40 ஜுரிக்கள் ஒரு மனதாக தேர்வு செய்த டுகாட்டி பைக்: எதற்காக தெரியுமா...?

2019ம் ஆண்டிற்கான ரெட் டாட் அவார்டை டுகாட்டி நிறுவனத்தின் டயாவெல் 1260 பைக் வென்றுள்ளது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

2019ம் ஆண்டிற்கான ரெட் டாட் டிசைன் விருதை பெற்ற டுகாட்டி: எதற்காக தெரியுமா...?

ரெட் டாட் விருதானது வாகனங்களுக்கு வழங்கப்படும் விருதாகும். இந்த விருது வழங்கும் நிகழ்வானது கடந்த 1955ம் ஆண்டில் இருந்து நடைபெற்று வருகிறது. தனியார் அமைப்பு மூலம் வழங்கப்படும் இந்த விருதானது, பல்வேறு முன்னணி ஆய்வாளர்களின் (ஜுரிக்களின்) கருத்தைத் தொடர்ந்து வழங்கப்படுகிறது. அவ்வாறு, இந்த விருதினை சிறப்பான டிசைன், செயல்திறன் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட சிலவற்றை அடிப்படையாகக் கொண்டு சந்தையில் விற்பனையாகும் வாகனங்களுக்கு வழங்கப்படுகிறது.

2019ம் ஆண்டிற்கான ரெட் டாட் டிசைன் விருதை பெற்ற டுகாட்டி: எதற்காக தெரியுமா...?

இந்நிலையில், 2019ம் ஆண்டிற்கான ரெட் டாட் விருதினை டுகாட்டி நிறுவனத்தின் டயாவெல் 1260 மாடல் பைக் வென்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறந்த தோற்றம் மற்றும் அதிநவீன வசதிகளைக் கொண்டிருப்பதால் இந்த விருதினை அந்த பைக்கிற்கு வழங்கியிருப்பதாக அவ்விருதினை வழங்கிய ஜுரிக்கள் குழு அறிவித்துள்ளது.

2019ம் ஆண்டிற்கான ரெட் டாட் டிசைன் விருதை பெற்ற டுகாட்டி: எதற்காக தெரியுமா...?

அதன்படி, இந்த வருடம் நடைபெற்ற இப்போட்டியில் 40 நபர்களைக் கொண்ட ஜுரிக்கள் அமர்வு சிறந்த பைக்கிற்கான ஆய்வினை மேற்கொண்டுள்ளனர். அந்த வகையில் இந்த போட்டியில் 5 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட பைக்குகள் கலந்துக் கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால், இதில் டுகாட்டியின் டயாவெல் 1260 பைக் தான் இந்த பட்டத்தைத் தட்டிச் சென்றுள்ளது.

MOST READ: சார்ஜ் தீர்ந்துவிட்டால் கவலை வேண்டாம்: தானாக மின் சக்தியை மோட்டாரில் பெறும் ஆடியின் அதிநவீன கார்!

2019ம் ஆண்டிற்கான ரெட் டாட் டிசைன் விருதை பெற்ற டுகாட்டி: எதற்காக தெரியுமா...?

டுகாட்டி நிறுவனத்திற்கு இந்த விருது கிடைப்பது இது முதல்முறையல்ல, இதற்கு முன்னதாகவும் கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற இப்போட்டியில் எக்ஸ்-டயாவெல் எஸ் மாடல் பைக் இவ்விருதினை வென்றுள்ளது. அதற்கு முன்பாக பனிகேல் என்ற மாடல் 2013ம் ஆண்டிற்கான விருதினைத் தட்டிச் சென்றுள்ளது.

2019ம் ஆண்டிற்கான ரெட் டாட் டிசைன் விருதை பெற்ற டுகாட்டி: எதற்காக தெரியுமா...?

இவ்வாறு, பல முறை இந்த நிறுவனத்தின் பைக்குகள், சிறந்த மாடல் மற்றும் சக்தி வாய்ந்த பைக்குகளுக்கான பட்டத்தை வென்றுக் குவித்து வருகின்றன. இந்த நிலையில்தான், தற்போது 2019ம் ஆண்டிற்கான ரெட் 'டாட் டிசைன் விருது 2019' விருதினை டயாவெல் 1260 பைக் தட்டிச் சென்றுள்ளது. இதனால், டுகாட்டி நிறுவனம் மகிழ்ச்சியின் உச்சத்தில் திகைத்துள்ளது.

2019ம் ஆண்டிற்கான ரெட் டாட் டிசைன் விருதை பெற்ற டுகாட்டி: எதற்காக தெரியுமா...?

கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற இஐசிஎம்ஏ வாகன கண்காட்சியில் டயாவெல் 1260 பைக்கை டுகாட்டி நிறுவனம் அறிமுகம் செய்திருந்தது. இந்த பைக்கில் பெரியளவிலான 1,262சிசி, லிக்யூட்-கூல்ட், வி-டிவின் மோட்டார் சர்னிங் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 159 குதிரை திறனை 9,500 ஆர்பிஎம்-இல் வெளிப்படுத்தும் சக்தி வாய்ந்தது. அதேபோன்று, 129என்எம் டார்க்கை 7,500 ஆர்பிஎம்-இல் வெளிப்படுத்தும். இதில் டெஸ்மோடிரோமிக் வேரியபில் டைமிங் என்னும் புதிய பவர் பிளாண்ட் அம்சமும் இணைக்கப்பட்டுள்ளது.

MOST READ: ராயல் என்பீல்டின் புதிய புல்லட் டிரையல்ஸ் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா...?

2019ம் ஆண்டிற்கான ரெட் டாட் டிசைன் விருதை பெற்ற டுகாட்டி: எதற்காக தெரியுமா...?

டுகாட்டியின் டயாவெல் பைக் 1260 மற்றும் 1260 எஸ் ஆகிய இரு வேரியண்டில் சந்தையில் கிடைப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்த இரு மாடல்களும் இதுவரை இந்தியாவில் விற்பனைக்கு வரவில்லை. ஆனால், இந்த பைக் நடப்பாண்டின் மத்தியில் விற்பனைக்கு வந்துவிடும் எனக் கூறப்படுகிறது.

Most Read Articles

மேலும்... #டுகாட்டி #ducati
English summary
ducati-diavel-1260-bike-wins-red-dot-design-award-2019
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X