பஜாஜ் அர்பனைட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை குறித்து புதிய தகவல்கள்!

பஜாஜ் அர்பனைட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை குறித்து புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

நாட்டின் முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான பஜாஜ் ஆட்டோ நிறுவனம் மின்சார வாகன உற்பத்தியிலும் இறங்க இருக்கிறது. அர்பனைட் என்ற பெயரில் புதிய மாடலை அறிமுகம் செய்யவும் அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

பஜாஜ் அர்பனைட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்: புதிய தகவல்கள்!

இந்தநிலையில், வரும் 16ந் தேதி டெல்லியில் பத்திரிக்கையாளர் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பத்திரிக்கையாளர்களுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது.

இந்த நிலையில், பஜாஜ் ஆட்டோ நிறுவனம் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பல்வேறு கட்டங்களாக நாடு முழுவதும் விற்பனைக்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. அதாவது, புனே மற்றும் பெங்களூர் ஆகிய நகரங்களில் முதல்கட்டமாக தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, சென்னை, மும்பை, டெல்லி உள்ளிட்ட நாட்டின் பிற முக்கிய நகரங்களிலும் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக தெரிகிறது. மேலும், தனது புதிய மின்சார வாகனங்களை அர்பனைட் பிராண்டின் கீழ் அறிமுகம் செய்வதற்கும் பஜாஜ் ஆட்டோ முடிவு செய்துள்ளது.

பஜாஜ் அர்பனைட் பிராண்டில் முதல் மாடலாக வரும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அர்பனைட் சிக் என்ற பெயரில் வர இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. இதுவரை வெளியான ஸ்பை படங்களின் அடிப்படையில் பஜாஜ் அர்பனைட் சிக் ஸ்கூட்டரில் எல்இடி விளக்குகள், பேக்லிட் விளக்குகளுடன் சுவிட்டுகள், பாரம்பரிய டிசைன் அம்சங்களுடன் வர இருப்பதாக தெரிகிறது.

இந்த ஸ்கூட்டரில் வட்ட வடிவிலான முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் எதிர்பார்க்கப்படுகிறது. புளூடூத் இணைப்பு வசதியும், யுஎஸ்பி சார்ஜரும் வழங்கப்பட்டு இருக்கும் என்று தெரிகிறது.

MOST READ: "புதிய வாகனங்கள் அறிமுகம் கிடையாது" 2020 வாகன கண்காட்சியை புறக்கணிக்க தயாராகும் பிரபல நிறுவனங்கள்...

முன்புறத்தில் சிங்கிள் சைடு சஸ்பென்ஷன் அமைப்பு, மல்டி ஸ்போக் அலாய் வீல்கள், முன்சக்கரத்திற்கான டிஸ்க் பிரேக் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கும்.

MOST READ: இந்தியாவிலிருந்து மூட்டை கட்டும் யுஎம் மோட்டார்சைக்கிள் நிறுவனம்!

இந்த ஸ்கூட்டரில் இடம்பெற இருக்கும் மின்மோட்டார், பேட்டரி, ரேஞ்ச் ஆகியவை குறித்த எந்தவொரு தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை. இருப்பினும், சந்தையில் உள்ள சில எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு கடும் சவாலை தரும் வகையில் களமிறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Source: Bikewale

Most Read Articles

English summary
According to report, Bajaj Auto will launch its first electric scooter under the Urbanite brand in India phased manner.
Story first published: Saturday, October 12, 2019, 16:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X