பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு புக்கிங் எப்போது?

பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான புக்கிங் துவங்குவது குறித்து புதிய தகவல் வெளியாகி இருக்கிறது.

பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு புக்கிங் எப்போது?

அண்மையில் பஜாஜ் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் இருசக்கர வாகன மாடலாக சேத்தக் அறிமுகமானது. பழைய பெயரிலேயே இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்தது. அத்துடன், எல்லோரையும் கவரும் வகையில் இதன் டிசைன் அம்சங்கள் இருந்ததால் பெரும் எதிர்பார்ப்பை கிளறியுள்ளது.

பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு புக்கிங் எப்போது?

இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான டெலிவிரி வரும் ஜனவரி மாதம் துவங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான ஆன்லைன் முன்பதிவு அடுத்த மாதம் துவங்கப்படலாம் என டீலர் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு புக்கிங் எப்போது?

மேலும், இது கேடிஎம் பைக் ஷோரூம்கள் வாயிலாக விற்பனைக்கு வரப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், பஜாஜ் ஆட்டோ நிறுவனமோ அல்லது கேடிஎம் டீலர்களோ முன்பதிவு குறித்து எந்த தகவலும் இல்லை. எனினும், உறுதியாக அடுத்த மாதம் வந்துவிடும் என்பது ஆட்டோமொபைல் மீடியாக்களின் கணிப்பாக உள்ளது.

பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு புக்கிங் எப்போது?

பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பெரிய அளவில் கவனத்தை ஈர்த்திருப்பது இதன் டிசைன் மிகச் சிறப்பாக வந்திருப்பதும், சிறப்பம்சங்களும்தான். இந்த ஸ்கூட்டர் ரெட்ரோ க்ளாசிக் எனப்படும் பாரம்பரிய டிசைன் அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு புக்கிங் எப்போது?

அடுத்து, எல்இடி ஹெட்லைட், எல்இடி பகல்நேர விளக்குகள், இண்டிகேட்டர்கள் மற்றும் டெயில் லைட்டுகள் இடம்பெற்றிருக்கும். இந்த ஸ்கூட்டரில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பயன்படுத்தப்பட்டு இருக்கும். பேக்லிட் வசதியுடன் சுவிட்சுகள், ஸ்டீல் பாடி ஆகியவையும் இதன் முக்கிய அம்சங்களாக இருக்கும்.

பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு புக்கிங் எப்போது?

இந்த ஸ்கூட்டரில் 4kW மின் மோட்டார் பொருத்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ஐபி67 தரத்திற்கு இணையான பேட்டரியும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த பேட்டரியை 5- 15 ஆம்பியர் எலெக்ட்ரிக் பாயிண்ட் மூலமாக சார்ஜ் செய்ய முடியும்.

பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு புக்கிங் எப்போது?

இரண்டு டிரைவிங் மோடுகளில் வர இருக்கிறது. ஸ்போர்ட் மோடில் வைத்து ஓட்டும்போது 85 கிமீ தூரம் வரையிலும், ஈக்கோ மோடில் வைத்து ஓட்டும்போது 95 கிமீ தூரம் வரையிலும் பயணிக்கும் வாய்ப்பை இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வழங்கும்.

பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு புக்கிங் எப்போது?

புதிய பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ.1 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. ஏத்தர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு நேரடி போட்டியாக இருக்கும் என்று தெரிகிறது. எனினும், பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் சிறப்பான டீலர் கட்டமைப்பு வசதிகள் இதற்கு வலு சேர்க்கும் விஷயமாக இருக்கும். புனே மற்றும் பெங்களூர் ஆகிய நகரங்களில் முதல் கட்டமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

Source: Bikewale

Most Read Articles
English summary
According to media report, Bajaj Chatak electric scooter online bookings will begin from next month.
Story first published: Tuesday, October 29, 2019, 17:37 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X