பஜாஜ் வி15 விடைபெற்றது? ஐஎன்எஸ் விக்ராந்த் போர் கப்பலால் பிரபலம் அடைந்த பைக்கிற்கு ஏற்பட்ட சோகம்

ஐஎன்எஸ் விக்ராந்த் போர் கப்பலால் பிரபலம் அடைந்த பஜாஜ் வி15 பைக், மார்க்கெட்டில் இருந்து விலக்கி கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பஜாஜ் வி15 விடைபெற்றது? ஐஎன்எஸ் விக்ராந்த் போர் கப்பலால் பிரபலம் அடைந்த பைக்கிற்கு ஏற்பட்ட சோகம்

மிகவும் பிரபலமான பிரீமியம் கம்யூட்டர் மோட்டார்சைக்கிள் மாடலான வி15 பைக்கை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் விற்பனையில் இருந்து விலக்கி விட்டதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. பஜாஜ் வி15 மோட்டார்சைக்கிள் மாடலின் உற்பத்தி நிறுத்தப்பட்டு விட்டதாக பைக்வாலே தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

பஜாஜ் வி15 விடைபெற்றது? ஐஎன்எஸ் விக்ராந்த் போர் கப்பலால் பிரபலம் அடைந்த பைக்கிற்கு ஏற்பட்ட சோகம்

என்றாலும் பஜாஜ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் இன்னமும் வி15 பட்டியலிடப்பட்டுள்ளது. பஜாஜ் நிறுவனம் வி15 மோட்டார்சைக்கிளை இந்திய மார்க்கெட்டில் கடந்த 2016ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்தது. ஆரம்பத்தில் இந்தியாவில் பஜாஜ் வி15 மோட்டார்சைக்கிளின் விற்பனை மிகவும் சிறப்பாகதான் இருந்தது.

பஜாஜ் வி15 விடைபெற்றது? ஐஎன்எஸ் விக்ராந்த் போர் கப்பலால் பிரபலம் அடைந்த பைக்கிற்கு ஏற்பட்ட சோகம்

அருமையான டிசைன், சௌகரியமான பயணம் மற்றும் நியாயமான விலை உள்ளிட்டவை இதற்கு மிக முக்கியமான காரணங்கள். இந்திய கடற்படையின் போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் உடனான தொடர்பும் கூட பஜாஜ் வி15 இந்தியாவில் பிரபலமடைய மற்றொரு முக்கிய காரணம் என்று சொல்லலாம். ஐஎன்எஸ் விக்ராந்தின் மெட்டல், பஜாஜ் வி15 கட்டமைப்பில் பயன்படுத்தப்பட்டது.

பஜாஜ் வி15 விடைபெற்றது? ஐஎன்எஸ் விக்ராந்த் போர் கப்பலால் பிரபலம் அடைந்த பைக்கிற்கு ஏற்பட்ட சோகம்

ஆனால் நாளடைவில் பஜாஜ் வி15 மோட்டார்சைக்கிளுக்கான டிமாண்ட் குறைய தொடங்கியது. அதிலும் குறிப்பாக கடந்த சில மாதங்களாக அதன் விற்பனை கடுமையாக சரிவடைந்து விட்டது. 2019ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் புதிய பாதுகாப்பு விதிமுறைகள் அமலுக்கு வந்த பிறகு, வி15 பைக்கின் உற்பத்தியை பஜாஜ் நிறுவனம் நிறுத்தி விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பஜாஜ் வி15 விடைபெற்றது? ஐஎன்எஸ் விக்ராந்த் போர் கப்பலால் பிரபலம் அடைந்த பைக்கிற்கு ஏற்பட்ட சோகம்

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

இந்த புதிய பாதுகாப்பு விதிமுறைகளின் படி, 125 சிசிக்கும் அதிகமான இன்ஜின் திறன் கொண்ட அனைத்து இரு சக்கர வாகனங்களிலும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஸ்டாண்டர்டாக வழங்கப்படுவது கட்டாயம். ஆனால் வி15 பைக்கில் ஏபிஎஸ் இல்லை. பஜாஜ் நிறுவனம் குறிப்பிட்ட காலத்திற்குள் அதனை அப்டேட் செய்யவும் இல்லை.

பஜாஜ் வி15 விடைபெற்றது? ஐஎன்எஸ் விக்ராந்த் போர் கப்பலால் பிரபலம் அடைந்த பைக்கிற்கு ஏற்பட்ட சோகம்

பஜாஜ் வி15 பைக்கில், 149.5 சிசி ஏர்கூல்டு சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 12 பிஎச்பி பவர் மற்றும் 10.7 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது. இதில், 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. பஜாஜ் வி15 பைக்கின் விலை 65,626 ரூபாய். இது டெல்லி எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

பஜாஜ் வி15 விடைபெற்றது? ஐஎன்எஸ் விக்ராந்த் போர் கப்பலால் பிரபலம் அடைந்த பைக்கிற்கு ஏற்பட்ட சோகம்

இந்த சூழலில், புதிய பாதுகாப்பு விதிமுறைகளுக்கு ஏற்ப அப்டேட் செய்தால் இதன் விலை கணிசமாக அதிகரிக்கும். எனவே மேம்படுத்துவதற்கு பதிலாக வி15 உற்பத்தியை நிறுத்தி விட்டு, மிகவும் வெற்றிகரமான பல்சர் பைக்குகளின் மீது கூடுதல் கவனம் செலுத்த பஜாஜ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

என்றாலும் 'வி' பிராண்டு பின்நாட்களில் திரும்ப வரலாம் என கூறப்படுகிறது. அனேகமாக மார்க்கெட்டில் இருந்து கடந்த ஆண்டு விலக்கி கொள்ளப்பட்ட வி12 மீண்டும் திரும்ப வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தேவையான அனைத்து தொழில்நுட்பங்களுடனும் வி12 களம் காண்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

Most Read Articles
மேலும்... #bajaj auto
English summary
Bajaj V15 Discontinued In India — Will Bajaj Come Out With A Replacement Soon?. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X