வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி அளித்த பிரபல இரு சக்கர வாகன நிறுவனம்... அந்த ஷாக் அறிவிப்பு இதுதான்

பிரபல இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி அளித்த பிரபல இரு சக்கர வாகனம் நிறுவனம்... அந்த ஷாக் அறிவிப்பு இதுதான்

டிஆர்கே 502 (TRK 502) மற்றும் டிஆர்கே 502எக்ஸ் (TRK 502X) ஆகிய 2 மோட்டார் சைக்கிள்களை பெனெல்லி நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்த சூழலில், இந்த 2 மோட்டார் சைக்கிள்களின் விலையையும் பெனெல்லி இந்தியா நிறுவனம் தற்போது உயர்த்தியுள்ளது. இதில், டிஆர்கே 502 மோட்டார் சைக்கிள் ரூ.5 லட்சம் என்ற விலையிலும் (டெல்லி, எக்ஸ் ஷோரூம்), டிஆர்கே 502எக்ஸ் மோட்டார் சைக்கிள் ரூ.5.40 லட்சம் (டெல்லி, எக்ஸ் ஷோரூம்) என்ற விலையிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன.

வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி அளித்த பிரபல இரு சக்கர வாகனம் நிறுவனம்... அந்த ஷாக் அறிவிப்பு இதுதான்

இந்த விலைகள் ஆன்லைன் முன்பதிவுகள் மற்றும் வரையறுக்கப்பட்ட காலத்திற்கு மட்டுமேயானது என்பது தற்போது நமக்கு தெரியவருகிறது. ஏனெனில் தற்போது இவ்விரு மோட்டார் சைக்கிள்களின் விலையயும் தலா ரூ.10 ஆயிரம் என்கிற அளவிற்கு பெனெல்லி இந்தியா நிறுவனம் உயர்த்தியுள்ளது. இதன்மூலம் டிஆர்கே 502 மோட்டார் சைக்கிளின் விலை ரூ.5.10 லட்சமாகவும் (டெல்லி, எக்ஸ் ஷோரூம்), டிஆர்கே 502எக்ஸ் மோட்டார் சைக்கிளின் விலை ரூ.5.50 லட்சமாகவும் (டெல்லி, எக்ஸ் ஷோரூம்) உயர்ந்துள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி அளித்த பிரபல இரு சக்கர வாகனம் நிறுவனம்... அந்த ஷாக் அறிவிப்பு இதுதான்

டிஆர்கே 502 மற்றும் டிஆர்கே 502எக்ஸ் ஆகிய இரண்டு மோட்டார் சைக்கிள்களுக்கும் இந்திய வாடிக்கையாளர்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவும், இதன் காரணமாக 150க்கும் மேற்பட்ட முன்பதிவுகள் வந்துள்ளதாகவும் (2 மோட்டார் சைக்கிள்களுக்கும் சேர்த்து) பெனெல்லி இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. இது கடந்த மார்ச் 21ம் தேதி நிலவரம் ஆகும். இவ்விரு மோட்டார் சைக்கிள்களும் கடந்த பிப்ரவரி மாதம்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன. அத்துடன் விலையும் சற்று அதிகம். இதையெல்லாம் வைத்து பார்க்கையில், இந்த முன்பதிவு எண்ணிக்கை சிறப்பானதுதான்.

வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி அளித்த பிரபல இரு சக்கர வாகனம் நிறுவனம்... அந்த ஷாக் அறிவிப்பு இதுதான்

பெனெல்லி டிஆர்கே 502 மற்றும் டிஆர்கே 502எக்ஸ் ஆகிய இரண்டு மோட்டார் சைக்கிள்களிலும், 499.5 பேரலல் டிவின், லிக்யூட் கூல்டு, டிஓஎச்சி, 8 வால்வு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 8,500 ஆர்பிஎம்மில் 47 பிஎச்பி பவரையும், 6,000 ஆர்பிஎம்மில் 46 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜின் உடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் வழங்கப்படுகிறது. இவ்விரு மோட்டார் சைக்கிள்களும், கிரே, ரெட் மற்றும் ஒயிட் என மூன்று வண்ணங்களில் கிடைக்கின்றன.

வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி அளித்த பிரபல இரு சக்கர வாகனம் நிறுவனம்... அந்த ஷாக் அறிவிப்பு இதுதான்

இவ்விரு மோட்டார் சைக்கிள்களுக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் ஒன்று உள்ளது. பெனெல்லி டிஆர்கே 502எக்ஸ் மோட்டார் சைக்கிள் ஆப் ரோடுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பதுதான் அது. ஆப் ரோடு பயணங்களுக்கு ஏற்ற சக்கரங்கள் உள்ளிட்ட பிரத்யேக வசதிகள் பெனெல்லி டிஆர்கே 502எக்ஸ் மோட்டார் சைக்கிளில் இடம்பெற்றுள்ளன.

Source-IndianAutosBlog

Most Read Articles
மேலும்... #பெனெல்லி #benelli
English summary
Benelli Increases Price Of TRK 502 And TRK 502X — Premature Perhaps?. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X