அசத்தலான புதிய மாடல் பைக்கை உலகிற்கு அறிமுகம் செய்த டுகாட்டி... பைக்கின் சிறப்பு படங்கள் உள்ளே!

டுகாட்டி நிறுவனம், அதன் புதிய அசத்தலான தோற்றத்தைக் கொண்ட ஸ்ட்ரீட்பைட்டர் வி4 பைக்கின் முன்மாதிரி மாடலை உலகிற்கு அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த சிறப்பு தகவலை இந்த பதிவில் காணலாம்.

அசத்தலான புதிய மாடல் பைக்கை உலகிற்கு அறிமுகம் செய்த டுகாட்டி... பைக்கின் சிறப்பு படங்கள் உள்ளே!

இத்தாலி நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் டுகாட்டி நிறுவனம், கடந்த சில நாட்களுக்கு முன், அதன் புதிய மாடல் ஸ்ட்ரீட்பைட்டர் வி4 மாடல் பைக் குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தது. இந்நிலையில், அந்த பைக்கின் முன்மாதிரி (Prototype) மாடலை அந்த நிறுவனம் தற்போது வெளியுலகிற்கு அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த செய்தியை பைக்வேல் ஆங்கில இணையதளம் வெளியிட்டுள்ளது.

அசத்தலான புதிய மாடல் பைக்கை உலகிற்கு அறிமுகம் செய்த டுகாட்டி... பைக்கின் சிறப்பு படங்கள் உள்ளே!

இந்த பைக்கைதான் வருகின்ற ஜூன் மாதம், டுகாட்டியின் ரேஸரான கர்லின் டுன்னே, பைக்ஸ் பீக் ஹில் க்ளிம்ப் போட்டியில் இயக்க இருக்கின்றார். இந்த நிகழ்வின்போது, "புதிய ஸ்ட்ரீபைட்டர் வி4 மாடல் பலமான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளது" என டுகாட்டி நிறுவனம் கருத்து தெரிவித்துள்ளது.

அசத்தலான புதிய மாடல் பைக்கை உலகிற்கு அறிமுகம் செய்த டுகாட்டி... பைக்கின் சிறப்பு படங்கள் உள்ளே!

டுகாட்டியின் இந்த புதிய பைக்கை மிகவும் அழகாக காட்சிக்கொடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவ்வாறு, ஸ்ட்ரீபைட்டர் வி4 மாடலின் பெட்ரோல் டேங்க், பின்பக்க டெயில் பகுதி உள்ளிட்டவை மிகவும் ரம்மியமான முறையில் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளன. அதேசமயம், இதன் டெயில் பகுதி மிகவும் அழகான மாடலாக இருக்கும் பனிகேல் மாடலின் டிசைன் தாத்பரியங்களை ஒத்ததாக இருக்கின்றது.

அசத்தலான புதிய மாடல் பைக்கை உலகிற்கு அறிமுகம் செய்த டுகாட்டி... பைக்கின் சிறப்பு படங்கள் உள்ளே!

ஆனால், இந்த பைக்குறித்த மற்ற தகவல்களை டுகாட்டி நிறுவனம், இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. இருப்பினும் இந்த பைக், அந்த நிறுவனத்தின் பனிகேல் மாடலில் இருக்கும் சில சிறப்பம்சங்களைக் கொண்டதாக வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அசத்தலான புதிய மாடல் பைக்கை உலகிற்கு அறிமுகம் செய்த டுகாட்டி... பைக்கின் சிறப்பு படங்கள் உள்ளே!

அதேசமயம், தற்போது வெளியாகியிருக்கும் புகைப்படத்தில், பனிகேலின் சஸ்பென்ஷன் அமைப்பை ஸ்ட்ரீபைட்டர் வி4 மாடல் பெறவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆகையால், சில புதிய மாற்றங்களும் இந்த புதிய பைக்கில் எதிர்பார்க்கப்படுகின்றது.

அசத்தலான புதிய மாடல் பைக்கை உலகிற்கு அறிமுகம் செய்த டுகாட்டி... பைக்கின் சிறப்பு படங்கள் உள்ளே!

டுகாட்டி ஸ்ட்ரீபைட்டர் வி4 பைக்கின் முகப்பு பகுதியில் கூர்மையான மூக்கைக் கொண்டவாறு, முன்னதாக வெளியான படங்கள் காட்சியளித்தன. அதேபோன்று, பெட்ரோல் டேங்கின் இரு பக்கவாட்டு பகுதியிலும் இறக்கைப் போன்ற அமைப்பு வழங்கப்பட்டிருந்தன. இவை, அந்த பைக்கிற்கு ஸ்போர்ட் மாடல் லுக்கினை வழங்கியது.

அசத்தலான புதிய மாடல் பைக்கை உலகிற்கு அறிமுகம் செய்த டுகாட்டி... பைக்கின் சிறப்பு படங்கள் உள்ளே!

ஆனால், இந்த பைக்கின் தயாரிப்பு மாடலில், பெட்ரோலில் வழங்கப்பட்டிருக்கும் இறக்கை அமைப்பு இடம் பெறாது என கூறப்படுகிறது. அதேபோன்று, அக்ரோபோவிக் ரேஸ் எக்சாஸ்ட், ஸ்லிக்ஸ் மற்றும் ப்ரோபர் ஹெட்லெம்ப் உள்ளிட்டவையும் மாற்றம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அசத்தலான புதிய மாடல் பைக்கை உலகிற்கு அறிமுகம் செய்த டுகாட்டி... பைக்கின் சிறப்பு படங்கள் உள்ளே!

இந்த மாற்றம் செய்யப்பட்ட மாடலின் உற்பத்தி கூடிய விரைவில் தொடங்க இருக்கின்றது. மேலும், அதனை அடுத்த வருடமே விற்பனைக்கு அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

டுகாட்டியின் இந்த பைக்கில், 1103 சிசி கொண்ட டெஸ்மோசெடிக் ஸ்டிராடேல் வி4 மோட்டார் இணைக்கப்பட உள்ளது. இதே எஞ்ஜின்தான் பனிகேல் வி4 மாடலிலும் பொருத்தப்பட்டுள்ளது.

அசத்தலான புதிய மாடல் பைக்கை உலகிற்கு அறிமுகம் செய்த டுகாட்டி... பைக்கின் சிறப்பு படங்கள் உள்ளே!

இந்த எஞ்ஜின் பனிகேல் பைக்கில் 208பிஎச்பி பவரையும், 124 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனை கொண்டதாக இருக்கின்றது. ஆனால், இந்த எஞ்ஜினை ஸ்ட்ரீபைட்டர் வி4 மாடலில், 180 முதல்190 பிஎஸ் பவரை மட்டும் வெளிப்படுத்தும் வகையில் ட்யூன்-அப் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அசத்தலான புதிய மாடல் பைக்கை உலகிற்கு அறிமுகம் செய்த டுகாட்டி... பைக்கின் சிறப்பு படங்கள் உள்ளே!

மேலும், இந்த பைக்கில் சில நவீன மற்றும் பாதுகாப்பு வசதிகளும் இணைக்கப்பட உள்ளன. அந்தவகையில், எலக்ட்ரானிக் ரைடிங் எய்ட்களான இவிஓ கார்னரிங் ஏபிஎஸ், டுகாட்டி டிராக்சன் கன்ட்ரோல், டுகாட்டியின் ஸ்லைட் கன்ட்ரோல், டுகாட்டி குயிக் ஷிஃப்ட் அப்/டவுண் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் இதில் எதிர்பார்க்கப்படுகின்றன.

ஆனால், இந்த பைக்கின் இந்திய வருகை குறித்த தகவல் இதுவரை வெளிவரவில்லை.

Most Read Articles
மேலும்... #டுகாட்டி #ducati
English summary
Ducati Streetfighter V4 Prototype Officially Revealed. Read In Tamil.
Story first published: Friday, June 14, 2019, 14:21 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X