உலகையே கலக்க களமிறங்குகிறது சென்னை நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் பைக்: எப்போது தெரியுமா...?

சென்னையை மையமாகக் கொண்டு இயங்கும் பிளாக்ஸ்மித் என்ற மின்வாகன தயாரிப்பு நிறுவனம், அதன் முதல் எலக்ட்ரிக் பைக்கை இந்தியாவில் விற்பனைக்கு களமிறக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் சிறப்பு தகவலை இந்த பதிவில் காணலாம்.

உலகையே கலக்க களமிறங்குகிறது சென்னை நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் பைக்: எப்போது தெரியுமா...?

தலைநகர் சென்னையை மையமாகக் கொண்டு இயங்கும் பிளாக்ஸ்மித் என்ற எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனம், அதன் முதல் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை இந்திய இருசக்கர வாகனச் சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில், வருகின்ற 2020ம் ஆண்டு, பி2 எனப் பெயரிடப்பட்டுள்ள எலக்ட்ரிக் பைக்கை அந்த நிறுவனம் விற்பனைக்கு களமிறக்க உள்ளது.

உலகையே கலக்க களமிறங்குகிறது சென்னை நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் பைக்: எப்போது தெரியுமா...?

இந்த எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை உருவாக்கும் பணியில் அந்த நிறுவனம் கடந்த 14 வருடங்களுக்கும் மேலாக ஈடுபட்டு வருவதாக கூறப்படுகின்றது. இருசக்கர வாகன தயாரிப்பாளர்களில் பெரும்பாலானோர் மின்சார வாகனங்களின் இயக்கம் குறித்த பாதை வரைபடத்தைச் சமர்பித்து வரும் வேலையில், பிளாக்ஸ்மித், பேட்டரிகளை மாற்றிக்கொள்ளும் ரகத்திலான பைக்கிற்கு காப்புரிமை பெற்றுள்ளது. மேலும், அந்த எலக்ட்ரிக் பைக்கிற்கான பேடன்ட் இமேஜையும் அந்த நிறுவனம் பதிவு செய்துள்ளது.

உலகையே கலக்க களமிறங்குகிறது சென்னை நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் பைக்: எப்போது தெரியுமா...?

இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்துக்கொண்டிருக்கும் எலக்ட்ரிக் வாகனச் சந்தையில் பல்வேறு வாகன தயாரிப்பு நிறுவனங்கள் அதன் எலக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்து வருகின்றன. அந்தவகையில், 22கிம்கோ மற்றும் ரிவோல்ட் இன்டெல்லிகார்ப் ஆகிய இரு நிறுவனமும் அண்மையில், இதேபோன்று பேட்டரியை மாற்றிக்கொள்ளும் ரகத்திலான மின்வாகனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்திருந்தது குறிப்பிடத்தகுந்தது.

உலகையே கலக்க களமிறங்குகிறது சென்னை நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் பைக்: எப்போது தெரியுமா...?

இதே ரகத்திலான பைக்கைத்தான் பிளாக்ஸ்மித் நிறுவனமும் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கின்றது. இதற்கான பேட்டரிகள் மற்றும் சார்ஜிங் நிலையங்களை இந்தியாவில் நிறுவும் பணியையும் அந்த நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது. இதனை ஆங்கிலத்தில் ஸ்வாப்பிங் டெக்னாலஜி கூறப்படுகிறது. இந்த வசதிமூலம், பேட்டரியின் சார்ஜ் தீர்ந்துவிட்டால், பேட்டரியை மட்டும் தனியாக கழட்டி சார்ஜ் செய்துகொள்ளலாம். இல்லையெனில், அதற்காக நிறுவப்பட்ட பிரத்யேக நிலையங்களில், தங்களுடைய சார்த் தீர்ந்த பேட்டரியை ஒப்படைத்துவிட்டு, முழுமையான சார்ஜைப் பெற்ற பேட்டரியை பைக்கில் பொருத்திக்கொண்டு செல்லலாம். இது ஸ்வாப்பிங் டெக்னாலஜி என கூறப்படுகின்றது.

உலகையே கலக்க களமிறங்குகிறது சென்னை நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் பைக்: எப்போது தெரியுமா...?

இந்நிலையில், பிளாக்ஸ்மித் நிறுவனம் அதன் அப்கமிங் மாடலாக இருக்கும் பி2 எலக்ட்ரிக் பைக்குறித்த டீசர் இமேஜை வெளியிட்டுள்ளது. ஆனால், இந்த புகைப்படத்தைத் தவிர வேறு எந்தவொரு புகைப்படத்தையும் அந்த நிறுவனம் வெளியிடவில்லை. இருப்பினும், தற்போது வெளியாகியுள்ள இந்த புகைப்படத்தின் வடிவத்தையே, அடிப்படையாகக் கொண்டு இந்த பி2 பைக் உருவாக்கப்பட உள்ளது.

இதனை தயாரிக்கும் பணியில் அந்த நிறுவனம் அதி தீவிரமாக செயல்பட்டு வருன்றது. ஆகையால், நம்ம சென்னையிலேயே உற்பத்தியாகும் இந்த எலக்ட்ரிக் மிக விரைவிலேயே, புத்துணர்வான தோற்றத்தில் நாடு முழுவதும் காட்சியளிக்க இருக்கின்றது.

உலகையே கலக்க களமிறங்குகிறது சென்னை நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் பைக்: எப்போது தெரியுமா...?

அதேசமயம், பிளாக்ஸ்மித் நிறுவனத்தின் இந்த எலக்ட்ரிக் பைக்கில் பல்வேறு சிறப்பம்சங்கள் எதிர்பார்க்கப்படுகின்றது. அந்தவகையில், முழுமையான டிஜிட்டல் மயமாக்கப்பட்ட இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர், பன்தன்மைக் கொண்ட ரைடிங் மோட்கள், எல்இடி தரத்திலான மின்விளக்குகள் மற்றும் நேவிகஷன் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

உலகையே கலக்க களமிறங்குகிறது சென்னை நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் பைக்: எப்போது தெரியுமா...?

இத்துடன், பி2 எலக்ட்ரிக் பைக்கில் 72வோல்ட் லித்தியம் அயன் பேட்டரி இணைக்கப்பட உள்ளது. இது ஒரு முழுமையான சார்ஜில் 120 கிமீ தூரம் வரை பயணிக்க உதவும். மேலும், ரிவோல்ட்டில் எலக்ட்ரிக் பைக்கில் இருப்பதைப் போன்றே, பல வகைகளில் பைக்கின் பேட்டரியை சார்ஜ் செய்துகொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதேசமயம், இந்த எலக்ட்ரிக் பைக் அதிகபட்சமாக 120கிமீ வேகத்தில் செல்லக்கூடியது. இது, வெறும் 3.7 செகண்டுகளில் மணிக்கு 50 கிமீ என்ற வேகத்தை தொட்டுவிடும்.

உலகையே கலக்க களமிறங்குகிறது சென்னை நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் பைக்: எப்போது தெரியுமா...?

பிளாக்ஸ்மித் நிறுவனம், அதன் முதல் எலக்ட்ரிக் பைக்கை முதற்கட்டமாக இந்திய இருசக்கர வாகனச் சந்தையை கருத்தில் கொண்ட கலமிறக்கப்பட உள்ளது. இதைத்தொடர்ந்தே சர்வதேச சந்தையிலும் இந்த எலக்ட்ரிக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்கான பணிகளில் பிளாக்ஸ்மித் நிறுவனம் மிகவும் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றது. மேலும், இந்த பி2 எலக்ட்ரிக் பைக் சென்னை ஆன்-ரோடில் ரூ. 2 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles
English summary
Blacksmith B2 Electric Bike Teased Ahead Of Indian Launch. Read In Tamil.
Story first published: Friday, June 28, 2019, 10:11 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X