விற்பனையை அதிகரிக்க இலவசத்தை வாரி வழங்கும் டுகாட்டி: சிறப்பான அறிவிப்பால் போட்டி நிறுவனங்கள் கலக்கம்

டுகாட்டி நிறுவனம், விற்பனையில் இருந்து விலக்கப்பட்ட தனது மான்ஸ்டர் 821 மாடல் மோட்டார்சைக்கிளை மீண்டும் இந்திய இருசக்கர வாகனச் சந்தையில் கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது. தொடர்ந்து, இந்த மோட்டார்சைக்கிளின் விற்பனையை அதிகரிக்கும் விதமாக அந்த பைக்குடன் இலவசமாக சில ஆக்சஸெரீகளை வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது.

விற்பனையை அதிகரிக்க இலவசங்களை அள்ளி வழங்கும் டுகாட்டி: சிறப்பான அறிவிப்பால் போட்டி நிறுவனங்கள் கலக்கம்...!

அதிநவீன தொழில்நுட்பங்களைக்கொண்ட ஸ்போர்ட் ரக பைக்குகளைத் தயாரித்து வரும் டுகாட்டி நிறுவனம் தனது புத்தம் புதிய அப்கிரேட் செய்யப்பட்ட மான்ஸ்டர் 821 மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. டுகாட்டி நிறுவனம் இந்த மோட்டார்சைக்கிளை கடந்த 2016ம் ஆண்டு விற்பனையில் இருந்து விலக்கிக் கொண்டு, மீண்டும் நடப்பாண்டில் அறிமுகம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

விற்பனையை அதிகரிக்க இலவசங்களை அள்ளி வழங்கும் டுகாட்டி: சிறப்பான அறிவிப்பால் போட்டி நிறுவனங்கள் கலக்கம்...!

அந்த வகையில் தற்போது அறிமுகமாகி இருக்கும் இந்த மான்ஸ்டர்821 மாடல் மோட்டார்சைக்கிளை மேம்படுத்தப்பட்ட புத்தம் புதிய மாடலாக மாற்றியமைத்துள்ளது டுகாட்டி. இதனால், பழைய மாடலைக் காட்டிலும் கணிசமான மாற்றங்களைக் கொண்டுள்ளது இந்த புதிய மாடல். அவ்வாறு, இந்த மோட்டார்சைக்கிளில் முக்கிய மாற்றமாக, பிஎஸ்-4 மாசு உமிழ்வு தர கட்டுப்பாட்டைக் கொண்ட எஞ்ஜின் இதில் பொருத்தப்பட்டுள்ளது.

விற்பனையை அதிகரிக்க இலவசங்களை அள்ளி வழங்கும் டுகாட்டி: சிறப்பான அறிவிப்பால் போட்டி நிறுவனங்கள் கலக்கம்...!

மேலும், டுகாட்டியின் மான்ஸ்ட்ர் 1200 மாடல் மோட்டார்சைக்கிளில் கொடுக்கப்பட்டிருக்கும் அதே ஹெட்லைட் அமைப்பு தான், இந்த புதிய மான்ஸ்டர் 821 மாடலில் கொடுக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, பெட்ரோல் டேங்க், சைலென்சர் உள்ளிட்டவையில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால், பின்புற வால்பகுதியில் எந்தவொரு மாற்றமும் செய்யப்படவில்லை. இவ்வாறு வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக தற்போது விற்பனைக்கு அறிமுகமாகியிருக்கும் மான்ஸ்டர் 821 மோட்டார்சைக்கிளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

விற்பனையை அதிகரிக்க இலவசங்களை அள்ளி வழங்கும் டுகாட்டி: சிறப்பான அறிவிப்பால் போட்டி நிறுவனங்கள் கலக்கம்...!

இந்நிலையில், இந்த மோட்டார்சைக்கிளின் விற்பனையைக் கூட்டும் விதமாக ஓர் அறிவிப்பை இந்திய டுகாட்டி டீலர்கள் அறிவித்துள்ளனர். அதன்படி, இருதுளை வெளியேற்றும் உடைய டெர்மிக்னானி சைலென்சர் மற்றும் டி.க்யூ.எஸ்., அப்/டவுண் எனப்படும் தொழில்நுட்பத்தை இலவசமாக வழங்க இருக்கிறது. டிக்யூஎஸ் என்பது, மோட்டார்சைக்கிள் இயங்கிக்கொண்டிருக்கும்போது, ஆக்ஸிலேட்டரை ஆட்டோமேடிக்காக கண்ட்ரோல் செய்ய உதவும் தொழில்நுட்பமாகும். இந்த சலுகையானது ஏப்ரல் 30 தேதி வரை வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது.

விற்பனையை அதிகரிக்க இலவசங்களை அள்ளி வழங்கும் டுகாட்டி: சிறப்பான அறிவிப்பால் போட்டி நிறுவனங்கள் கலக்கம்...!

இதுகுறித்து பேசிய டுகாட்டி நிறுவனத்தின் முதன்மை அதிகாரி, "டுகாட்டி நிறுவனம் கடந்த 2018ம் ஆண்டில் 5 சதவீத விற்பனைச் சரிவைக் கண்டிருக்கிறது. ஒட்டுமொத்தமாக கடந்த ஆண்டு 53 ஆயிரத்து 4 மோட்டார்சைக்கிள்கள் மட்டுமே விற்பனையாகி உள்ளன. இது கடந்த 2017ம் ஆண்டைக் காட்டிலும் 2 ஆயிரத்து 867 யூனிட்கள் குறைவாகும். ஆகையால், இந்த ஆண்டு விற்பனை அதிகரிக்க இதுபோன்ற சிறப்பு சலுகையை வாடிக்கையாளர்களுக்கு டுகாட்டி வழங்க இருக்கிறது" என்றார்.

விற்பனையை அதிகரிக்க இலவசங்களை அள்ளி வழங்கும் டுகாட்டி: சிறப்பான அறிவிப்பால் போட்டி நிறுவனங்கள் கலக்கம்...!

புதிதாக சந்தையில் களமிறங்கியுள்ள மான்ஸ்டர் 821 மாடல் மோட்டார்சைக்கிளில், 821சிசி எல்-ட்வின் சிலிண்டர் அமைப்புடைய எஞ்சின் பொருத்தப்பட்டு உள்ளது. இது அதிகபட்சமாக 108 பிஎச்பி பவரையும், 86 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. இதில், 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. மேலும், இந்த மோட்டார்சைக்கிளில் அர்பன், ஸ்போர்ட் மற்றும் டூரிங் ஆகிய 3 விதமான டிரைவிங் மோடுகள் வழங்கப்பட்டுள்ளன. இது ரைடருக்கு அசத்தலான பயண அனுபவத்தை வழங்கும்.

விற்பனையை அதிகரிக்க இலவசங்களை அள்ளி வழங்கும் டுகாட்டி: சிறப்பான அறிவிப்பால் போட்டி நிறுவனங்கள் கலக்கம்...!

புதிய டுகாட்டி மான்ஸ்ட்டர் 821 பைக் ரூ.9.51 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் சுஸுகியின் ஜிஎஸ்எக்ஸ்-எஸ்750, ட்ரையம்ப் ஸ்ட்ரீட் ட்ரிப்பிள் எஸ் மற்றும் யமஹா எம்டி-09 ஆகிய பைக்குகளுடன் போட்டி போடும்.

Most Read Articles
மேலும்... #டுகாட்டி #ducati
English summary
Ducati Offers Termignoni Exhaust And DQS With Monster 821. Read In Tamil.
Story first published: Tuesday, April 2, 2019, 18:09 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X