்கின் விற்பனைகுறித்த அறவிப்பை அந்நிறுவனம் வெளியிட இருக்கின்றது.

Most Read Articles

English summary
2020 Royal Enfield Thunderbird BS6 Spied Testing. Read In Tamil.
Story first published: Saturday, July 6, 2019, 9:56 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X