மீண்டும் கேமிராவின் கண்களில் சிக்கிய பஜாஜ் ஸ்கூட்டர்: ஸ்பை படங்கள் உள்ளே...

பஜாஜ் நிறுவனத்தின் ஸ்கூட்டர் மீண்டும் கேமிராவின் கண்களில் சிக்கியிருக்கிறது. ஆனால், இம்முறை எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தான் ஸ்பை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் முழுமையாக காணலாம்.

மீண்டும் கேமிராவின் கண்களில் சிக்கிய பஜாஜ் ஸ்கூட்டர்: ஸ்பை படங்கள் உள்ளே...

இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கும் பஜாஜ் நிறுவனம், இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகன உற்பத்தியில் முனைப்பு காட்டி வருகிறது. முக்கியமாக இந்த நிறுவனம், பைக் தயாரிப்பில்தான் அதிக கவனம் செலுத்தி வருகிறது. முன்னதாக, செடாக் என்ற ஸ்கூட்டரை அந்த நிறுவனம் கடந்த 1972ம் ஆண்டில் விற்பனைச் செய்தது. இதனை கடந்த 2006ம் ஆண்டு முதல் சந்தையில் விலக்கிக் கொண்டது.

இதைத்தொடர்ந்து, பைக் ரகத்திலான இரு சக்கர வாகனங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, தயாரித்து வந்தது. இந்த நிலையில், பதிமூன்று ஆண்டுகள் கடந்தநிலையில், மீண்டும் ஸ்கூட்டர் தயாரிப்பில் பஜாஜ் நிறுவனம் ஈடுபட்டிருப்பதாக அண்மையில் தகவல் வெளியாகியன.

மீண்டும் கேமிராவின் கண்களில் சிக்கிய பஜாஜ் ஸ்கூட்டர்: ஸ்பை படங்கள் உள்ளே...

இதனை உறுதி செய்யும் விதமாக அந்த ஸ்கூட்டர் ஸ்பை படங்கள் கசிந்தன. பாரம்பரியமிக்க ஸ்டைலில் செடாக் தோற்றத்தில் உருவாகியிருக்கும் இந்த ஸ்கூட்டர், பஜாஜ் நிறுவனத்தின் சப் பிராண்ட் அர்பனைட் என்ற பெயரில் களமிறங்க இருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், தற்போது வரை இந்த புதிய ஸ்கூட்டர்கள் குறித்த தகவல் அனைத்தும் சிதம்பர ரகசியமாக காக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பஜாஜின் இந்த அர்பனைட் ஸ்கூட்டர் குறித்த, ஸ்பை படங்கள் மீண்டும் வெளியாகி அதன் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் ஆவலைத் தூண்டியுள்ளது.

மீண்டும் கேமிராவின் கண்களில் சிக்கிய பஜாஜ் ஸ்கூட்டர்: ஸ்பை படங்கள் உள்ளே...

ஆனால், இம்முறை ஸ்பை செய்யப்பட்டு இருக்கும் இந்த ஸ்கூட்டர் எலக்ட்ரிக் ரக அர்பனைட் என கூறப்படுகிறது. இதுகுறித்த புகைப்படங்களை பவர் டிரிஃப்ட் என்ற இணையதளம் வெளியிட்டுள்ளது.

பதிமூன்று ஆண்டுகளைக் கடந்த பின்னர் பஜாஜ் நிறுவனம் மீண்டும் ஸ்கூட்டர் தயாரிப்பது, வாகன உலகின் பேசு பொருளாக மாறியுள்ளது. மேலும், தற்போது இந்த ஸ்கூட்டர்களின் புகைப்படங்கள் வெளியாகி தலைப்பு செய்திகளாகவே மாற்றிவிட்டன.

MOST READ: காரில் மாட்டு சாண கோட்டிங்கிற்கு உண்மையான காரணம் இதுதான்... உலகம் முழுக்க வைரலான இந்திய பெண் அதிரடி

மீண்டும் கேமிராவின் கண்களில் சிக்கிய பஜாஜ் ஸ்கூட்டர்: ஸ்பை படங்கள் உள்ளே...

அந்தவகையில், தற்போது வெளியாகியிருக்கும் ஸ்பை புகைப்படங்கள் அர்பனைட் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் முகப்பு பக்கத்தை முழுமையாக காட்சிப்படுத்தியுள்ளது. ஆகையால், இந்த புகைப்படத்தின்மூலம் ஸ்கூட்டரின் முன் பகுதியில் ரெட்ரோ ஸ்டைலிலான பென்டகன் வடிவமைப்பிலான ஹெட்லேம்ப் பொருத்தப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த ஹெட்லேம்ப், எல்இடி தரத்திற்கு ஏற்ப இருக்கலாம் கூறப்படுகிறது. அதேபோன்று, பின்பக்க விளக்கு மற்றும் சிக்னல் விளக்குகளுக்கும் எல்இடி மின் விளக்கு அமைப்பையே பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த ஸ்பை படத்தின்மூலம் ஸ்கூட்டர் லைவ்லி கர்வ்ட் டிசைனில் மிகவும் கவர்ச்சியான தோற்றத்தைப் பெற்றிருப்பது தெரியவருகிறது.

MOST READ: உலகின் முதல் பாதுகாப்பான எலக்ட்ரிக் கார்: இதில் சென்றால் எமனால் கூட உங்களை நெருங்க முடியாது...!

மீண்டும் கேமிராவின் கண்களில் சிக்கிய பஜாஜ் ஸ்கூட்டர்: ஸ்பை படங்கள் உள்ளே...

இத்துடன், ஸ்கூட்டரில் பாதுகாப்பு வசதியாக டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், சிபிஎஸ் பிரேக் வசதி இணைக்கப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஸ்கூட்டரின் பின் பகுதியில் ஸ்பிளிட் எல்இடி மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், ரெட்ரோ தீமிலான இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோலும் இதில் வழங்கப்பட்டுள்ளது.

அதேசமயம், இந்த ஸ்கூட்டரில் நவீன வசதிகளாக ப்ளூடூத் கனெக்ட்விட்டி மற்றும் ஸ்மார்ட்போன் இன்டெக்ரேஷன் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட உள்ளன. மேலும், ரெட்ரோ டிரையங்கிள் வடிவத்திலான பின்பக்கத்தைப் பார்க்கும் கண்ணாடிகள் இதில் பொருத்தப்பட்டுள்ளன.

MOST READ: சத்தியமா நம்புங்க இது கிளாசிக் 350 பைக் தான்... இத இப்படி மாத்த எவ்ளோ செலவாச்சு தெரியுமா...?

மீண்டும் கேமிராவின் கண்களில் சிக்கிய பஜாஜ் ஸ்கூட்டர்: ஸ்பை படங்கள் உள்ளே...

இந்த ஸ்கூட்டரில் முன் பகுதியில், ஆன்டி டைவ் ஃபங்க்ஷனுடன் கூடிய சிங்கிள் சைடட் சஸ்பென்ஷன் பொருத்தப்பட்டுள்ளது. அண்மையில், இந்த ஸ்கூட்டரின் ஸ்கெட்ச் புகைப்படம் எனகூறி, கசிந்த படத்திற்கும், தற்போது தயாரிப்பில் இருக்கும் ஸ்கூட்டருக்கும் பெரிய வித்தியாசங்கள் இருப்பதை இந்த ஸ்பை படங்கள் உறுதி செய்துள்ளன.

ஆனால், இந்த புதிய ஸ்கூட்டர் எந்த பிராண்டில் விற்பனைக்கு வரும் என்பதுதான் தற்போதுவரை அறிந்து கொள்ள முடியாத தகவலாக இருக்கின்றது. இந்த ஸ்கூட்டர்கள் டீலர்கள் ஷோரூமிற்கு வந்த பின்னரே முழு தகவலும் கிடைக்கும் என கூறப்படுகிறது.

Most Read Articles

English summary
Bajaj Scooter Spied Again With Retro Design. Read In Tamil.
Story first published: Saturday, May 25, 2019, 18:51 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X