சென்னையில் ஏத்தர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் டெலிவிரி துவங்கியது!

சென்னையில் ஏத்தர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவிரி கொடுக்கும் பணிகள் துவங்கியுள்ளது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

சென்னையில் ஏத்தர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் டெலிவிரி துவங்கியது!

பெங்களூரை சேர்ந்த ஏத்தர் எனர்ஜி நிறுவனம் ஏத்தர் 450 என்ற பெயரிலான முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது. சென்னை மற்றும் பெங்களூர் நகரங்களில் மட்டுமே முதல்கட்டமாக விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

சென்னையில் ஏத்தர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் டெலிவிரி துவங்கியது!

மேலும், சென்னையில் விற்பனைக்கு முன்னதாக பல்வேறு இடங்களில் சார்ஜ் ஏற்றும் நிலையங்களையும் அமைத்தது. இந்த நிலையில், ஏத்தர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் வினியோகிக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. சென்னையில் முதல் வாடிக்கையாளர் வசம் ஏத்தர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் டெலிவிரி கொடுக்கப்பட்டது.

சென்னையில் ஏத்தர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் டெலிவிரி துவங்கியது!

சென்னையில் முன்பதிவு செய்த 100 வாடிக்கையாளர்களுக்கு இந்த வாரம் ஏத்தர் 450 ஸ்கூட்டர்கள் டெலிவிரி கொடுக்கப்பட இருப்பதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. சென்னையில் உள்ள ஏத்தர் ஸ்பேஸ் ஷோரூமில், முதல் ஏத்தர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாடிக்கையாளருக்கு அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தருண் மேத்தா நேரடியாக டெலிவிரி கொடுத்தார்.

சென்னையில் ஏத்தர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் டெலிவிரி துவங்கியது!

சென்னையில் வாடிக்கையாளர்களின் வசதிக்காக 10 இடங்களில் மிக விரைவாக சார்ஜ் ஏற்றும் ஃபாஸ்ட் சார்ஜர் கட்டமைப்பு வசதிகளை ஏத்தர் நிறுவனம் அமைத்துள்ளது. சென்னையில் கொளத்தூரில் பைக்ஸ் அண்ட் பர்கர்ஸ் ரெஸ்ட்டாரண்ட், அண்ணா நகர் கோகோ ஜான்ட் 1728 ரெஸ்ட்டாரண்ட், கீழ்பாக்கம் சோல் கார்டன் பிரிஸ்டோ ரெஸ்ட்டாரண்ட், வடபழனியிலுள்ள ஃபோரம் விஜயா மால், கிண்டியிலுள்ள அட்வொர்க்ஸ் அலுவலக வளாகம் ஆகியவற்றில் ஃபாஸ்ட் சார்ஜர் நிலையங்கள் உள்ளன.

MOST READ: யாராலும் நம்ப முடியாத ஒரு பொய்யை சொன்ன வாடிக்கையாளர்... புக்கிங்கை அதிரடியாக கேன்சல் செய்தது ஜாவா...

சென்னையில் ஏத்தர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் டெலிவிரி துவங்கியது!

நீலாங்கரையிலுள்ள ஈஸ்ட் கோஸ்ட் அட் மெட்ராஸ் ஸ்கொயர் ரெஸ்டாரண்ட், அமைந்தகரையிலுள்ள அம்பா ஸ்கைவாக் மால், சவுத் போக் சாலையிலுள்ள நேச்சுரல்ஸ் சலூன், துரைப்பாக்கத்திலுள்ள கிரியேட்ஸ் ரிசார்ட், நுங்கம்பாக்கத்திலுள்ள ஏத்தர் ஸ்பேஸ் ஆகிய இடங்களில் ஏத்தர் க்ரிட் சார்ஜ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

MOST READ: இந்தியாவில் களமிறங்கும் சீனாவின் எலக்ட்ரிக் ரிக்‌ஷா... எப்படியுள்ளது பார்த்தீர்களா...

சென்னையில் ஏத்தர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் டெலிவிரி துவங்கியது!

வரும் டிசம்பர் மாதம் வரை சில இடங்களில் கட்டமில்லாமல் இலவசமாக சார்ஜ் ஏற்றிக் கொள்ளும் வாய்ப்பை ஏத்தர் வாடிக்கையாளர்கள் பெற முடியும். மேலும், பல இடங்களில் புதிய சார்ஜ் ஏற்றும் நிலையங்களை அமைக்கவும் ஏத்தர் திட்டமிட்டுள்ளது.

MOST READ: விளம்பரம் தேட போய் சிக்கலில் சிக்கிய இந்திய பைக் ரைடர்... ஆளை பிடித்து அதிரடி காட்டிய பூடான் போலீஸ்...

சென்னையில் ஏத்தர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் டெலிவிரி துவங்கியது!

புதிய ஏத்தர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 75 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும். மணிக்கு 80 கிமீ வேகம் வரை செல்லும். 0 - 40 கிமீ வேகத்தை 3.9 வினாடிகளில் தொட்டுவிடும்.

Most Read Articles

மேலும்... #ஏத்தர் #ather energy
English summary
Bangalore based Ather Energy has commenced the Ather 450 delivery workds in Chennai.
Story first published: Saturday, October 19, 2019, 14:54 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X