பிஎஸ்6 தரத்திற்கு மாற்றப்பட்ட வெஸ்பா எஸ்எக்ஸ்இசட்150 ஸ்கூட்டர்... இவ்வளவு விலையா...

பிஎஸ்6 தரத்திற்கு மேம்படுத்தப்பட்ட வெஸ்பா எஸ்எக்ஸ்எல்150 ஸ்கூட்டர் அறிமுகத்திற்கு முன்னதாக சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சோதனை ஓட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ள நிலையில் இதன் மூலம் கிடைத்துள்ள தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

பிஎஸ்6 தரத்திற்கு மாற்றப்பட்ட வெஸ்பா எஸ்எக்ஸ்இசட்150 ஸ்கூட்டர்... இவ்வளவு விலையா...

மறைப்பு எதுவும் இன்றி சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய ஸ்கூட்டரின் வெளிப்புற டிசைன்கள் எதுவும் முந்தைய மாடலில் இருந்து பெரியளவில் மாற்றப்பட்டுள்ளதாக தெரியவில்லை. மிக நுட்பமான மாற்றங்கள் தான் இந்த புதிய வெஸ்பா எஸ்எக்ஸ்எல்150 ஸ்கூட்டரில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

பிஎஸ்6 தரத்திற்கு மாற்றப்பட்ட வெஸ்பா எஸ்எக்ஸ்இசட்150 ஸ்கூட்டர்... இவ்வளவு விலையா...

ஹெட்லைட் அமைப்பு, எக்ஸாஸ்ட் ப்ரோடெக்டர், ஃபெண்டர் கார்னிஷ் மற்றும் தட்டையான இருக்கை போன்றவைகள் அனைத்தும் முந்தைய மாடலின் தோற்றத்தை தான் தருகின்றன. செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் உள்ளிட்டவை புதிய வெஸ்பா எஸ்எக்ஸ்எல்150 பிஎஸ்6 மாடலில் சிறப்பம்சங்களாக கொடுக்கப்பட்டுள்ளன.

பிஎஸ்6 தரத்திற்கு மாற்றப்பட்ட வெஸ்பா எஸ்எக்ஸ்இசட்150 ஸ்கூட்டர்... இவ்வளவு விலையா...

சஸ்பென்ஷன் மற்றும் ப்ரேக்கிங் அமைப்புகளில் எந்த மாற்றமும் இல்லை. இந்த புதிய எஸ்எக்ஸ்எல்150 ஸ்கூட்டரில் பிஎஸ்6-க்கு இணக்கமான 154.8சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் ஃப்யூல்-இன்ஜெக்‌ஷன் அமைப்புடன் 10.4 பிஎச்பி பவரையும் 10.9 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

பிஎஸ்6 தரத்திற்கு மாற்றப்பட்ட வெஸ்பா எஸ்எக்ஸ்இசட்150 ஸ்கூட்டர்... இவ்வளவு விலையா...

இந்த பிஎஸ்6 ஸ்கூட்டருக்கான முன்பதிவுகள் இந்தியா முழுவதும் ஆரம்பமாகிவிட்ட நிலையில் புனே டீலர்கள் ரூ.5,000-ல் முன்பதிவுகள் செய்யப்படுவதை உறுதி செய்துள்ளனர். இந்த ஸ்கூட்டருக்கான டெலிவரிகள் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தொடங்கவுள்ளது.

பிஎஸ்6 தரத்திற்கு மாற்றப்பட்ட வெஸ்பா எஸ்எக்ஸ்இசட்150 ஸ்கூட்டர்... இவ்வளவு விலையா...

வெஸ்பாவின் தற்போதைய எஸ்எக்ஸ்எல்150 மாடல் இந்திய எக்ஸ்ஷோரூமில் ரூ.1.14 லட்சத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த பிஎஸ்6 வெர்சன் ரூ.1.35 லட்சத்தில் இருந்து விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிஎஸ்6 தரத்திற்கு மாற்றப்பட்ட வெஸ்பா எஸ்எக்ஸ்இசட்150 ஸ்கூட்டர்... இவ்வளவு விலையா...

வெஸ்பா எஸ்எக்ஸ்எல்150 ஸ்கூட்டரை போன்று ஏப்ரிலியா எஸ்ஆர்150 ஸ்கூட்டரும் விரைவில் பிஎஸ்6 தரத்திற்கு மாற்றப்படவுள்ளது. ஆனால் பிஎஸ்6 தரத்திற்கு மாற்றப்படவுள்ள இந்த ஸ்கூட்டருக்கு ஏப்ரிலியா நிறுவனம் ஆர்எஸ்160 என பெயரிடவுள்ளதாக செய்திகள் பரவி வருகின்றன. இது எந்தளவிற்கு உண்மை என தெரியவில்லை.

பிஎஸ்6 தரத்திற்கு மாற்றப்பட்ட வெஸ்பா எஸ்எக்ஸ்இசட்150 ஸ்கூட்டர்... இவ்வளவு விலையா...

பிஎஸ்4 தரத்தில் உள்ள தற்போதைய ஏப்ரிலியா எஸ்ஆர்150 ஸ்கூட்டர் ரூ.75,000லிருந்து ரூ.90,000 வரை இந்திய எக்ஸ்ஷோரூமில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பிஎஸ்6 மாற்றத்தால் இந்த ஸ்கூட்டர் ரூ.18,000- ரூ.22,000 வரை விலை அதிகரிக்கப்படலாம் என தெரிகிறது.

பிஎஸ்6 தரத்திற்கு மாற்றப்பட்ட வெஸ்பா எஸ்எக்ஸ்இசட்150 ஸ்கூட்டர்... இவ்வளவு விலையா...

இந்த சோதனை ஒட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ள எஸ்எக்ஸ்எல்150 ஸ்கூட்டரின் தோற்றம் மூலம் இந்த ஸ்கூட்டர் அறிமுகமாகவதற்கு அனைத்து விதத்திலும் தயாராகிவிட்டது என்பது தெரிய வருகிறது. எரிபொருள் திறனில் மாற்றம் செய்யப்பட்டிருந்தால், இந்த புதிய பிஎஸ்6 வெஸ்பா ஸ்கூட்டரின் மைலேஜ் என்ன என்பது தான் தற்போது வாடிக்கையாளர்கள் இடையே மிக பெரிய கேள்வியாக உள்ளது.

Most Read Articles
மேலும்... #வெஸ்பா #vespa
English summary
Spy Pics: Vespa SXZ150 BS-VI Spotted Testing Ahead Of India Launch
Story first published: Monday, December 2, 2019, 18:19 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X