விற்பனையில் புதிய உச்சம் தொட்ட ஆம்பியர் ஜீல்.. தமிழக தயாரிப்பிற்கு கிடைத்த அதீத வரவேற்பு...

ஆம்பியர் ஜீல் மின்சார ஸ்கூட்டருக்கு அதீத வரவேற்பு கிடைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த பதிவில் காணலாம்.

விற்பனையில் புதிய உச்சம் தொட்ட ஆம்பியர் ஜீல்.. தமிழக தயாரிப்பிற்கு கிடைத்த அதீத வரவேற்பு...

இருசக்கர வாகன உலகின் ஜாம்பவான் பஜாஜ் உட்பட வாகன உற்பத்தி நிறுவனங்கள் பல மின்சார வாகனங்களை அறிமுகம் செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றன.

இந்நிலையில், ஆம்பியர் வாகன உற்பத்தி நிறுவனம் அதன் மின்சார இருசக்கர வாகன விற்பனையில் ஓர் புதிய மைல் கல்லை எட்டியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விற்பனையில் புதிய உச்சம் தொட்ட ஆம்பியர் ஜீல்.. தமிழக தயாரிப்பிற்கு கிடைத்த அதீத வரவேற்பு...

அந்தவகையில், ஆம்பியர் நிறுவனத்தின் ஜீல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விற்பனை 50 ஆயிரம் யூனிட்டுகளைக் கடந்திருப்பதாக கூறப்படுகின்றது. இது நாட்டில் மின்சார ஸ்கூட்டருக்கு கிடைத்த நல்ல வரவேற்பாகப் பார்க்கப்படுகின்றது.

விற்பனையில் புதிய உச்சம் தொட்ட ஆம்பியர் ஜீல்.. தமிழக தயாரிப்பிற்கு கிடைத்த அதீத வரவேற்பு...

இந்த புதிய சாதனையை கொண்டாடும் வகையில், ஆம்பியர் நிறுவனம் மின்சார ஸ்கூட்டர்களுக்கு கவர்ச்சியான சலுகைகளை அறிவித்துள்ளது.

ஆம்பியர் ஓர் பெங்களூருவை மையமாகக் கொண்டு நிறுவனம் ஆகும். இதன் உற்பத்தி மையம் கோயம்புத்தூரில் இயங்கி வருகின்றது.

விற்பனையில் புதிய உச்சம் தொட்ட ஆம்பியர் ஜீல்.. தமிழக தயாரிப்பிற்கு கிடைத்த அதீத வரவேற்பு...

இந்நிறுவனம், தற்போது பெற்றிருக்கும் அதீத வரவேற்பை தன் வசமே நிலை நிறுத்திக் கொள்வதற்காக இலவச காப்பீட்டு திட்டத்துடன், ஆயிரம் ரூபாய் வரை மின் ஸ்கூட்டர்களுக்கான இலவச பாகங்கள் சலுகையையும் அறிவித்துள்ளது. இதில், என்ன மாதிரியான பாகங்கள் இலவசமாக வழங்கப்படும் என்ற தகவல் வெளியிடப்படவில்லை.

ஆம்பியர் நிறுவனத்தின் இந்த ஸ்கூட்டர்கள் இளைஞர்களைக் கவர்கின்ற வகையில் மிகச் சிறப்பான தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

விற்பனையில் புதிய உச்சம் தொட்ட ஆம்பியர் ஜீல்.. தமிழக தயாரிப்பிற்கு கிடைத்த அதீத வரவேற்பு...

இந்த மின்சார ஸ்கூட்டரில் 1,200 W திறன் கொண்ட பிஎல்டிசி மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இத்துடன், 30Ah 60V லித்தியனம்-அயன் பேட்டரி காணப்படுகின்றது.

இந்த பேட்டரியை சாதாரண பிளக் பாயிண்டின்மூலம் சார்ஜ் செய்தால் 6 மணி நேரம் எடுத்துக் கொள்ளும். மேலும், ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் குறைந்தது 75 கிமீ தூரம் வரை செல்ல முடியும்.

MOST READ: புதிய டோல் கட்டணம் பற்றி டுவிட்டரில் பகீர் புகார் அளித்த இளைஞர்... என்ன ஜி இதுலயும் பல்பா..!

விற்பனையில் புதிய உச்சம் தொட்ட ஆம்பியர் ஜீல்.. தமிழக தயாரிப்பிற்கு கிடைத்த அதீத வரவேற்பு...

இதன் எஞ்ஜின் 0-த்தில் இருந்து 50 கிமீ என்ற வேகத்தை 6 செகண்டிலேயே தொட்டுவிடும். இதன் உச்சபட்ச வேகம் 55 கிமீ ஆகும். இத்துடன், எக்கனாமி மற்றும் ஸ்பீடு மோட்கள் இதில் காணப்படுகின்றன. இந்த எலெக்ட்ரிக் பைக்கில் 75 கிலோ வரை மிகச் சுலபமாக ஏற்றிச் செல்ல முடியும்.

MOST READ: பாலியல் வீடியோவில் மட்டுமில்லைங்க மற்றொன்றிலும் சென்னை முதலிடம்... என்னனுதான் தெரிஞ்சிப்போமே..!

விற்பனையில் புதிய உச்சம் தொட்ட ஆம்பியர் ஜீல்.. தமிழக தயாரிப்பிற்கு கிடைத்த அதீத வரவேற்பு...

இதுதவிர, இந்த மின்சார ஸ்கூட்டரில் சிபிஎஸ் பிரேக்கிங்கிற்கு இணையான ஹார்மோனிக் பிரேக்கிங் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன், ட்யூப் லெஸ் டயர், ஃபுல்லி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், எல்இடி டிஆர்எல்கள் மற்றும் ஃபிரண்ட் க்ளோவ் பாக்ஸ் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

MOST READ: பெட்ரோல், டீசலுக்கு நீங்கள் செலவிடும் தொகை இனி குறையும்... மோடி அரசு மாஸ் திட்டம்... என்ன தெரியுமா?

விற்பனையில் புதிய உச்சம் தொட்ட ஆம்பியர் ஜீல்.. தமிழக தயாரிப்பிற்கு கிடைத்த அதீத வரவேற்பு...

இந்த ஆம்பியர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ. 67 ஆயிரம் என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலையாகும். இது, ஏத்தர் மற்றும் விரைவில் விற்பனைக்கு வரவுள்ள பஜாஜ் மின்சார ஸ்கூட்டர்களின் விலையைக் காட்டிலும் மிகக் குறைந்த விலையில் கிடைக்கின்றது. அதிலும், பிரிமியம் வசதிகளும் இதில் கிடைக்கின்றது.

Most Read Articles

English summary
Ampere Zeal Sales Cross Record 50k. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X