சிஎஃப் மோட்டோ பைக்குகளுக்கான முன்பதிவு தேதி விபரம்!

சீனாவை சேர்ந்த சிஎஃப் மோட்டோ பைக் தயாரிப்பு நிறுவனம் இந்தியாவில் ஏஎம்டபிள்யூ நிறுவனத்தின் கூட்டணியில் பைக் வர்த்தகத்தை துவங்க இருக்கிறது. அண்மையில் இந்த நிறுவனம் 300என்கே, 650என்கே, 650எம்டி மற்றும் 650ஜிடி ஆகிய 4 மாடல்களை அறிமுகம் செய்தது.

சிஎஃப் மோட்டோ பைக்குகளுக்கான முன்பதிவு தேதி விபரம்!

இந்த நிலையில், இந்த நான்கு புதிய மாடல்களுக்கும் வரும் 5ந் தேதி முன்பதிவு துவங்கப்பட இருப்பதாக ஏஎம்டபிள்யூ - சிஎஃப் மோட்டோ கூட்டணி தெரிவித்துள்ளது. ரூ.5,000 முன்பணத்துடன் முன்பதிவு செய்யலாம். சிஎஃப் மோட்டோ நிறுவனத்தின் 4 புதிய பைக் மாடல்களும் ஹைதராபாத்தில் உள்ள ஆலையில் அசெம்பிள் செய்து விற்பனை செய்யப்பட இருக்கின்றன.

சிஎஃப் மோட்டோ பைக்குகளுக்கான முன்பதிவு தேதி விபரம்!

சென்னை, பெங்களூர், ஹைதராபாத், கவுகாத்தி, கொல்கத்தா மற்றும் மும்பை ஆகிய நகரங்களில் ஷோரூம்கள் செயல்பட இருக்கின்றன. பிற நகரங்களிலும் விரைவில் ஷோரூம்களை திறக்க உள்ளது.

சிஎஃப் மோட்டோ பைக்குகளுக்கான முன்பதிவு தேதி விபரம்!

புதிய சிஎஃப் மோட்டோ 300என்கே பைக் ரூ.2.29 லட்சத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கில் 292.4 சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 33.9 பிஎச்பி பவரையும்,, 20.5 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த பைக் கேடிஎம் 390 ட்யூக், பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் மற்றும் ஹோண்டா சிபிஆர் 300ஆர் ஆகிய பைக் மாடல்களுடன் போட்டி போடும்.

சிஎஃப் மோட்டோ பைக்குகளுக்கான முன்பதிவு தேதி விபரம்!

சிஎஃப் மோட்டோ 650என்கே பைக் மாடலானது ரூ.3.99 லட்சத்தில் கிடைக்கும். இந்த பைக்கில் பேரலல் ட்வின் சிலிண்டர்களுடன் 649.3 சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 61.54 பிஎச்பி பவரையும், 56 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த பைக் கவாஸாகி இசட்650 பைக்குடன் போட்டி போடும். ஆனால், அதனைவிட ரூ.1.70 லட்சம் விலை குறைவானதாக வந்திருக்கிறது.

சிஎஃப் மோட்டோ பைக்குகளுக்கான முன்பதிவு தேதி விபரம்!

சிஎஃப் மோட்டோ 650எம்டி பைக் ரூ.4.99 லட்சத்தில் கிடைக்கிறது. இந்த பைக்கில் பேரலல் ட்வின் சிலிண்டருடன் கூடிய 649.3 சிசி எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 70.7 பிஎச்பி பவரையும், 62 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. கவாஸாகி வெர்சிஸ் 650 பைக்குடன் போட்டி போடும்.

சிஎஃப் மோட்டோ பைக்குகளுக்கான முன்பதிவு தேதி விபரம்!

சிஎஃர் மோட்டோ 650ஜிடி பைக் மாடலானது ரூ.5.49 லட்சத்தில் கிடைக்கும். இந்த பைக்கில் 649.3 சிசி எஞ்சின்தான் உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 61.2 பிஎச்பி பவரையும், 58.5 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

சிஎஃப் மோட்டோ பைக்குகளுக்கான முன்பதிவு தேதி விபரம்!

சீனாவில் சிஎஃப் மோட்டோ நிறுவனமும் கேடிஎம் பைக் நிறுவனமும் கூட்டணி அமைத்து பைக் உற்பத்தி செய்து வருகின்றன. மேலும், கேடிஎம் பைக் தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து லைசென்ஸ் பெற்று பைக்குகளை வடிவமைத்து வருகிறது. இதனால், கேடிஎம் பைக்கின் டிசைன் அம்சங்கள் சிஎஃப் மோட்டோ பைக்குகளிலும் காண முடிகிறது.

சிஎஃப் மோட்டோ பைக்குகளுக்கான முன்பதிவு தேதி விபரம்!

வரும் அக்டோபர் முதல் டெலிவிரி பணிகள் துவங்கப்படும். போட்டியாளர்களைவிட சிஎஃப் மோட்டோ பைக் மாடல்கள் குறைவான விலையில் வந்துள்ளதால், இந்தியர்கள் மத்தியில் வரவேற்பை பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக, சிஎஃப் மோட்டோ 300என்கே பைக் இந்திய இளைஞர்களை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
AMW Motorcycles introduced CFMoto, and four of it's motorcycles on 19 July. These motorcycles are the 300NK, the 650NK, the 650MT, and the 650GT. All four products carry very competitive price tags, however, these price tags are just introductory offers. AMW Motorcycles have announced that booking for the motorcycles will officially begin on 5 August.
Story first published: Friday, August 2, 2019, 16:45 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X