இந்தியாவிலிருந்து மூட்டைக் கட்டும் அடுத்த அமெரிக்க பைக் நிறுவனம்

அமெரிக்காவை சேர்ந்த மற்றுமொரு பைக் தயாரிப்பு நிறுவனம் இந்தியாவிலிருந்து வெளியேற இருப்பது தெரிய வந்துள்ளது. கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

இந்தியாவிலிருந்து மூட்டைக் கட்டும் அடுத்த அமெரிக்க பைக் நிறுவனம்

ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள்களுக்கு கிடைத்த வரவேற்பும், இந்தியாவில் பைக் சந்தையிலிருக்கும் வளமான வர்த்தக வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், அமெரிக்காவை சேர்ந்த யுஎம் மற்றும் க்ளீவ்லேண்ட் ஆகிய நிறுவனங்கள் ஆர்வத்துடன் வர்த்தகத்தை துவங்கின.

இந்தியாவிலிருந்து மூட்டைக் கட்டும் அடுத்த அமெரிக்க பைக் நிறுவனம்

யுஎம் நிறுவனம் சில ஆண்டுகள் தாக்குப்பிடித்த நிலையில், இதற்கு மேல் ஆகாது என்று சத்தமில்லாமல் வெளியேறியது. இதைத்தொடர்ந்து, தற்போது க்ளீவ்லேண்ட் நிறுவனமும் இந்திய சந்தையிலிருந்து வெளியேறி உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்தியாவிலிருந்து மூட்டைக் கட்டும் அடுத்த அமெரிக்க பைக் நிறுவனம்

கடந்த ஆண்டுதான் ஆட்டோ எக்ஸ்போவின் மூலமாக இந்திய சந்தையில் க்ளீவ்லேண்ட் நிறுவனம் இந்தியாவில் களமிறங்கியது. முதல்கட்டமாக ஏஸ் மற்றும் மிஸ்ஃபிட் என்ற இரண்டு மோட்டார்சைக்கிள்களையும் களமிறக்கியது. முக்கிய உதிரிபாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு புனேயில் உள்ள ஆலையில் க்ளீவ்லேண்ட் பைக்குகள் அசெம்பிள் செய்யப்பட்டன.

இந்தியாவிலிருந்து மூட்டைக் கட்டும் அடுத்த அமெரிக்க பைக் நிறுவனம்

இந்த பைக்குகளில் 229 சிசி ஏர்கூல்டு எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. இந்த எஞ்சின் 15.4 எச்பி பவரையும், 16 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். ரூ.2.23 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350 உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக நிலைநிறுத்தப்பட்டது.

MOST READ:இந்தியாவில் டட்சன் கார் பிராண்டுக்கு மூடுவிழா நடத்த நிஸான் முடிவு?

இந்தியாவிலிருந்து மூட்டைக் கட்டும் அடுத்த அமெரிக்க பைக் நிறுவனம்

ஆனால், போட்டியாளர்களைவிட விலை அதிகம் என்பதால், இந்திய சந்தையில் எடுபடவில்லை. இதனால், விற்பனையும் இல்லை. கடந்த 8 மாதங்களாக புனே ஆலையில் க்ளீவ்லேண்ட் பைக்குகள் உற்பத்தி நடக்கவில்லை.

MOST READ:40 நாட்கள் 10,000 கிமீ: சென்னை இளைஞரின் புதிய சாதனை... இந்த ஸ்கூட்டரிலா இவ்வளவு தூரம் பயணித்தார்..?

இந்தியாவிலிருந்து மூட்டைக் கட்டும் அடுத்த அமெரிக்க பைக் நிறுவனம்

மும்பையில் முதல் ஷோரூமை திறந்த அந்தநிறுவனம் இந்த ஆண்டிற்குள் 100 ஷோரூம்களை இந்தியாவில் திறக்க முடிவு செய்திருந்தது. ஆனால், விற்பனை இல்லை என்பதால், டீலர்களை திறக்கும் கைவிட்டது.

MOST READ:எம்ஜி எலக்ட்ரிக் காரின் இந்திய விளம்பர தூதராக பிரபல ஹாலிவுட் நடிகர் நியமனம்

இந்தியாவிலிருந்து மூட்டைக் கட்டும் அடுத்த அமெரிக்க பைக் நிறுவனம்

எனவே, இந்திய சந்தையிலிருந்து வெளியேறுவதற்கு க்ளீவ்லேண்ட் சைக்கிள் ஒர்க்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக எக்ஸ்பிரஸ் டிரைவ்ஸ் தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது. நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஊழியர்களை உடனடியாக ராஜினாமா செய்து வேறு வேலை தேடிக்கொள்ளுமாறு க்ளீவ்லேண்ட் நிறுவனம் நோட்டீஸ் கொடுத்துள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Source: Express Drives

Most Read Articles

English summary
According to report, Cleveland Cyclewerks has discontinued bike sales in India.
Story first published: Thursday, October 24, 2019, 12:54 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X