மஞ்சள் நிற தேனியாக மாறிய பஜாஜ் டோமினார் 400... காட்சிக்குள்ளாகியது 2020ம் ஆண்டிற்கான மாடல்...

பஜாஜ் நிறுவனத்தின் பிரபல மாடல்களில் ஒன்றான டோமினார் பம்பிள் பீ எனப்படும் மஞ்சள் நிற தேனியாக புதிய அவதாரம் எடுத்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

மஞ்சள் நிற தேனியாக மாறிய பஜாஜ் டோமினார் 400... காட்சிக்குள்ளாகியது 2020ம் ஆண்டிற்கான மாடல்...

இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கும் பஜாஜ் நிறுவனம், அதன் டோமினார் ஸ்பெஷல் எடிசன் மாடலை அர்ஜென்டினாவில் அறிமுகம் செய்துள்ளது.

இந்த பைக்கிற்கு, பம்பிள் பீ எனப்படும் மஞ்சள் நிற தேனி இனத்தை கருத்தில் கொண்டு வண்ணம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகையால், புதிய அப்டேட் செய்யப்பட்ட பஜாஜ் டோமினார் 400 பைக், அந்த தேனியைப் போன்றே மஞ்சள் மற்றும் மேட் கருப்பு நிறத்தைப் பெற்று பிரகாசமாக காட்சியளிக்கின்றது.

மஞ்சள் நிற தேனியாக மாறிய பஜாஜ் டோமினார் 400... காட்சிக்குள்ளாகியது 2020ம் ஆண்டிற்கான மாடல்...

புகைப்படத்தில் காணக்கூடிய இந்த மஞ்சள் நிற டோமினார், 2020ம் ஆண்டிற்கானது என கூறப்படுகின்றது. அதேசமயம், இது இந்தியாவிற்கான மாடல் அல்ல என்ற அதிர்ச்சிகரமான தகவலும் வெளியாகியுள்ளது.

தற்போது இந்தியாவில், பஜாஜ் டோமினார் அரோரா கிரீன் மற்றும் ஒயின் பிளாக் உள்ளிட்ட நிறத் தேர்வில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கின்றது.

மஞ்சள் நிற தேனியாக மாறிய பஜாஜ் டோமினார் 400... காட்சிக்குள்ளாகியது 2020ம் ஆண்டிற்கான மாடல்...

ஆனால், சர்வதேச சந்தையில் சிவப்பு மற்றும் வெள்ளி போன்ற ட்யூவல் டோன் நிறத் தேர்வுகளில் கிடைக்கின்றது. இத்துடன், பிரகாசமான மஞ்சள் நிறமும் தற்போது கூடுதலாக இணைந்துள்ளது.

மஞ்சள் நிற தேனியாக மாறிய பஜாஜ் டோமினார் 400... காட்சிக்குள்ளாகியது 2020ம் ஆண்டிற்கான மாடல்...

இந்தியாவில் விரைவில் அமலுக்கு வரவுள்ள பிஎஸ்-6 அப்டேட்டின்போது இந்த புதிய நிறத்தேர்வு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகின்றது. ஆகையால், தற்போதைக்கு இந்தியர்களுக்கு இந்த பம்பிள் பீ நிறம் கொண்ட பைக்கை காண்பதற்கான பாக்கியம் கிடைக்கவில்லை என்றே கூறப்படுகின்றது.

அதேசமயம், பஜாஜ் நிறுவனம் வருகின்ற 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பிஎஸ்-6 தரத்திலான டோமினாரை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மஞ்சள் நிற தேனியாக மாறிய பஜாஜ் டோமினார் 400... காட்சிக்குள்ளாகியது 2020ம் ஆண்டிற்கான மாடல்...

ஆகையால், விரைவில் புதிய நிறத்திலான டோமினார் இந்தியர்களின் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இருப்பினும், இதுகுறித்து அதிகாரப்பூர்பவமான தகவல் இதுவரை பஜாஜ் சார்பில் வெளியிடப்படவில்லை.

MOST READ: புதிய டாடா அல்ட்ராஸ் பிரிமீயம் ஹேட்ச்பேக் காரின் 7 முக்கிய அம்சங்கள்

மஞ்சள் நிற தேனியாக மாறிய பஜாஜ் டோமினார் 400... காட்சிக்குள்ளாகியது 2020ம் ஆண்டிற்கான மாடல்...

தற்போது பயன்பாட்டில் இருக்கும் பஜாஜ் டோமினார் 400 மாடலில், நீண்ட தூர பயணத்திற்கு பயன்படும் வகையில், பங்க்கீ ஸ்ட்ரேப்ஸ் ஹோல்டர் கொடுக்கப்பட்டுள்ளது. இது, இருக்கையின் கீழ் பகுதியில் காணப்படுகின்றது.

MOST READ: செம்ம.. யமஹா ஸ்கூட்டர் பிரியர்களுக்கு ஓர் நற்செய்தி.. ஆர்15 மாடலை தழுவி உருவாகும் ஸ்பெஷல் ஸ்கூட்டர்!

மஞ்சள் நிற தேனியாக மாறிய பஜாஜ் டோமினார் 400... காட்சிக்குள்ளாகியது 2020ம் ஆண்டிற்கான மாடல்...

இத்துடன் நேரம், கியர் பொஷிசன் மற்றும் பயணம் குறித்த தகவலை வெளிப்படுத்தும் வகையில் இரண்டாம் நிலை திரை உள்ளிட்டவையும் வழங்கப்பட்டுள்ளன.

MOST READ: சூப்பர்... மத்திய அரசின் அதிரடிக்கு கிடைத்த வெறித்தனமான வெற்றி... என்னவென்று தெரியுமா?

மஞ்சள் நிற தேனியாக மாறிய பஜாஜ் டோமினார் 400... காட்சிக்குள்ளாகியது 2020ம் ஆண்டிற்கான மாடல்...

இதேபோன்று, இந்த பைக்கில் சிறப்பான திறனை வெளிப்படுத்தும் வகையில் 373.3 சிசி லிக்யூடு கூல்டு, டிஓஎச்சி எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, அதிகபட்சமாக 40 பிஎச்பி மற்றும் 35 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறனைப் பெற்றிருக்கின்றது. இந்த திறன் பிஎஸ்-6 தர உயர்விற்கு பின்னர் மாறுபடலாம்.

Most Read Articles

மேலும்... #பஜாஜ் #bajaj auto
English summary
Bajaj Dominar 400 Special Edition Showcased. Read In Tamil.
Story first published: Friday, December 6, 2019, 13:43 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X