ராயல் என்பீல்டை துவம்சம் செய்ய திட்டம்: மலிவு விலை பைக்கை களமிறக்க பெனெல்லி முடிவு... சிறப்பு தகவல்!

ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு போட்டியாக மலிவு விலைக் கொண்ட புதிய மாடல் பைக்கினை களமிறக்க பெனெல்லி நிறுவனம் திட்டமிட்டு வருகின்றது. இதுகுறித்த கூடுதல் சிறப்பு தகவலை இந்த பதிவில் காணலாம்.

ராயல் என்பீல்டை துவம்சம் செய்ய திட்டம்... புதிய மலிவு விலை பைக்கை களமிறக்க பெனெல்லி முடிவு... சிறப்பு தகவல்!

சீன நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட இத்தாலி நாட்டைச் சேர்ந்த நிறுவனம்தான் பெனெல்லி. இந்நிறுவனம், இந்தியாவில் ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு போட்டியளிக்கின்ற வகையிலான டிசைன் தாத்பரியங்களைக் கொண்ட இரு சக்கர வாகனங்களை களமிறக்கி வருகின்றது. இது இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றில் இருசக்கர வாகனங்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகின்றது.

ராயல் என்பீல்டை துவம்சம் செய்ய திட்டம்... புதிய மலிவு விலை பைக்கை களமிறக்க பெனெல்லி முடிவு... சிறப்பு தகவல்!

இந்த நிலையில், ராயல் என்பீல்டு பைக்குகளின் இடத்தைப் பிடிக்கின்ற வகையில், இம்பீரியல் 400 என்ற புத்தம் புதிய மடாலை கடந்த 22ம் தேதி பெனெல்லி நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த பைக்கிற்கு தற்போது வரவேற்பு நிலவி வருகின்றது.

இந்த பைக் அறிமுகம் செய்யப்பட்ட பத்து நாட்களுக்கு உள்ளாகவே 1,200-க்கும் மேற்பட்ட யூனிட்டிற்கான புக்கிங்குகள் குவிந்துள்ளன. இது மேலும் அதிகரிக்கலாம் என கூறப்படுகின்றது.

ராயல் என்பீல்டை துவம்சம் செய்ய திட்டம்... புதிய மலிவு விலை பைக்கை களமிறக்க பெனெல்லி முடிவு... சிறப்பு தகவல்!

எனவே, இந்த பைக்கிற்கு கிடைத்த அதீத வரவேற்பை அடுத்து, இம்பீரியல் 400 மாடலின் கூடுதல் இரு வேரியண்டுகளையும் இந்தியாவில் அறிமுகம் செய்ய பெனெல்லி திட்டமிட்டுள்ளது.

அவை தற்போது அறிமுகம் செய்யப்பட்ட மாடலைக் காட்டிலும் விலை குறைவானதாக களமிறக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை ஈடி ஆங்கில தளம் வெளியிட்டுள்ளது.

ராயல் என்பீல்டை துவம்சம் செய்ய திட்டம்... புதிய மலிவு விலை பைக்கை களமிறக்க பெனெல்லி முடிவு... சிறப்பு தகவல்!

தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள பெனெல்லி இம்பீரியல் 400 மாடல் ரூ. 1.69 லட்சம் என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதில், சிவப்பு மற்றும் கருப்பு கலந்த நிறத்தைக் கொண்ட இம்பீரியல் 400 கூடுதலாக பத்தாயிரம் அதிகமான விலையில் விற்பனைச் செய்யப்படுகின்றது. இந்த ஆப்ஷனை தற்போதுதான் பெனெல்லி அறிமுகம் செய்தது.

ராயல் என்பீல்டை துவம்சம் செய்ய திட்டம்... புதிய மலிவு விலை பைக்கை களமிறக்க பெனெல்லி முடிவு... சிறப்பு தகவல்!

இந்த பைக்கிற்கு போட்டியாக இந்தியாவில் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக் ரூ. 1.54 லட்சத்திற்கும், ஜாவா ரூ. 1.74 லட்சம் என்ற விலையிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றன.

ராயல் என்பீல்டை துவம்சம் செய்ய திட்டம்... புதிய மலிவு விலை பைக்கை களமிறக்க பெனெல்லி முடிவு... சிறப்பு தகவல்!

புதிதாக களமிறங்க உள்ள பெனெல்லி இம்பீரியல் பைக் மேற்கூறிய அனைத்து பைக்குகளைக் காட்டிலும் மிக குறைவான விலையில் களமிறக்கப்பட உள்ளது. இதற்காக, அந்த பைக்கில் சில வசதிகள் குறைக்கப்பட உள்ளன. முக்கியமாக சிசி திறன், பிரிமியம் வசதி உள்ளிட்டவை விலைக் குறைப்பிற்கேற்ப மாற்றியமைக்கப்பட இருக்கின்றது.

ராயல் என்பீல்டை துவம்சம் செய்ய திட்டம்... புதிய மலிவு விலை பைக்கை களமிறக்க பெனெல்லி முடிவு... சிறப்பு தகவல்!

பெனெல்லி நிறுவனம் 125சிசி முதல் 1130 சிசி திறன் வரையிலான பைக்குகளை உலகம் முழுவதிலும் அறிமுகம் செய்து வருகின்றது. இதில், ஏதேனும் ஓர் திறன் கொண்ட எஞ்ஜினுடைய பைக்கை பெனெல்லி புதிதாக களமிறக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எனவே, தற்போது விற்பனையில் இருக்கும் பெனெல்லி இம்பீரியலைக் காட்டிலும் இது சிறிய ரக மாடலாக இருக்கும் என கூறப்படுகின்றது.

ராயல் என்பீல்டை துவம்சம் செய்ய திட்டம்... புதிய மலிவு விலை பைக்கை களமிறக்க பெனெல்லி முடிவு... சிறப்பு தகவல்!

அதேசமயம், பெனெல்லி இம்பீரியல் மாடலின் சிறிய ரகமாக களமிறக்கப்பட உள்ள இந்த மலிவு விலை பைக்கினை, பெனெல்லி நிறுவனம் அதே பிராண்டில் (இம்பீரியல்) அறிமுகம் செய்யுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. ஏனென்றால், இந்த பைக்கின் பெயர்குறித்த தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை.

ராயல் என்பீல்டை துவம்சம் செய்ய திட்டம்... புதிய மலிவு விலை பைக்கை களமிறக்க பெனெல்லி முடிவு... சிறப்பு தகவல்!

இத்துடன், பெனெல்லி ஆர் மற்றும் டி குழு 5 முதல் 6 புரோட்டோ டைப் மாடல் பைக்குகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றது. இதுவும், இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ராயல் என்பீல்டை துவம்சம் செய்ய திட்டம்... புதிய மலிவு விலை பைக்கை களமிறக்க பெனெல்லி முடிவு... சிறப்பு தகவல்!

அதேசமயம், பெனெல்லி நிறுவனத்தின் அடுத்த அறிமுகம் குறித்த தகவல் ஏற்கனவே வெளியாகியுள்ளது. அந்தவகையில், அடுத்ததாக 302எஸ் மாடல் களமிறக்கப்பட இருப்பதாக இந்தியன் ஆட்டோ ப்ளாக் செய்தி வெளியிட்டுள்ளது.

ரோட்ஸ்டர் மாடலில் காட்சியளிக்கும் இந்த பைக் ஏற்கனவே சர்வதேச சந்தையில் விற்பனைக்கு கிடைப்பது குறிப்பிடத்தகுந்தது.

ராயல் என்பீல்டை துவம்சம் செய்ய திட்டம்... புதிய மலிவு விலை பைக்கை களமிறக்க பெனெல்லி முடிவு... சிறப்பு தகவல்!

பெனெல்லி 302 எஸ் மாடல், தற்போது இந்தியாவில் விற்பனையில் இருக்கும் டிஎன்டி 300 மாடலை ரீபிளேஸ் செய்யும் வகையில் அறிமுகம் செய்யலாம் என்று கூறப்படுகின்றது.

புகைப்படங்கள் அனைத்தும் மாதிரிக்காக கொடுக்கப்பட்டவை.

Most Read Articles
மேலும்... #பெனெல்லி #benelli
English summary
Benelli Imperiale 400 Based Smaller Motorcycle Planned For Launch. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X