புதிய ஏப்ரிலியா 150 சிசி பைக் இந்திய வருகை விபரம்!

ஏப்ரிலியா நிறுவனத்தின் புதிய 150 சிசி பைக் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பது குறித்து புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய ஏப்ரிலியா 150 சிசி பைக் இந்திய வருகை விபரம்!

இத்தாலியை சேர்ந்த ஏப்ரிலியா நிறுவனம் பிரிமீயம் வகை பைக் மற்றும் ஸ்கூட்டர் தயாரிப்பில் சிறந்து விளங்குகிறது. இந்தியர்களின் மனதில் சிறப்பான இடத்தை பெற்றுவிட்ட இந்த நிறுவனம், கடந்த ஆண்டு கிரேட்டர் நொய்டாவில் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் இரண்டு 150 சிசி பைக்குகளை காட்சிக்கு வைத்திருந்தது.

புதிய ஏப்ரிலியா 150 சிசி பைக் இந்திய வருகை விபரம்!

ஏப்ரிலியா ஆர்எஸ்15 மற்றும் டூவோனோ 150 என்ற பெயரிலான இந்த இரண்டு பைக்குகளும் வாடிக்கையாளர்களை கவனத்தை வெகுவாக கவர்ந்தது. ஆனால், அந்த பைக்குகளை உடனடியாக விற்பனைக்கு கொண்டு வரும் திட்டம் இல்லை என்று ஏப்ரிலியா தெரிவித்தது சிறிது ஏமாற்றத்தை தந்தது.

புதிய ஏப்ரிலியா 150 சிசி பைக் இந்திய வருகை விபரம்!

இந்த நிலையில், ஏப்ரிலியாவின் இந்த இரண்டு புதிய 150 சிசி பைக் மாடல்களும் வரும் 2020ம் ஆண்டு பிப்ரவரியில் நடக்க இருக்கும் ஆட்டோ எக்ஸ்போவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக பைக்வாலே தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

புதிய ஏப்ரிலியா 150 சிசி பைக் இந்திய வருகை விபரம்!

அண்மையில் நடந்த டீலர் சந்திப்பு நிகழ்ச்சியின்போது, இந்த இரண்டு பைக்குகளையும் ஏப்ரிலியா பார்வைக்கு வைத்திருந்ததாக தகவல்கள் கூறுகின்றன. டீலர்களும் இந்த பைக் மாடல்களுக்கு அதிக வர்த்தக வாய்ப்பு இருப்பதாக கூறியதால், இந்த பைக்குகளை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கான ஆயத்தப் பணிகளை ஏப்ரிலியா துவங்கிவிட்டதாக தெரிகிறது.

புதிய ஏப்ரிலியா 150 சிசி பைக் இந்திய வருகை விபரம்!

புதிய ஏப்ரிலியா ஆர்எஸ்150 மற்றும் டூவோனோ 150 ஆகிய இரண்டு பைக்குகளிலுமே சிங்கிள் சிலிண்டர் கொண்ட 149 சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 17.7 பிஎச்பி பவரையும், 14 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஏப்ரிலியா 150 சிசி பைக் இந்திய வருகை விபரம்!

இந்த பைக்குகளில் முன்புறத்தில்40 மிமீ அப்சைடு டவுன் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் அட்ஜெஸ்ட்டபிள் மோனோ ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதேபோன்று, முன்சக்கரத்தில் 300 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் 218 மிமீ டிஸ்க் பிரேக்கும் கொடுக்கப்பட்டு இருக்கும். டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக் சிஸ்டமும், குயிக் ஷிஃப்டரும் ஆப்ஷனலாக வழங்கப்படும்.

புதிய ஏப்ரிலியா 150 சிசி பைக் இந்திய வருகை விபரம்!

ஏப்ரிலியா ஆர்எஸ்150 பைக் ஃபேரிங் பேனல்கள் கொண்ட ஸ்போர்ட்ஸ் பைக் மாடலாகவும், டூவோனோ 150 பைக் நேக்கட் ரக ஸ்ட்ரீட் ஃபைட்டர் மாடலாகவும் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இதில், ஆர்எஸ்150 பைக்கானது ஏப்ரிலியா நிறுவனத்தின் பிரபலமான ஆர்எஸ்வி4 சூப்பர் பைக்கின் டிசைன் அம்சங்களை பெற்றுள்ளது. டூவோனோ 150 பைக்கானது 1100 டூவோனோ வி4 பைக்கின் டிசைன் அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஏப்ரிலியா 150 சிசி பைக் இந்திய வருகை விபரம்!

இரண்டு பைக்குகளிலுமே எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி டெயில் லைட்டுகள், அனலாக்- டிஜிட்டல் மீட்டருடன் கூடிய செமி இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை கொடுக்கப்பட்டு இருக்கின்றன. ஏப்ரிலியாவின் முத்தாய்ப்பான பல டிசைன் அம்சங்களையும் காண முடிகிறது.

Source: Bikewale

Most Read Articles
மேலும்... #அப்ரிலியா #aprilia
English summary
Aprilia Motorcycles is set to introduce a new 150cc motorcycle in the Indian market. The new 150cc motorcycle from the Italian bike manufacturer will go on sale in India at the 2020 Auto Expo.
Story first published: Tuesday, September 17, 2019, 10:21 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X