தொடர் அதிர்ச்சி தகவலை வெளியிடும் பஜாஜ்... ரசிகர்களின் வேதனைக்கு காரணம் இதுதான்...

பஜாஜ் நிறுவனம், அண்மையில் டோமினார் 400 பைக்கின் விலையை உயர்த்தி அதன் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் மீண்டும் ஓர் அதிர்ச்சி தகவலை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

தொடர் அதிர்ச்சி தகவலை வெளியிடும் பஜாஜ்... ரசிகர்களின் வேதனைக்கு காரணம் இதுதான்...

பஜாஜ் நிறுவனம் அண்மைக் காலங்களாக அதன் ரசிர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் தகவலை வெளியிட்டு வருகின்றது.

அந்தவகையில், அதன் புகழ்வாய்ந்த மாடல்களில் ஒன்றான டோமினார் 400 மாடல் பைக்கின் விலையை அந்நிறுவனம் உயர்த்தி அறிவித்தது. அந்தவகையில், 5,800 ரூபாய் இந்த பைக்கிற்கு உயர்த்தப்பட்டுள்ளது.

தொடர் அதிர்ச்சி தகவலை வெளியிடும் பஜாஜ்... ரசிகர்களின் வேதனைக்கு காரணம் இதுதான்...

ஆகையால், இந்த பைக் தற்போது ரூ. 1.8 லட்சம் என்ற விலையில் விற்பனைச் செய்யப்பட உள்ளது. இது டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.

இந்நிலையில், பஜாஜ் நிறுவனம் கூடுதல் அதன் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில், மீண்டும் ஓர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்தவகையில், இம்முறை அந்நிறுவனத்தின் மற்றுமொரு புகழ்வாய்ந்த மாடலான பல்சர் 150 பைக்கின் விலையை உயர்த்தி அறிவித்துள்ளது.

தொடர் அதிர்ச்சி தகவலை வெளியிடும் பஜாஜ்... ரசிகர்களின் வேதனைக்கு காரணம் இதுதான்...

உற்பத்தி செலவின் காரணமாக இந்த விலை அதிகரிப்பு செய்யப்பட உள்ளது. ஆகையால், ரூ. 499 முதல் ரூ. 2,950 வரை உயர இருக்கின்றது.

பஜாஜ் பல்சர் தற்போது மூன்று விதமான வேரியண்டுகளில் விற்பனைக்கு கிடைக்கின்றது. ஆகையால், இந்த புதிய உயர்வால் பல்சர் நியான் ரூ. 68,250 இல் இருந்து ரூ. 71,200 வரை விலையுயர்வைப் பெற இருக்கின்றது. அவ்வாறு, அதற்கு 2,950 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

தொடர் அதிர்ச்சி தகவலை வெளியிடும் பஜாஜ்... ரசிகர்களின் வேதனைக்கு காரணம் இதுதான்...

அதேபோன்று, பல்சர் 150 சிங்கிள் டிஸ்க் ஏபிஎஸ் மாடல் பைக்கின் விலையும் உயர்வைப் பெற்றிருக்கின்றது. அவ்வாறு, ரூ. 499 உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், இந்த பைக் ரூ. 84,461 முதல் ரூ. 84,960 வரை உயர்ந்துள்ளது.

தொடர் அதிர்ச்சி தகவலை வெளியிடும் பஜாஜ்... ரசிகர்களின் வேதனைக்கு காரணம் இதுதான்...

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

மேலும், பல்சர் 150 ட்வின் டிஸ்க் வேரியண்டும் விலையுயர்வைப் பெற்றிருக்கின்றது. பல்சர் சிங்கிள் டிஸ்கிற்கு விதிக்கப்பட்டிருந்த அதே 499 ரூபாய்தான் உயர்த்தப்பட்டுள்ளது. ஆகையால், இந்த பைக் ரூ. 88,838-ல் இருந்து ரூ. 88, 339 வரை விலையுயர்வைப் பெற்றிருக்கின்றது.

தொடர் அதிர்ச்சி தகவலை வெளியிடும் பஜாஜ்... ரசிகர்களின் வேதனைக்கு காரணம் இதுதான்...

இந்த விலையுயர்விற்கு, நாம் முன்னதாக கூறிய உற்பத்தி பொருட்களின் விலையுயர்வை முக்கிய காரணமாக இருக்கின்றது.

ஆகையால், அதே 149.5 சிசி திறன் கொண்ட எஸ்ஓஎச்சி, 2 வால்வ், ஏர் கூல்ட், சிங்கில் சிலிண்டர், ட்வின் ஸ்பார்க் டிடிஎஸ்-ஐ எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, 8,000 ஆர்பிஎம்மில் 14பிஎஸ் பவரையும், 6,000 ஆர்பிஎம்மில் 13.4 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.

தொடர் அதிர்ச்சி தகவலை வெளியிடும் பஜாஜ்... ரசிகர்களின் வேதனைக்கு காரணம் இதுதான்...

பல்சர் வரிசையில் காணப்படும் இந்த மூன்று விதமான பைக்குகளும் வெவ்வெறு விதமான பிரேக்கிங் திறன்களைப் பெற்றதாக இருக்கின்றது. அந்தவகையில், பல்சர் சிங்கிள் டிஸ்க் ஏபிஎஸ் வேரியண்டின் முன்பக்கத்தில் டிஸ்க் பிரேக்கும் பின்பக்க வீலில் ரியர் டிரம் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளது. அதேபோன்று, பல்சர் ட்வின் டிஸ்க் வேரியண்டில் முன் மற்றும் பின் பக்க வீல்களில் டிஸ்க் பிரேக் இணைக்கப்பட்டுள்ளது.

தொடர் அதிர்ச்சி தகவலை வெளியிடும் பஜாஜ்... ரசிகர்களின் வேதனைக்கு காரணம் இதுதான்...

அதேபோன்று, 150 நியான் வேரியண்டில் சிங்கிள் டிஸ்க் பிரேக் இணைக்கப்பட்டுள்ளது. இத்துடன், நியான் மாடலுக்கு மட்டும் அதன் பாடியில் ஹைலைட் செய்யும் வகையில் நியான் கலர் வழங்கப்பட்டுள்ளது. புதிய விதிகளின்படி, அனைத்து பல்சர் 150 வேரியண்டுகளிலும் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் வசதி இணைக்கப்பட்டுள்ளது.

தொடர் அதிர்ச்சி தகவலை வெளியிடும் பஜாஜ்... ரசிகர்களின் வேதனைக்கு காரணம் இதுதான்...

தற்போது வாகன தயாரிப்பு நிறுவனங்கள் அனைத்தும், பிஎஸ்-6 தரத்திற்கு வாகனங்களை அப்டேட் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றது. தற்போது, இதே பணியில்தான் பஜாஜ் நிறுவனமும் ஈடுபட்டு வருகின்றது. அந்தவகையில், பிஎஸ்-6 தரத்திலான பல்சர் 150 மாடல் பைக் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் ஸ்பை செய்யப்பட்ட காட்சிகள் அண்மைக் காலங்களாக வெளிவந்த வண்ணம் இருக்கின்றது.

தொடர் அதிர்ச்சி தகவலை வெளியிடும் பஜாஜ்... ரசிகர்களின் வேதனைக்கு காரணம் இதுதான்...

அவ்வாறு, ஸ்பை செய்யப்பட்ட பைக்கின் எஞ்ஜின் கணிசமாக அப்டேட் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது. அந்தவகையில், ப்யூவல் இஞ்ஜெக்சன் தரத்தில் அதன் எஞ்ஜின் உருவாக்கப்பட்டுள்ளது. இத்துடன், கணிசமான அப்டேட்டுகளையும் அந்த பைக்கிற்கு பஜாஜ் நிறுவனம் வழங்கியுள்ளது.

Most Read Articles
மேலும்... #bajaj auto
English summary
Bajaj Pulsar 150 Prices Hiked. Read In Tamil.
Story first published: Tuesday, July 30, 2019, 17:20 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X