இந்திய சாலையில் களமிறக்கப்பட்ட சிஎஃப் மோட்டோ 650ஜிடி: ஸ்பை புகைப்படங்கள்!

சிஎஃப் மோட்டோ நிறுவனத்தின் 650ஜிடி மாடல் பைக்கினை இந்தியச் சாலையில் வைத்து பரிசோதனைக்கு உட்படுத்தும்போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த மோட்டார்சைக்கிளின் சில முக்கிய தகவல்களை இந்த பதிவில் காணலாம்.

இந்திய சாலையில் களமிறக்கப்பட்ட சிஎஃப் மோட்டோ 650ஜிடி: ஸ்பை புகைப்படங்கள்!

சீனாவை மையமாகக் கொண்டு இயங்கும் சிஎஃப் மோட்டோ நிறுவனம், அதன் ஆர்ப்பரிக்கும் ஸ்டைலிலான பைக்குகளை இந்திய இருசக்கர வாகனச் சந்தையில் மிக விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக அண்மையில் அறிவித்திருந்தது. அந்த வகையில், அந்த நிறுவனத்தின் 250 முதல் 650 சிசி திறன்கொண்ட பைக்குகளை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்திய சாலையில் களமிறக்கப்பட்ட சிஎஃப் மோட்டோ 650ஜிடி: ஸ்பை புகைப்படங்கள்!

மேலும், அந்த நிறுவனத்தின் புகழ்வாய்ந்த மாடல்களான என்கே250, 650ஜிடி ஆகிய பைக்குகள் இந்தியாவில் களமிறக்கப்படலாம் என கூறப்பட்டது. அவ்வாறு, களமிறக்கப்படும் பைக்குகளை ஏஎம்டபிள்யூ நிறுவனத்துடன் இணைந்து இந்திய சந்தையில் விற்பனைச் செய்ய திட்டமிட்டிருப்பதாக சிஎஃப் மோட்டோ தெரிவித்தது.

இந்திய சாலையில் களமிறக்கப்பட்ட சிஎஃப் மோட்டோ 650ஜிடி: ஸ்பை புகைப்படங்கள்!

இந்நிலையில், சிஎஃப் நிறுவனம் அதன் ஜிடி650 மாடல் மோட்டார்சைக்கிளை இந்தியச் சாலையில் பரிசோதனைச் செய்யும் காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது. அந்த மோட்டார்சைக்கிளின் முதல் ஸ்பை புகைப்படத்தை ஜிக் வீல்ஸ் ஆங்கில இணையதளம் வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படத்தை வைத்து பார்த்தால் இந்தியாவில் சிஎஃப் நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கும் முதல் மாடலாக 650ஜிடி இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய சாலையில் களமிறக்கப்பட்ட சிஎஃப் மோட்டோ 650ஜிடி: ஸ்பை புகைப்படங்கள்!

ஏனென்றால், சிஎஃப் நிறுவனத்தின் புகழ்வாய்ந்த மாடல்களாக இது இருக்கின்றது. மேலும், ஸ்டைல் மற்றும் பவர் இந்தியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும் என கூறப்படுகிறது.

சிஎஃப் நிறுவனம் இன்னும் சில வாரங்களில் அதன் பைக்குகளை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துவிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

READ MORE: 5 பைசா செலவில் ஒரு கிமீ பயணம்: ஐஐடி மாணவர்கள் உருவாக்கிய அசத்தலான மின் வாகனம்!

இந்திய சாலையில் களமிறக்கப்பட்ட சிஎஃப் மோட்டோ 650ஜிடி: ஸ்பை புகைப்படங்கள்!

650ஜிடி பைக்குடன், அந்த நிறுவனத்தின் மேலும் சில பைக்குகளும் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. ஆனால், அந்த நிறுவனம் எந்தெந்த மாடல்களை எல்லாம் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கின்றது என்ற தகவல் இதுவரை அதிகாரப்பூர்வமாக கிடைக்கவில்லை.

இந்திய சாலையில் களமிறக்கப்பட்ட சிஎஃப் மோட்டோ 650ஜிடி: ஸ்பை புகைப்படங்கள்!

சிஎஃப் நிறுவனத்தின் 650ஜிடி மோட்டார்சைக்கிள் அந்த நிறுவனத்தின் 650என்கே மற்றும் 650எம்டி ஆகிய பைக்குகளை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பைக்குகளையும் அண்மையில் இந்தியச் சாலையில் வைத்து பரிசோதனைச் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்திய சாலையில் களமிறக்கப்பட்ட சிஎஃப் மோட்டோ 650ஜிடி: ஸ்பை புகைப்படங்கள்!

இந்தியச் சாலைகளில் களமிறக்கப்பட இருக்கும் இந்த புத்தம் புதிய மாடல்களில் வித்தியாசமான இருக்கை அமைப்பு, ரிவைஸ்ட் எர்கோனோமிக்ஸ் மற்றும் எல்இடி செட்-அப் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. இத்துடன் இந்த பைக்கில் அதிக சக்தியை வெளிப்படுத்தும் 649சிசி ட்வின் சிலிண்டர் டிஓஹெச்சி எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, 75பிஎச்பி பவரையும், 45 என்எம் டார்க்கையும் வழங்கும் திறன்கொண்டது.

இந்திய சாலையில் களமிறக்கப்பட்ட சிஎஃப் மோட்டோ 650ஜிடி: ஸ்பை புகைப்படங்கள்!

இந்த பைக் இந்திய இருசக்கர வாகனச் சந்தையில் விற்பனைக்கு வந்தால், கவாஸாகி நிறுவனத்தின் நிஞ்சா 650 மாடலுக்கு போட்டியாக இருக்கும். ஏனென்றால், நிஞ்சாவுக்கு ஈடான சக்தியுடன், மலிவான விலையில் கிடைக்கும் பைக்காக இது இருக்கும். அதேசமயம், பிரீமியம் ரக மோட்டார்சைக்கிளாகவும் இது இருக்கின்றது.

READ MORE: உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் மீது திடுக்கிடும் புகார்.. என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்

இந்திய சாலையில் களமிறக்கப்பட்ட சிஎஃப் மோட்டோ 650ஜிடி: ஸ்பை புகைப்படங்கள்!

சிஎஃப் மோட்டோ நிறுவனம் கடந்த 1989ம் ஆண்டு தான் தொடங்கப்பட்டது. சீனாவை மையமாகக் கொண்டு இயங்கும் இந்த நிறுவனம் 100க்கும் மேற்பட்ட வாகனங்களையும், 51 வகையான எஞ்சின்களையும் இதுவரை தயாரித்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஏடிவி எனப்படும் ஆல்டெர்ரெயின் ரக வாகனங்களை வடிவமைப்பதில் இந்த நிறுவனம் பிரபலமானது.

Most Read Articles

English summary
CF Moto 650GT Spotted in India For The First Time. Read In Tamil.
Story first published: Tuesday, April 30, 2019, 15:35 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X