அசத்தும் அம்சங்களுடன் புதிய பஜாஜ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்... படங்களுடன் தகவல்கள்

பஜாஜ் நிறுவனத்தின் முதல் மின்சார ஸ்கூட்டர் இன்று அறிமுகம் செய்யப்படுள்ளது. சற்றுமுன் நடந்த இதற்கான நிகழ்ச்சியில் பஜாஜ் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, பஜாஜ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜீவ் பஜாஜ் ஆகியோர் கலந்து கொண்டு அறிமுகம் செய்தனர்.

அசத்தும் அம்சங்களுடன் புதிய பஜாஜ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்... படங்களுடன் தகவல்கள்

இதுவரை அர்பனைட் என்ற பெயரில் குறிப்பிடப்பட்டு வந்த இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர், பஜாஜ் நிறுவனத்தின் பெரும் புகழ்பெற்ற சேத்தக் ஸ்கூட்டர் பெயரிலேயே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பல லட்சக்கணக்கான இந்தியர்களின் நெஞ்சில் பழைய பஜாஜ் சேத்தக் கியர் ஸ்கூட்டர் நெருங்கிய பந்தத்தை பெற்றுள்ளது. எனவே, அதே பெயரிலேயே இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்திருப்பதன் மூலமாக மிக எளிதாக வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அசத்தும் அம்சங்களுடன் புதிய பஜாஜ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்... படங்களுடன் தகவல்கள்

இதுவரையில் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்கள் அனைத்தும் ஸ்டார்ட் அப் எனப்படும் புதிய நிறுவனங்கள்தான் அறிமுகம் செய்தன. ஹீரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனம் தனிப் பிரிவாக செயல்படுவதால், வாடிக்கையாளர்களிடம் அவ்வளவு நெருக்கமாக இன்னும் சேரவில்லை ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை பிரபலப்படுத்துவதற்கும், நாடு முழுவதும் டீலர் கட்டமைப்பை உருவாக்குவதற்கும் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

அசத்தும் அம்சங்களுடன் புதிய பஜாஜ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்... படங்களுடன் தகவல்கள்

ஆனால், இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன நிறுவனமான பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்த சந்தையில் முதலாவதாக களமிறங்கியுள்ளது. மேலும், பட்டித் தொட்டியெங்கும் பரவி இருக்கும் சேத்தக் பெயரிலேயே இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விரைவில் விற்பனைக்கு கொண்டு வர இருப்பது மிகப்பெரிய சாதக விஷயமாக இருக்கும். வலுவான டீலர்ஷிப் நெட்வொர்க்கையும் கைவசம் வைத்துள்ளது.

அசத்தும் அம்சங்களுடன் புதிய பஜாஜ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்... படங்களுடன் தகவல்கள்

புதிய பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டிசைன் மிக அற்புதமாக இருப்பது மிகப்பெரிய ப்ளஸ் பாயிண்ட்டாக கூறலாம். பாரம்பரிய டிசைன் அம்சங்களுடன் மார்க்கெட்டில் உள்ள எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் மிக நேர்த்தியான, கவரும் டிசைனிலான ஸ்கூட்டராக பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வந்துள்ளது மகிழ்ச்சியான விஷயம். இது நிச்சயம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மார்க்கெட்டில் பெரும் வரவேற்பை பெறுவதுடன், புதிய பாதையை அமைக்கும் என்று கருதலாம்.

அசத்தும் அம்சங்களுடன் புதிய பஜாஜ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்... படங்களுடன் தகவல்கள்

மேலும், டெல்லியிலிருந்து புனே நகருக்கு பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் அணிவகுப்பு பயணத்தையும் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி துவங்கி வைத்தார். இதன்மூலமாக, பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் தொழில்நுட்ப வல்லமையை அனைவரும் உணர்ந்து கொள்வதற்கான வாய்ப்பாக இருக்கும்.

அசத்தும் அம்சங்களுடன் புதிய பஜாஜ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்... படங்களுடன் தகவல்கள்

பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தற்போது பார்வைக்குத்தான் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரில் எல்இடி ஹெட்லைட்டுகள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை இடம்பெற்றுள்ளன. மேலும், தொடு உணர் வசதியுடன் கட்டுப்பாட்டு பட்டன்கள் மற்றும் இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. மொத்தமாக 6 வண்ணத் தேர்வுகளில் வர இருக்கிறது.

Most Read: சென்னை துறைமுகம் வழியாக கியா செல்டோஸ் காரின் ஏற்றுமதி துவங்கியது!

அசத்தும் அம்சங்களுடன் புதிய பஜாஜ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்... படங்களுடன் தகவல்கள்

பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஐபி-67 தரத்திற்கு இணையான என்சிஏ செல்கள் கொண்ட லித்தியம் அயான் பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை 5 - 15 ஆம்பியர் எலெக்ட்ரிக்கல் பாயிண்ட் மூலமாக சார்ஜ் ஏற்ற முடியும். பேட்டரியில் மின் இழப்பு ஏற்படுவதை தவிர்ப்பதற்கான நவீன தொழில்நுட்பமும் உள்ளது.

Most Read: இது புதுசா இருக்கே! டிராஃபிக்கில் தப்பிக்க துப்பாக்கியை நீட்டிய மோடி கட்சிக்காரர்... வைரல் வீடியோ!

அசத்தும் அம்சங்களுடன் புதிய பஜாஜ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்... படங்களுடன் தகவல்கள்

இந்த ஸ்கூட்டரில் ஈக்கோ மற்றும் ஸ்போர்ட் என இரண்டு விதமான டிரைவிங் மோடுகள் வழங்கப்பட்டுள்ளது. ஈக்கோ மோடில் வைத்து இயக்கும்போது, 95 கிமீ தூரமும், ஸ்போர்ட் மோடில் வைத்து இயக்கினால் 85 கிமீ தூரமும் பயணிக்க முடியும்.

Most Read: ரிவோல்ட் ஆர்வி400 எலக்ட்ரிக் பைக்கின் டெலிவிரி தொடங்கியது...

அசத்தும் அம்சங்களுடன் புதிய பஜாஜ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்... படங்களுடன் தகவல்கள்

ஆனால், இதன் விலை விபரம் இன்றைய நிகழ்ச்சியில் வெளியிடப்படவில்லை. வரும் ஜனவரி மாதத்தில் இந்த புதிய ஸ்கூட்டர் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. முதலில் புனே நகரிலும், தொடர்ந்து டெல்லியிலும் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

அசத்தும் அம்சங்களுடன் புதிய பஜாஜ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்... படங்களுடன் தகவல்கள்

பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் உற்பத்தி புனே நகரின் அருகிலுள்ள சகன் தொழிற்பேட்டையில் உள்ள பஜாஜ் ஆலையில் கடந்த மாதம் 26ந் தேதி துவங்கப்பட்டுள்ளது. இந்த உற்பத்திப் பிரிவில் 80 சதவீதம் பெண் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles

English summary
Bajaj Auto has unveiled of its first electric scooter, Chetak in India. It will be launched early next year.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X