கேடிஎம் 250 மாடலுக்கு போட்டியாக களமிறங்கும் பைக் இதுதான்: பஜாஜ் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு...?

கேடிஎம் ட்யூக் 250 மாடல் மோட்டார்சைக்கிளுக்கு போட்டியாக அதிக சக்தி வாய்ந்த நேக்கட் ரக மோட்டார்சைக்கிளை பஜாஜ் நிறுவனம் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

கேடிஎம் 250 மாடலுக்கு போட்டியாக களமிறங்கும் பைக் இதுதான்: பஜாஜ் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு...?

பஜாஜ் நிறுவனத்தின் மிகவும் பிரபலமான மாடலாக பல்சர் மோட்டார்சைக்கிள்கள் இருந்து வருகின்றன. அந்தவகையில், நடப்பாண்டின் கடந்த மாதங்களில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பல்சர் மோட்டார்சைக்கிள்கள் விற்பனையாகி இருப்பதாக கூறப்படுகிறது.

கேடிஎம் 250 மாடலுக்கு போட்டியாக களமிறங்கும் பைக் இதுதான்: பஜாஜ் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு...?

அதேபோன்று, அந்த நிறுவனத்தின் பிரீமியம் ரக மோட்டார்சைக்கிள் 45 சதவிகித விற்பனை வளர்ச்சியை கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் பெற்றுள்ளன. இதே வளர்ச்சியை வருகின்ற மாதங்களிலும் பஜாஜ் பெறும் என நம்பப்படுகிறது.

கேடிஎம் 250 மாடலுக்கு போட்டியாக களமிறங்கும் பைக் இதுதான்: பஜாஜ் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு...?

இந்நிலையில், பஜாஜ் நிறுவனம், பல்சர் வரிசையில் மேலும் சில மாடல்களை அறிமுகம் செய்யும் விதமாக செயல்பட்டு வருகிறது. அவ்வாறு, சமீபத்தில் பல்சர் 180எஃப் மாடலினை அந்த நிறுவனம் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கேடிஎம் 250 மாடலுக்கு போட்டியாக களமிறங்கும் பைக் இதுதான்: பஜாஜ் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு...?

இந்த நிலையில், இந்த நிறுவனம் விற்பனை செய்து வரும், அதன் அனைத்து மாடல்களிலும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்தை இணைக்கும் பணியில் வருகிறது. அவ்வாறு, கடந்த சில வாரங்களுக்கு ஏபிஎஸ் பிரேக்கிங் வசதியுடன் டோமினார் மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

கேடிஎம் 250 மாடலுக்கு போட்டியாக களமிறங்கும் பைக் இதுதான்: பஜாஜ் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு...?

இதைத்தொடர்ந்து, பல்சரின் வரிசையில் மிகவும் சக்தி வாய்ந்த மாடலை அறிமுகம் செய்யும் பணியில் பஜாஜ் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், பல்சரின் வரிசையில் கேடிஎம் ட்யூக் 250 மாடல் மோட்டார்சைக்கிளுக்கு இணையான பல்சர் 250 மோட்டார்சைக்கிளை வெளியிட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கேடிஎம் 250 மாடலுக்கு போட்டியாக களமிறங்கும் பைக் இதுதான்: பஜாஜ் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு...?

இந்த புதிய பல்சர் மோட்டார்சைக்கிளில் கேடிஎம் ட்யூக் 250 மோட்டார்சைக்கிளில் பொருத்தப்பட்டிருக்கும் அதே எஞ்ஜினைத் தான் பஜாஜ் நிறுவனம் பொருத்த இருக்கிறது. இந்த புதிய பல்சர் 250 மாடல் ஏற்கனவே வெளிவந்த பல்சர் என்எஸ் 200 மாடலை ஒத்தவாறு நேக்கட் ரகத்தில் உருவாக்கப்பட இருக்கிறது.

கேடிஎம் 250 மாடலுக்கு போட்டியாக களமிறங்கும் பைக் இதுதான்: பஜாஜ் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு...?

புதிதாக வரவிருக்கும் இந்த பல்சர்250 மோட்டார்சைக்கிளில் 249சிசி கொண்ட லிக்யூடு கூல்ட் எஞ்ஜின் பொருத்தப்பட உள்ளது. இது, 30 பிஎஸ் பவரையும், 25 என்எம் டார்க்கையும் வழங்கும் திறன்கொண்டது. மேலும், இந்த எஞ்ஜினில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட உள்ளது.

கேடிஎம் 250 மாடலுக்கு போட்டியாக களமிறங்கும் பைக் இதுதான்: பஜாஜ் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு...?

இந்த புதிய மாடல் பல்சர் மற்ற மாடல் பல்சர் பைக்குககளைக் காட்டிலும் அதீத சக்தி கொண்டதாகவும், நவீன தொழில்நுட்பம் பொருந்தியாகவும் இருக்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில், புதிதாக தயாராகி வரும் பல்சர் 250 மாடலில் பிரீமியம் ரக அம்சங்கள் இணைக்கப்பட உள்ளன. அவ்வாறு, பைக்கின் முன்பக்கத்தில் அப்சைட் டவுண் ஃபோர்க்கும், பின்பக்கத்தில் மோனோசாக் அப்சார்பரும் பொருத்தப்பட உள்ளன.

கேடிஎம் 250 மாடலுக்கு போட்டியாக களமிறங்கும் பைக் இதுதான்: பஜாஜ் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு...?

இத்துடன், டிஸ்க் பிரேக்குடன் கூடிய டியூவல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் இணைக்கப்பட உள்ளது. இது வாகன ஓட்டியின் பாதுகாப்பான பயண அனுபவத்திற்கு உதவும். மேலும், பைக்கின் சிறப்பான ஓடு திறனுக்காக எம்ஆர்எஃப் நிறுவனத்தின் அதிகம் கிரிப் கொண்ட டயர்கள் இணைக்கப்பட உள்ளன.

கேடிஎம் 250 மாடலுக்கு போட்டியாக களமிறங்கும் பைக் இதுதான்: பஜாஜ் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு...?

இதைத்தொடர்ந்து, டிஜிட்டல் வசதியாக இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் வழங்கப்பட உள்ளது. அதில், எரிபொருள் அளவு, ஷிப்ட் கியர்ஸ் மற்றும் ஸ்பீடோ மீட்டர் உள்ளிட்ட தகவல்களைப் பெற முடியும். இந்த புதிய பஜாஜ் பல்சர் மோட்டார்சைக்கிள் நடப்பாண்டின் இரண்டாம் பாதியில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

*Images for Reference Only

Most Read Articles
மேலும்... #bajaj auto
English summary
Bajaj Pulsar 250 Launch Likely In 2019 – Powered By KTM 250. Read In Tamil.
Story first published: Thursday, April 11, 2019, 16:23 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X