கார்களை போல பைக்குகளிலும் 'எம்' பிராண்டை அறிமுகப்படுத்தும் பிஎம்டபிள்யூ!

கார்களை போன்று தனது சூப்பர் பைக்குகளிலும் எம் பிராண்டில் புதிய மாடல்களை அறிமுகப்படுத்த பிஎம்டபிள்யூ நிறுவனம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

கார்களை போல பைக்குகளின் 'எம்' பிராண்டை அறிமுகப்படுத்தும் பிஎம்டபிள்யூ!

பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது சொகுசு கார்களின் அதி செயல்திறன் மிக்க மாடல்களை எம் பிராண்டின் கீழ் விற்பனை செய்து வருகிறது. பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் சாதாரண சொகுசு கார்களின் தோற்றம், எஞ்சின் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை அதன் எம் பிரிவு செய்து வருகிறது.

கார்களை போல பைக்குகளின் 'எம்' பிராண்டை அறிமுகப்படுத்தும் பிஎம்டபிள்யூ!

செயல்திறன் மிக்க கார்களை விரும்புவோர் மத்தியில் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் எம் பிராண்டில் விற்பனை செய்யப்படும் கார்கள் மிகவும் பிரசித்தம் பெற்றுள்ளது. இந்த நிலையில், இதே பாணியில் தனது சூப்பர் பைக்குகளின் அதி செயல்திறன் மிக்க மாடல்களை எம் பிராண்டில் அறிமுகம் செய்ய அந்நிறுவனம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது தெரிய வந்துள்ளது.

கார்களை போல பைக்குகளின் 'எம்' பிராண்டை அறிமுகப்படுத்தும் பிஎம்டபிள்யூ!

கடந்த 2016ம் ஆண்டிலிருந்தே இதுகுறித்த செய்திகள் வதந்திகளாக இருந்து வந்தன. ஆனால், தற்போது இது உறுதியாகி இருக்கிறது. ஆம், ஐரோப்பிய ஒன்றிய காப்புரிமை அலுவலகத்தில், தனது எம் பிராண்டு சூப்பர் பைக்குகளுக்கு காப்புரிமை பெறுவதற்கான ஆவணங்களை பிஎம்டபிள்யூ சமர்ப்பித்துள்ளது.

கார்களை போல பைக்குகளின் 'எம்' பிராண்டை அறிமுகப்படுத்தும் பிஎம்டபிள்யூ!

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் உயர் வகை சூப்பர் பைக்குகளில் ஸ்போர்ட் என்பதை குறிக்கும் விதத்தில், எஸ் என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. எஸ் 1000 ஆர்ஆர், எஸ் 1000 எக்ஸ்ஆர் மற்றும் ஆர் 1250 ஜிஎஸ் ஆகிய மாடல்கள் எம் வரிசை அடைமொழியுடன் கூடுதல் சிறப்புகளை பெற்று வர இருக்கிறது.

கார்களை போல பைக்குகளின் 'எம்' பிராண்டை அறிமுகப்படுத்தும் பிஎம்டபிள்யூ!

இதன்படி, எம் 1000 ஆர்ஆர், எம் 1000 எக்ஸ்ஆர் மற்றும் எம் 1250 ஜிஎஸ் ஆகிய மாடல்களில் எதிர்பார்க்கப்படுகிறது. இதில், ஆர் 1250 ஜிஎஸ் மாடலில் 1,300 சிசி எஞ்சினுடன் எம் வரிசையில் வர இருப்பதாக தெரிய வருகிறது.

கார்களை போல பைக்குகளின் 'எம்' பிராண்டை அறிமுகப்படுத்தும் பிஎம்டபிள்யூ!

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் புதிய எம் வரிசை பைக்குகள் பெர்ஃபார்மென்ஸ் பைக் பிரியர்கள் மத்தியில் பேராவலை ஏற்படுத்தி உள்ளது. தனித்துவமான டிசைன் அம்சங்கள், செயல்திறன் மிக்க எஞ்சின் மற்றும் இதர அம்சங்கள் இந்த பைக்குகளை தனித்துவமான தேர்வாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இந்த பைக்குகள் குறித்து கூடுதல் தகவல்கள் வெளியாகும் என்று நம்பலாம்.

Most Read Articles

English summary
According to media report, BMW is planning to launch superbikes in M brand soon.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X