மலிவு விலை மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்... ஆம்பியர் அதிரடி வெளியீடு...

ஆம்பியர் நிறுவனம் அதன் மலிவு விலை மின்சார ஸ்கூட்டரை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

மலிவு விலை மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்... ஆம்பியர் அதிரடி வெளியீடு...

பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கும் ஆம்பியர் மின் வாகன உற்பத்தி நிறுவனம், ரியோ எலைட் என்ற புத்தம் புதிய மின்சார ஸ்கூட்டரை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

இது குறைந்த வேகத்தில் இயங்கக் கூடிய ஓர் மின் ஸ்கூட்டராகும். இந்த புதிய மாடலுக்கு எக்ஸ்-ஷோரூம் விலையாக 45,099 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது, பெங்களூரு எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.

மலிவு விலை மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்... ஆம்பியர் அதிரடி வெளியீடு...

இந்த பைக்கிற்கான புக்கிங் தற்போது அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தளத்தில் தொடங்கியிருக்கின்றது. இதற்கு முன்தொகையாக ரூ. 1,999 என்ற குறைந்தபட்ச தொகையே வசூலிக்கப்பட்டு வருகின்றது.

இந்த ஸ்கூட்டர் அதிகபட்சமாக 25கிமீ வேகத்தில் செல்லும் திறனைப் பெற்றிருக்கின்றது. இது, அதிகபட்சமாக ஒரு முழுமையான சார்ஜில் 55-இல் இருந்து 60 கிமீ தூரம் வரையிலான ரேஞ்சை வழங்குகின்றது.

மலிவு விலை மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்... ஆம்பியர் அதிரடி வெளியீடு...

இதில், 55 கிமீ என்ற ரேஞ்சை நகர்புற பயணத்திலும், 60 கிமீ என்ற வேகத்தை நெடுஞ்சாலைகளிலும் வழங்குகின்றது இந்த ரியோ எலைட் மின்சார ஸ்கூட்டர்.

இதற்கு ஏற்ப வகையிலான 48V-20Ah பேட்டரி இணைக்கப்பட்டுள்ளது. இது முழுமையான சார்ஜை சாதாரண பிளக் பாயிண்டில் பெறுவதற்கு குறைந்தது 6 மணி நேரங்கள் பிடித்துக் கொள்ளலாம் என தெரிகின்றது.

மலிவு விலை மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்... ஆம்பியர் அதிரடி வெளியீடு...

இதன் வேகம் சற்று குறைவானதாக காணப்பட்டாலும் இளைஞர்களைக் கவர்கின்ற வகையில் பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த மின்சார ஸ்கூட்டரில் காணப்படுகின்றது.

அந்தவகையில், மிகவும் ட்ரெண்டியான தோற்றத்திற்காக எல்இடி மின் விளக்குகள், டிஜிட்டல் டேஷ்போர்டு மற்றும் யுஎஸ்பி சார்ஜிங் பாயிண்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

மலிவு விலை மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்... ஆம்பியர் அதிரடி வெளியீடு...

மேலும், வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக இந்த மின்சார ஸ்கூட்டரை புக்கிங் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணமாக ஹெல்மெட் வழங்கப்பட உள்ளது.

ரியோ எலைட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சிவப்பு, வெள்ளை, நீலம் மற்றும் கருப்பு ஆகிய நான்கு விதமான வண்ணத் தேர்வில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மலிவு விலை மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்... ஆம்பியர் அதிரடி வெளியீடு...

ஆம்பியர் நிறுவனம், அதன் ஜீல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 50 ஆயிரம் யூனிட்டிற்கும் அதிகமாக விற்பனையைப் பெற்றிருக்கின்ற உற்சாகத்தில் இருக்கின்றது. இதை முன்னிட்டு இலவச காப்பீடு மற்றும் ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பாகங்கள் உள்ளிட்டவற்றை சலுகையாக வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது.

மலிவு விலை மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்... ஆம்பியர் அதிரடி வெளியீடு...

இந்த ஜீல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 1,200 W திறன் கொண்ட பிஎல்டிசி மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இத்துடன், 30Ah-60V லித்தியம்-அயன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

இந்த பேட்டரியை சாதாரண பிளக் பாயிண்டில் வைத்து சார்ஜ் செய்தால் 6 மணி நேரம் எடுத்துக் கொள்ளும். மேலும், முழுமையான சார்ஜில் குறைந்தது 75 கிமீ தூரம் வரை செல்ல முடியும்.

மலிவு விலை மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்... ஆம்பியர் அதிரடி வெளியீடு...

தொடர்ந்து, இந்த மின்சார ஸ்கூட்டரில் சிபிஎஸ் பிரேக்கிங்கிற்கு இணையான ஹார்மோனிக் பிரேக்கிங் சிஸ்டம், ட்யூப் லெஸ் டயர், ஃபுல்லி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், எல்இடி டிஆர்எல்கள் மற்றும் ஃபிரண்ட் க்ளோவ் பாக்ஸ் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் காணப்படுகின்றன.

இந்தியாவில் களமிறங்கும் புதிய எலெக்ட்ரிக் கார்... நம்ப முடியாத மிக குறைவான விலை... எவ்வளவு தெரியுமா?

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் புரட்சி தொடங்கி விட்டது. மலிவு விலை மின்சார ஸ்கூட்டரை அறிமுகம் செய்து ஆம்பியர் அதிரடி காட்டியுள்ள நிலையில், இங்கிலாந்தை சேர்ந்த எம்ஜி நிறுவனம் நீங்கள் நம்ப முடியாத மிக குறைவான விலையில், புதிய எலெக்ட்ரிக் கார் ஒன்றை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

இந்தியாவில் களமிறங்கும் புதிய எலெக்ட்ரிக் கார்... நம்ப முடியாத மிக குறைவான விலை... எவ்வளவு தெரியுமா?

இதன் விலை எவ்வளவு என தெரிந்தால் நீங்கள் ஆச்சரியத்தில் மூழ்குவது உறுதி. இதுகுறித்த விரிவான தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

இந்தியாவில் களமிறங்கும் புதிய எலெக்ட்ரிக் கார்... நம்ப முடியாத மிக குறைவான விலை... எவ்வளவு தெரியுமா?

இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்கள் மெல்ல மெல்ல பிரபலமடைய தொடங்கியுள்ளன. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசும் கூட, வழக்கமான பெட்ரோல், டீசல் வாகனங்களின் பயன்பாட்டை குறைத்து விட்டு, அதற்கு பதிலாக எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதில்தான் மிகவும் ஆர்வமாக உள்ளது.

இந்தியாவில் களமிறங்கும் புதிய எலெக்ட்ரிக் கார்... நம்ப முடியாத மிக குறைவான விலை... எவ்வளவு தெரியுமா?

எனவே எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மத்திய அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. மத்திய அரசு வழங்கி வரும் ஆதரவு மற்றும் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு காரணமாக பல்வேறு முன்னணி நிறுவனங்களும் புதிய எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்வதில் போட்டி போட்டு கொண்டு முனைப்புடன் செயலாற்றி வருகின்றன.

இந்தியாவில் களமிறங்கும் புதிய எலெக்ட்ரிக் கார்... நம்ப முடியாத மிக குறைவான விலை... எவ்வளவு தெரியுமா?

ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை சற்று அதிகமாக இருப்பது பின்னடைவாக உள்ளது. இந்த சூழலில், மிகவும் குறைவான விலையில் புதிய எலெக்ட்ரிக் கார் ஒன்றை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய எம்ஜி மோட்டார் நிறுவனம் திட்டமிட்டிருக்கும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த எம்ஜி மோட்டார் நிறுவனம் சமீபத்தில்தான் இந்தியாவில் காலடி எடுத்து வைத்தது.

இந்தியாவில் களமிறங்கும் புதிய எலெக்ட்ரிக் கார்... நம்ப முடியாத மிக குறைவான விலை... எவ்வளவு தெரியுமா?

இந்திய மார்க்கெட்டிற்கான எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் முதல் காரான ஹெக்டர் எஸ்யூவி கடந்த ஜூன் மாதம்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. பல்வேறு அசத்தலான வசதிகள், மிகவும் சவாலான விலை உள்ளிட்ட காரணங்களால், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் எம்ஜி ஹெக்டர் காருக்கு, மிக பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்தியாவில் களமிறங்கும் புதிய எலெக்ட்ரிக் கார்... நம்ப முடியாத மிக குறைவான விலை... எவ்வளவு தெரியுமா?

இந்த சூழலில், இந்திய மார்க்கெட்டிற்கான எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் 2வது தயாரிப்பு கடந்த டிசம்பர் 5ம் தேதி வெளியிடப்பட்டது. இது எலெக்ட்ரிக் எஸ்யூவி ரக கார் ஆகும். இஸட்எஸ் எனும் பெயரில் வெளியிடப்பட்டுள்ள இந்த கார் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் கார் அடுத்த மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.

இந்தியாவில் களமிறங்கும் புதிய எலெக்ட்ரிக் கார்... நம்ப முடியாத மிக குறைவான விலை... எவ்வளவு தெரியுமா?

எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் காரில், 44.5kWh, லிக்யூட்-கூல்டு என்எம்சி (NMC-Nickel Manganese Cobalt) பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால், 340 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்ய முடியும். பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை 8.5 வினாடிகளில் இந்த கார் எட்டி விடும்.

இந்தியாவில் களமிறங்கும் புதிய எலெக்ட்ரிக் கார்... நம்ப முடியாத மிக குறைவான விலை... எவ்வளவு தெரியுமா?

ஆனால் எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. வரும் ஜனவரி மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்போதுதான் விலை அறிவிக்கப்படவுள்ளது. எனினும் 22 லட்ச ரூபாய் முதல் 25 லட்ச ரூபாய்க்கு உள்ளாக, எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் விலை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் களமிறங்கும் புதிய எலெக்ட்ரிக் கார்... நம்ப முடியாத மிக குறைவான விலை... எவ்வளவு தெரியுமா?

இந்திய மார்க்கெட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி காருடன், எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி போட்டியிடவுள்ளது. ஆனால் எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் விலை அனைவராலும் வாங்க கூடிய அளவில் இருக்காது. எனவே குறைவான விலையில் புதிய எலெக்ட்ரிக் கார் ஒன்றை எம்ஜி களமிறக்கவுள்ளது.

இந்தியாவில் களமிறங்கும் புதிய எலெக்ட்ரிக் கார்... நம்ப முடியாத மிக குறைவான விலை... எவ்வளவு தெரியுமா?

அதாவது இந்திய மார்க்கெட்டில், 10 லட்ச ரூபாய்க்கும் குறைவான விலையில், புதிய எலெக்ட்ரிக் கார் ஒன்றை எம்ஜி மோட்டார் நிறுவனம் களமிறக்க திட்டமிட்டு வருகிறது. இதற்கான வேலைகளையும் எம்ஜி மோட்டார் செய்து வருகிறது. எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரான ராஜீவ் சாபா இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் களமிறங்கும் புதிய எலெக்ட்ரிக் கார்... நம்ப முடியாத மிக குறைவான விலை... எவ்வளவு தெரியுமா?

எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் வெளியிட்டு விழாவின் போது அவர் இந்த தகவலை பகிர்ந்து கொண்டார். ஆனால் காரின் வடிவம், எங்கே உற்பத்தி செய்வது? என்பது போன்ற விஷயங்களை எம்ஜி மோட்டார் நிறுவனம் இன்னும் முடிவு செய்யவில்லை என கூறப்படுகிறது. ஆனால் 10 லட்ச ரூபாய்க்கு குறைவான விலையில் ஒரு எலெக்ட்ரிக் கார் வந்தால், அது நிச்சயம் வரவேற்பை பெறும்.

இந்தியாவில் களமிறங்கும் புதிய எலெக்ட்ரிக் கார்... நம்ப முடியாத மிக குறைவான விலை... எவ்வளவு தெரியுமா?

இது தொடர்பாக ராஜிவ் சாபா கூறுகையில், ''இந்த மார்க்கெட்டில் முக்கியமான இடத்தில் இருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். மார்க்கெட்டில் உள்ள மற்ற முன்னணி நிறுவனங்களிடம் இருந்து எங்களை வேறுபடுத்தி காட்டுவதற்கான ஒரு வழிதான் இந்த எலெக்ட்ரிக் வாகனம். மற்ற முன்னணி நிறுவனங்கள் உடன் நம்மால் அவ்வளவு எளிதாக போட்டியிட முடியாது.

இந்தியாவில் களமிறங்கும் புதிய எலெக்ட்ரிக் கார்... நம்ப முடியாத மிக குறைவான விலை... எவ்வளவு தெரியுமா?

ஏனெனில் அவர்கள் இங்கே 25-30 ஆண்டுகளாக உள்ளனர். எனவே நாங்கள் எங்களை வேறுபடுத்தி காட்ட வேண்டும்'' என்றார். ஆனால் எம்ஜி நிறுவனத்தின் 10 லட்ச ரூபாய்க்கு உள்ளான எலெக்ட்ரிக் காரை உடனடியாக எதிர்பார்க்க முடியாது. இதற்கு ஒரு சில ஆண்டுகள் பிடிக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Most Read Articles

English summary
Ampere Launches Reo Elite E-Scooter In India. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X