புதிய பஜாஜ் சிடி110 பைக் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

கூடுதல் திறன் மிக்க எஞ்சினுடன் புதிய பஜாஜ் சிடி110 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கின் சிறப்பம்சங்கள், விலை விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய பஜாஜ் சிடி110 பைக் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

பஜாஜ் நிறுவனத்தின் சிடி100 பைக் மாடல் பட்ஜெட் விலை பைக் சந்தையில் மிகச் சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. அதிக மைலேஜ், குறைவான விலை, சிறப்பான டிசைன் ஆகியவற்றின் மூலமாக வாடிக்கையாளர்களை பஜாஜ் சிடி100 கவர்ந்துள்ளது. இந்தநிலையில், பஜாஜ் சிடி பிராண்டில் 110 சிசி எஞ்சின் மாடலும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த பைக் கிக் ஸ்டார்ட் மற்றும் எலெக்ட்ரிக் ஸ்டார்ட் ஆகிய இரண்டு மாடல்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

புதிய பஜாஜ் சிடி110 பைக் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய பஜாஜ் சிடி110 பைக்கின் கிக் ஸ்டார்ட் மாடலுக்கு ரூ.37,997 எக்ஸ்ஷோரூம் விலையும், எலெக்ட்ரிக் ஸ்டார்ட் மாடலுக்கு ரூ.44,352 எக்ஸ்ஷோரூம் விலையும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இந்த புதிய சிடி110 மாடலானது பஜாஜ் சிடி100 மற்றும் பிளாட்டினா 100 பைக்குகளுக்கு இடையிலான விலையில் நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது.

புதிய பஜாஜ் சிடி110 பைக் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய பஜாஜ் சிடி110 பைக்கில் எஞ்சின், சஸ்பென்ஷன், அலாய் வீல்கள் ஆகியவை கருப்பு வண்ணத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. 100சிசி சிடி மாடலிலிருந்து வேறுபடுத்தும் விதத்தில் புதிய பாடி டீக்கெல் ஸ்டிக்கருடன் வந்துள்ளது. சொகுசான இரக்கைகள், டேங்க் க்ரிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஃபோர்க்குகள் மற்றும் சைடு மிரர் ஸ்டால்க்குகளில் ரப்பர் கவர் பொருத்தப்பட்டுள்ளன.

புதிய பஜாஜ் சிடி110 பைக் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

பஜாஜ் பிளாட்டினா 110 பைக்கில் இருக்கும் அதே 115 சிசி ஏர்கூல்டு எஞ்சின்தான் புதிய சிடி110 பைக்கிலும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 8.6 பிஎச்பி பவரையும், 9.81 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

புதிய பஜாஜ் சிடி110 பைக் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

முந்புறத்தில் 125 மிமி டிராவல் கொண்ட டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புபறத்தில் 100 மிமீ டிராவல் கொண்ட காயில் ஸ்பிரிங் சஸ்பென்ஷனும் இடம்பெற்றுள்ளன. டிரம் பிரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. ஆன்ட்டி ஸ்கிட் பிரேக்கிங் பாதுகாப்பு வசதியும் உள்ளது.

புதிய பஜாஜ் சிடி110 பைக் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய பஜாஜ் சிடி110 பைக் மாடலானது கிளாஸ் எபோனி பிளாக், மேட் ஆலிவ் க்ரீன் மற்றும் கிளாஸ் ஃப்ளேம் ரெட் ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கும். டிவிஎஸ் ஸ்போர்ட் மற்றும் ஹீரோ எச்எஃப் டீலக்ஸ் ஆகிய பட்ஜெட் பைக் மாடல்களுடன் போட்டி போடும்.

Most Read Articles

English summary
Bajaj Auto has launched the CT110 in the Indian market. The Bajaj CT110 is offered with a starting price of Rs 37,997, ex-showroom (Delhi). The commuter-level motorcycle will be available in two variants: kick-start and electric-start.
Story first published: Wednesday, July 10, 2019, 19:33 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X