2019 டக்கார் ராலி துவங்கியது... டிவிஎஸ், ஹீரோ அணிகள் பங்கேற்பு!
2019 டக்கார் ராலி பந்தயம் தென் அமெரிக்காவில் உள்ள பெரு நாட்டிலிருந்து துவங்கி இருக்கிறது. இந்தியாவிலிருந்து ஷெர்கோ டிவிஎஸ் அணி சார்பில் மைக்கேல் மெட்ஜ், அட்ரியன் மெட்ஜ், லாரென்ஸோ சான்டோலினோ மற்றும் கே
2019 டக்கார் ராலி பந்தயம் பெரு நாட்டில் துவங்கியது. இந்த பந்தயத்தில் இந்தியாவிலிருந்து டிவிஎஸ் மோட்டார்ஸ் மற்றும் ஹீரோ மோட்டோகார்ப் அணிகள் சார்பில் முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

உலகின் மிக சவாலான ராலி ரேஸ்களில் டக்கார் ராலி மிக கடும் சவால்களை கொண்டதாக இருந்து வருகிறது. வாகனங்களின் திறன் மட்டுமின்றி, பங்கேறும் வீரர்களின் உடல் மற்றும் மன வலிமையை சோதித்து பார்க்கும் விதத்தில் இந்த ராலி இருந்து வருகிறது.

தற்போது 41வது எடிசனாக 2019 டக்கார் ராலி பந்தயம் தென் அமெரிக்காவில் உள்ள பெரு நாட்டிலிருந்து துவங்கி இருக்கிறது. இந்த பந்தயத்தில் உலகின் முன்னணி ராலி பந்தய வீரர்கள் பங்கேற்றுள்ளனர். மேலும், இந்தியாவிலிருந்து ஷெர்கோ டிவிஎஸ் அணி சார்பில் மைக்கேல் மெட்ஜ், அட்ரியன் மெட்ஜ், லாரென்ஸோ சான்டோலினோ மற்றும் கேபி அர்விந்த் பங்கேற்றுள்ளனர்.

ஹீரோ மோட்டோகார்ப் அணி சார்பில் ஓரியோல் மெனோ, சிஎஸ் சந்தோஷ் மற்றும் ஜாக்கிம் ரோட்ரிக்கஸ் பங்கேற்றுள்ளனர். மேலும், இந்த ஆண்டு டக்கார் ராலியில் இந்தியாவை சேர்ந்த அணிகளின் வீரர்கள் கலக்கி வருகின்றனர்.

முதல் ஸ்டேஜ் முடிவில் ஷெர்கோ டிவிஎஸ் அணியை சேர்ந்த மைக்கேல் மெட்ஜ் 12வது இடத்தையும், அட்ரியன் மெட்ஜ் 24வது இடத்தையும், லாரென்ஸோ சான்டோலினோ 25வது இடத்தையும் கேபி. அர்விந்த் 71வது இடத்தையும் பிடித்தனர்.

ஹீரோ மோட்டோகார்ப் அணியின் ஓரியோல் மெனோ 14வது இடத்தையும், சிஎஸ்.சந்தோஷ் 20வது இடத்தையும், ஜாக்கிம் ரோட்ரிக்கஸ் 23வது இடத்தையும் பிடித்துள்ளனர். ஒட்டுமொத்த அளவில் முதல் இடத்தை மான்ஸ்டர் எனெர்ஜி ஹோண்டா அணி வீரர் ஜோன் பரேடா போர்ட் முதல் இடத்்தையும், பாப்லோ குயின்டானிலா இரண்டாவது இடத்தையும், ரிக்கி பிராபெக் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

இரண்டாவது ஸ்டேஜ் பந்தயமானது பிஸ்கோ என்ற இடத்திலிருந்து ஜான் ஜுவான் டி மார்கோனா என்ற இடம் வரை நடைபெற இருக்கிறது. வரும் நாட்களில் மிக மோசமான நிலப்பரப்புகளையும், கடினமான சீதோஷ்ண நிலைகளையும் வீரர்கள் கடக்க வேண்டி இருக்கும் என்பதால், பந்தயம் விறுவிறுப்பு கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








