TRENDING ON ONEINDIA
-
டெல்லி உட்பட வட மாநிலங்களை குலுக்கிய நில அதிர்வு.. மக்கள் பீதி
-
டோல்கேட் விஷயத்தில் மோடி எடுத்த அதிரடி முடிவு இதுதான்... லோக்சபா தேர்தல் நெருங்குவதால் மெகா திட்டம்...
-
Yogi Babu:அடம்பிடிக்கும் வடிவேலு: இம்சை அரசன் ஆகும் யோகி பாபு?
-
லெஸ்பியன், கே போன்றோருக்கு எப்படிப்பட்ட பாலியல் ரீதியான பிரச்சினைகள் உண்டாகும்?
-
சென்னை பெரியமேடு லாட்ஜ் படுக்கை அறையில் இரகசிய கேமராகள்.! உஷார் மக்களே
-
முக்கிய வீரர் யார்? கோலியா? தோனியா? முகமது கைஃப் யாரை சொன்னார் தெரியுமா?
-
பாக் பொருளாதாரத்துக்கு நரம்படி கொடுத்த இந்தியா..? Most Favored Nation ஸ்டேட்டஸால் என்ன ஆகும்..?
-
புல்வாமா - தாக்குதல் நடந்தது இப்படி ஒரு அழகான இடத்துலயா? அடக் கடவுளே!
புதிய பஜாஜ் பல்சர் 180Fன் விவரம் கசிந்தன: புகைப்படம், விலை முழு விவரம்!
பஜாஜ் நிறுவனத்தின் புதிய தயாரிப்பான பல்சர் 180Fன் விவரங்கள் கசிந்துள்ளன. இதுகுறித்த விவரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.
இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கும் பஜாஜ் நிறுவனம், மக்களின் தேவையை அறிந்து தனது வாகனங்களைத் தயாரித்து வருகிறது. அந்த வகையில் மிகவும் மலிவான விலையில் நவீன ரக மாடல் பைக்குகளை அந்நிறுவனம் தயாரித்து விற்பனைச் செய்து வருகிறது. மேலும், பஜாஜ் தயாரித்து வெளியிட்ட வாகனங்கள் அனைத்தும் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்துள்ளன.
அதில், இளைஞர்களின் மத்தியில் மிகப்பெரிய இடத்தைப் பிடித்த மாடல் தான் பல்சர். இந்த பைக்கை வைத்து தமிழ் திரையுலகில் ஒரு படமே தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த அளவிற்கு மிகவும் பிரசித்திப் பெற்றது பல்சர். மேலும், இந்த பைக்கின் ரம்மியமான தோற்றம், சாலையில் செல்லும்போது அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் அமைந்திருந்தது.
இந்த நிலையில் தான் ராயல் என்ஃபீல்டின் கிளாசிக் மாடல் பைக் இளைஞர்களின் மத்தியில் பரவ ஆரம்பித்தது. இதைத்தொடர்ந்து, பல்சரின் வாசம் மெல்ல மெல்ல குறைய ஆரம்பித்தது. இந்த சூழலில், தனது மார்கெட்டைக் தக்க வைத்தும் கொள்ளும் விதமாக பஜாஜ் நிறுவனம் டோமினோர் என்னும் புதிய மாடல் பைக்கை களமிறக்கியது.
இதைத்தொடர்ந்து, நீண்ட இடைவெளிக்குப் பின்னர் பஜாஜ் நிறுவனம் புதிய மாடல் ஒன்றை இந்த வருடம் அறிமுகம் செய்ய உள்ளது. அதன்படி, புதிதாக விற்பனை வரவிருக்கும் அந்த புதிய மாடலும் இளைஞர்களைக் குறிவைத்தே தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், அதற்கு முந்தைய மாடலான பல்சர் 220F-ஐ தழுவி, பல்சர் 180F என்னும் புதிய மாடல் உருவாக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த புதிய மாடலின் புகைப்படம் மற்றும் விலை விவரங்கள் கசிந்து உள்ளன. அதிநவீன தொழில்நுட்பத்தில உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய மாடல் கவர்ச்சிக்கு குறைவில்லாமல் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், பல்சருக்கே உரித்தான, லோகோ, ஹேண்டில் பார், பெயர் ஸ்டிக்கர் ஆகியவை இதில் இடம் பெற்றுள்ளன.
பல்சர் 220Fம், 180Fம் ஒர் சேஸிஸைப் பெற்றிருப்பதால், பல்சர் 180Fன் வருகையானது பல்சர் 220Fன் விற்பனையை பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறு. இருப்பினும் பைக் எஞ்ஜின் பவரானது சற்று மாறுபட்டிருப்பதால் பல்சர் 220Fன் விற்பனை பாதிக்காது என பஜாஜ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
MOST READ: ராயல் என்ஃபீல்ட்650 பர்ஸ்ட் சர்வீஸ் பில் எவ்வளவு தெரியுமா? தெரிந்தால் ஷாக் ஆயிடுவீங்க!
அதன்படி, பல்சர் 180Fல் சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்ட் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 17Bhp மற்றும் 14 Nm டார்க்யு திறனையும் வெளிப்படுத்தும். மேலும், இந்த வாகனம் 5 ஸ்பீட் டிரான்ஸ்மிஷனைப் பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து, புதிதாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த பைக் தற்போதைய பாதுகாப்பு வசதிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டிருப்பதால் இதில் ஏபிஎஸ் வசதிக் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த புதிய மாடல் பல்சர் 180F பைக் ரூ. 86,500 என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.